Latest Updates
-
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
அக்டோபர் 06 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் -
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
ஹோலி கலர் பொடியால் முகத்தில் ஏற்பட்ட கறை போகமாட்டீங்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
Holi Skin Care Tips In Tamil: இன்று வட இந்தியாவில் வண்ணத் திருவிழாவான ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் மக்கள் பல வண்ண நிறப் பொடிகளை நண்பர்கள், உறவினர்களின் மீது தூவி விளையாடி மகிழ்வார்கள். இந்த ஹோலி பண்டிகை வட இந்தியாவில் பிரபலமானதாக இருந்தாலும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்த பண்டிகை மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஹோலி பண்டிகையின் போது கலர் பொடிகளைத் தூவி விளையாடுவது நன்றாக இருக்கலாம். ஆனால் விளையாடி முடிந்த பின், அந்த கலர் பொடியின் நிறம் சருமத்தில் இருந்து முற்றிலும் நீண்ட ஒரு வாரம் கூட ஆகலாம். அந்த அளவில் நிறங்களானது சருமத்தில் விடாப்பிடியான கறைகளாக படிந்துவிடும்.

நீங்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி முடிந்த பின் சருமத்தில் உள்ள கலர் பொடி கறைகளை எளிதில் நீக்க விரும்பினால், கீழே ஒருசில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால், சருமத்தில் உள்ள கறைகளை எளிதில் நீக்கிவிடலாம்.
ஹோலி விளையாடும் முன் தவறாமல் செய்ய வேண்டியவை
ஹோலி விளையாடுவதற்கு முன், முதலில் சருமம் முழுவதும் எண்ணெய்களைத் தடவிக் கொள்ளுங்கள். இப்படி எண்ணெயை தடவி விட்டு விளையாடூம் போது, ஹோலி கலர் பொடியின் நிறம் சருமத்தில் ஒட்டாமல் இருக்கும் மற்றும் அவற்றை நீக்குவதற்கும் வசதியாக இருக்கும். ஏனெனில் சருமம் அதிக எண்ணெயுடன் இருந்தால், சருமத்தில் எந்த ஒரு கறையும் படியாது. முக்கியமாக சென்சிடிவ் சருமத்தைக் கொண்டவர்கள் இப்படி எண்ணெயை தடவிக் கொள்வது நல்லது. இப்போது சருமத்தில் உள்ள ஹோலி கலர் கறையைப் போக்கும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
தயிர் மற்றும் தேன் மாஸ்க்
சருமத்தில் படிந்துள்ள கலர் பொடி கறையைப் போக்க ஒரு பௌலில் சிறிது தயிரை எடுத்து, அத்துடன் 2-3 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை கறை படிந்த முகம், கை மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ள வேண்டும்.
கடலை மாவு மாஸ்க்
கடலை மாவு சருமத்தில் உள்ள அழுக்கை மட்டுமின்றி, கறைகளையும் போக்க பெரிதும் உதவி புரியும். அதற்கு ஒரு பௌலில் கடலை மாவை எடுத்து, பால் அல்லது நீரை ஊற்றி பேஸ்ட் போல் செய்து, முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கைகளை நனைத்து, சருமத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்குவதோடு, ஹோலி கறைகளும் நீங்கும்.
கற்றாழை ஜெல்
இந்தியாவின் பெரும்பாலானோரின் வீடுகளில் பொதுவாக காணப்படும் ஒரு செடி தான் கற்றாழை. இந்த கற்றாழை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டவை. குறிப்பாக கற்றாழையின் ஜெல் சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகின்றன. நீங்கள் ஹோலி விளையாடி சருமத்தில் விடாப்பிடியாக இருக்கும் கறைகளை நீக்க விரும்பினால், கற்றாழையின் ஜெல்லை சருமத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாறு மற்றும் தேன் மாஸ்க்
ஹோலி விளையாடிய பின் சருமத்தில் கலர் பொடியின் சாயம் போகாமல் அப்படியே உள்ளதா? அப்படியானால் ஒரு பௌலில் எலுமிச்சை சாற்றினை எடுத்து, அத்துடன் சிறிது தயிர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேணடும். இப்படி செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள கறைகள் நீங்கி, சருமம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
