Latest Updates
-
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
பொடுகு பிரச்சனை இருக்கா? இதோ சிம்பிள் வீட்டு வைத்தியம்…!
பொடுகு என்பது நிரந்தரமாக போக கூடிய பிரச்சனை அல்ல. தலைமுடியை சுத்தமாக வைத்திருந்தாலும் இரண்டு அல்லது மூன்று நாள் உரிய பராமரிப்பு இல்லாவிட்டாலும் கூட பொடுகு வெளிப்படும். பிறகு கூந்தலை சுத்தமாக வைக்கும் போது இவை மறையக்கூடும். ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே இப்படி இருக்கும்.
அழுக்கான, பிசுபிசுப்பான முடியில் பொடுகு நிச்சயம் இருக்கும். முடியின் சுத்தமின்மை, தூசு, ஹார்மோன்கள், அதிக கெமிக்கல் ஷாம்பு போன்ற பல காரணங்களால் பொடுகு பிரச்னை வரலாம். அவற்றுக்கெல்லாம் நிரந்தர தீர்வுகள் உண்டு. உங்களது வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பொடுகை விரட்ட முடியும். வாங்க அது எப்படினு இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

1. டீ ட்ரீ எண்ணெய்
நீங்கள் தலைக்கு குளிக்கும்போது பயன்படுத்தும் ஷாம்புவில் 2 துளி டீ ட்ரீ எண்ணெய் விட்டு, உங்கள் தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும். 2 நிமிடம் கழித்து நன்கு அலசிவிடுங்கள். விரைவில் பொடுகு நீங்கும்.
2. பேக்கிங் சோடா
ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 6 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்துக் கலக்கவும். இதைத் தலைமுடி மற்றும் மண்டையில் நன்கு தேய்க்கவும். 2 நிமிடம் அப்படியே ஊறவிட்டு, வெறும் நீரால் முடியை அலசவும். ஷாம்பு பயன்படுத்த கூடாது. பூஞ்சைகள் தலையில் இருந்தால், அவற்றை நீக்கும். இப்படி வாரத்துக்கு இருமுறை செய்யுங்கள்.
3. ஆப்பிள் சிடர் வினிகர்
¼ கப் ஆப்பிள் சிடர் வினிகர் ¼ கப் தண்ணீர் இரண்டையும் ஸ்ப்ரே பாட்டிலில் கலக்கவும். நன்றாக மிக்ஸ் செய்த பின், தலைமுடி மண்டையில் ஸ்ப்ரே செய்யவும். டவலால் முடியை சுற்றி கட்டி 15 நிமிடங்கள் ஊற விடவும். முடியை நன்கு அலசிவிடுங்கள். இப்படி வாரத்துக்கு இருமுறை செய்யுங்கள்.
4. கற்றாழை
பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு குணங்களை கொண்டிருப்பதால் இது பொடுகை போக்க பயன்படுத்தலாம். கற்றாழை மடல்களை எடுத்து இரண்டாக வெட்டி மஞ்சள் நிற திரவம் நீங்கிய பிறகு அந்த ஜெல்லை மசித்து வைக்கவும். தலையை சுத்தம் செய்து ஸ்கால்ப் பகுதி முடியின் வேர்ப்பகுதி உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் வரை ஊறவிடவும். பிறகு சுத்தமான நீரில் அலசி ஷாம்பு பயன்படுத்துபவர்கள் கற்றாழை சேர்த்து தயாரித்த ஷாம்பை பயன்படுத்தவும்.
5. தேங்காய் எண்ணெய்
மிகவும் ஈஸியான தீர்வு இது. 5 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி, மண்டை, முடியின் வேர்கால்களில் தடவி, ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின்னர் ஷாம்பு போட்டு அலசுங்கள். இப்படி வாரம் 4 முறை செய்து வர பொடுகு நீங்கும்.
6. எலுமிச்சை சாறு
இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்து தலையில் நன்கு மசாஜ் செய்யுங்கள். 5 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள். பிறகு அதை தண்ணீரால் நன்கு அலசிவிடுங்கள். ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் அலசிவிடவும். இவற்றால் அப்படியே முடி மற்றும் மண்டையில் படும் படி அலசவும். பின்னர் முடியை அப்படியே விட்டு விடலாம். விரைவில் பொடுகு நீங்கும்.
7. கல்லுப்பு - கடல் உப்பு
வீட்டில் உள்ள கல்லுப்பை பொடித்துக் கொள்ளவும். அவற்றை முடியின் வேர்க்கால்கள், தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும் 5 நிமிடங்கள் ஊறவிட்டு, பின் முடியை ஷாம்பு போட்டு அலசிவிடுங்கள். இப்படி வாரம் 3 முறை செய்து வாருங்கள்.
8. ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயை முடியில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். எப்போதும் பயன்படுத்தும் ஷாம்புவை எடுத்து, நன்கு தேய்த்து, மசாஜ் செய்து அலசிவிடுங்கள்.
9. வெந்தய பேஸ்ட்
இரவு முழுவதும் வெந்தயத்தை ஊற வைக்கவும். மறுநாள் காலையில் சிறிது நீர்விட்டு அரைத்து, தலையில் பேக்காக போடவும். அரை மணி நேரம் கழித்து மிதமான ஷாம்புவால் அலசிவிடுங்கள்.
10. பூண்டு
பூண்டு தலையில் உள்ள பூஞ்சை காளான்களை நீக்கும் தன்மை கொண்டவை. பொடுகை உண்டாக்கும் நுண்ணுயிர்க்கிருமிகளை வெளியேற்றும் குணங்களை கொண்டவை. பூண்டையும் கிராம்பையும் இடித்து மைய அரைக்கவும். இதனுடன் தேன் கலந்து நன்றாக குழைத்து கூந்தல் ஸ்கால்ப் பகுதி முதல் முழுவதுமாக தடவி விடவும். 20 நிமிடங்கள் கழித்து விரல்களால் தலையில் வைத்து அலசி எடுக்கவும். பூண்டு பொடுகை நீக்குவதில் அதிக வலிமையோடு செயல்படும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை செய்யலாம்.



Click it and Unblock the Notifications