Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
செயற்கை நுண்ணறிவு (AI) ஹோமியோபதியை பயன்படுத்தி சருமத்தை எப்படி இளமையாக வைக்கலாம் தெரியுமா?
Homeopathy With Artificial Intelligence: செயற்கை நுண்ணறிவு என்பது இப்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. உலகளவில் இந்த தொழில் நுட்பம் விரைவாக வளர்ந்து வருகிறது. வேலை பார்க்கும் இடத்தில் மட்டுமல்ல இந்த செயற்கை நுண்ணறிவு தற்போது அழகுத் துறையிலும் தன்னுடைய காலடியை பதித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு மருத்துவம் மட்டுமல்ல தற்போது எல்லாத் துறையிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த AI செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் மூலம் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை கண்டறிய முடியும். நோயின் அறிகுறிகளை கூடிய விரைவில் கண்டறிய முடியும்.

செயற்கை நுண்ணறிவு மூலம் உங்கள் சருமத்தைக் கண்காணிக்கவும், சருமப் பிரச்சினைகளை சரி செய்யவும் இனி வரும் காலத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உங்க சரும அழகை எப்படி மேம்படுத்தலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
இந்தியாவின் அழகுத் துறையில் AI தொழில் நுட்பம்
இந்தியாவில் முதல் முறையாக டாக்டர் பாத்ராஸ் ஹெல்த்கேர் ஹோமியோபதி மருத்துவத்துடன் கூடிய AI சரும சிகிச்சையைக் கொண்டு வருகிறார். இவர் தோல் பிரச்சினைகளைக் கண்டறியும் AI இயங்கு சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் கொரியாவில் இருந்து வந்துள்ள இந்த சாதனம் தோல் பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்வதோடு தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு எதிர்கால வழிமுறையாக உள்ளது.
ஹோமியோபதியுடன் AI சிகிச்சை
இந்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய AI சாதனம் தோலின் மேற்பரப்பில் தோல் பிரச்சினைகள் தோன்றுவதற்கு முன்பே கண்டறிய உதவி செய்யும். இந்த ஹோமியோபதியுடன் கூடிய AI சிகிச்சையானது முழுமையானது, பாதுகாப்பானது மற்றும் பக்க விளைவுகள் இல்லாதது. இது உங்கள் சருமத்திற்கு மேம்பட்ட சிகிச்சையை அளிக்கிறது.
சிகிச்சை முறைகள்
உங்கள் சரும பிரச்சனைகளுக்கு ஏற்ற வகையில் தனித்தனியே சிகிச்சை அளிக்க முடியும். உதாரணமாக முகப்பருக்கள் அதிகமாக இருப்பவர்களுக்கு AI ஹோமியோ கிளியர், சருமத்தில் நிறமி குறைபாடு இருப்பவர்களுக்கு AI ஹோமியோ பிரைட் சிகிச்சையும், சருமம் வயதாகுதல் பிரச்சினை இருப்பவர்களுக்கு AI ஹோமியோ யூத் சிகிச்சையும், பல்நோக்கு சிகிச்சைகளுக்கு AI ஹோமியோ ரெனியூ சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது.
ஹோமியோபதி 250 ஆண்டு பழமையான மருத்துவ முறையாகும். இந்த பழமையான மருத்துவ முறையுடன் AI இணைந்துள்ளது. எனவே இந்த AI தொழில் நுட்பம் மூலம் இனி வரும் காலங்களில் உங்கள் சரும பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விரட்ட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
AI ஸ்கின் ப்ரோ
இந்த AI இயந்திரம் பல லேசர் கேமராக்களுடன் பொருத்தப்பட்டு வருகிறது. இது முகத்தை பல கோணங்களில் படம் பிடித்து தோலின் வெளிப்புற அடுக்குகளில் ஊடுருவி தோலின் உள் அடுக்குகளில் நிறமி மற்றும் ஏதேனும் சரும பிரச்சனைகள் உருவாகுவதைக் கண்டறிய உதவுகிறது.



Click it and Unblock the Notifications