Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
உங்க முகம் ஜொலிக்க இந்த ஒரு பழம் போதும்.. வாரம் ஒருமுறை இந்த பேஸ்பேக்கை போடுங்க..!
ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவிட்டு அதன் தோலை என்ன செய்கிறோம்? தூக்கிக் குப்பையில் போட்டுவிடுவோம்.. ஆனால் இனி நீங்கள் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் அந்தத் தோலை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பயன்படுத்தி நமது முகத்தை பளபளப்பாக மாற்ற முடியும். அது எப்படி என்ற குறிப்பை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஆரஞ்சு பழத்தில் எப்படி உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளதோ, அதேபோல அதன் தோலிலும் நம் சருமத்திற்கு நன்மை பயக்கும் சில ரசாயனக் கலவைகள் உள்ளன. ஆனால் அப்படியே அந்தத் தோலை முகத்தில் தடவினால் எரிச்சலாக இருக்கும். அதற்கு முதலில் ஆரஞ்சு தோலை வெயிலில் நன்கு காய வைத்து, மிக்ஸியில் போட்டு பவுடராக்கி, ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரையும் நேரடியாக முகத்தில் தேய்க்கக்கூடாது. குறிப்பாக வாரம் இருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆரஞ்சு தோலில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது முகப்பரு மற்றும் எண்ணெய் சருமத்தை போக்க உதவும். ஆரஞ்சு தோலை பேஸ்பேக்குகளுடன் சேர்த்து பயன்படுத்தும் போது உங்களின் சருமம் புத்துணர்ச்சி பெறும். அதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அனைத்து சருமத்துக்கும் சிகிச்சையாழிக்க உதவும். ஆரஞ்சு தோலை சூரிய ஒளியில் உலர்த்தி தூளாக்கிக் கொள்ளுங்கள். அந்தத் தூளை காற்று புகாத பாட்டிலில் சேமித்து ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம்.

இந்த ஆரஞ்சு தோலைக் கொண்டு எப்படி பேஸ் பேக்குகளை செய்து முகத்திற்கு அப்பளை பண்ணுவது என்று பார்ப்போம்.
1. முதலில் ஆரஞ்சு பழ தோல் பவுடருடன் பசும்பால் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ச்சியான நீரில் முகத்தைக் கழுவினால், முகம் பளபளப்பாக மாறி, பிரகாசமாக மாறிவிடும்..
2. ஆரஞ்சு பழ பவுடரில், பால், பாதாம் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
3. சர்க்கரை, தேன் ஆகியவற்றை ஆரஞ்சு தோல் பவுடரில் சேர்த்து, முகத்தில் தடவி மசாஜ் செய்தால், முகத்தில் இறந்த செல்களை நீக்க உதவும். குறிப்பாக வறண்ட சருமம் உடையவர்கள் இதைப் பயன்படுத்தும்போது, நல்ல பலன் கிடைக்கும்.
4. அதேபோல ஆரஞ்சு பழத் தோலில் தயிரைக் கலந்து முகத்தில் தடவி வந்தாலும், சுருக்கங்கள் மறைந்து, முகத்திற்கு இயற்கையான வெண்மையைக் கொடுக்கும்.
5. முகப்பரு வராமல் தடுப்பதற்கு வேப்ப இலையை அரைத்து அதில் ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் தயிர், தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால், முகப்பருக்கள் வராது. குறிப்பாக எண்ணெய் சருமம் உடையவர்கள் இதைப் பயன்படுத்தி வரும்போது, நல்ல பலன் கிடைக்கும். ஏற்கனவே முகப்பரு வந்தவர்கள் இதை பயன்படுத்தினால் எரிச்சலாக இருக்கும். எனவே கவனமாகப் பயன்படுத்துங்கள்.
6. ஆரஞ்சு தோல் பவுடரில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் இயற்கையான தேனை சேர்த்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி வந்தால் முகம் ஜொலிக்கும். முகப்பரு உள்ளவர்கள் இந்த பேஸ் பேக்கை பயன்படுத்த வேண்டாம்.
7. ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடருடன் 1 டீஸ்பூன் சந்தனத் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் வால்நட் பொடியினை சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அதனுடன் 2 அல்லது 3 சொட்டு எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் அப்பளை பண்ணி வர, உங்களுக்கு பளபளப்பான சருமத்தை கொடுக்கும்..
8. இரண்டு தேக்கரண்டி ஆரஞ்சு பவுடருடன் சில எலுமிச்சை சாறை சேர்க்கவும். மேலும், அதனுடன் ஒரு டீஸ்பூன் முல்தானி மட்டி மற்றும் சந்தனப் பொடியைச் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி வர நீங்கள், பிரகாசமான மற்றும் புத்துணர்ச்சியான சருமத்தைப் பெற முடியும். எண்ணெய் சருமம் மற்றும் முகப்பரு உள்ளவர்களுக்கு இது சிறந்த பேஸ் பேக்காக இருக்கும்.



Click it and Unblock the Notifications