Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
உங்க சருமம் வயதாக ஆரம்பித்து விட்டதா? அப்ப இந்த மூலிகைகளை யூஸ் பண்ணி பாருங்க...
நம் சருமம் எப்பொழுதும் இளமையாக இருக்க உதவுவதில் சரும கொலாஜன் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. கிட்டத்தட்ட நம் உடலில் 28 வகையான கொலாஜன்கள் காணப்படுகிறது. நமது உடலின் புரதத்தில் சுமார் 30 சதவீதம் கொலாஜன்கள் காணப்படுகிறது. இவை தான் நம் தசை மற்றும் எலும்பு கட்டமைப்பிற்கு உதவுகிறது. எனவே நம் சருமம் அதன் நெகிழ்வுத் தன்மையுடன் செயல்பட கொலாஜன் அவசியம்.
சருமம் அதன் நெகிழ்வுத் தன்மையை இழக்கும் போது சருமத்தில் வயதான தோற்றம் தென்படுகிறது. எனவே உங்கள் சருமம் வயதாகாமல் என்றும் இளமையாக இருக்க கொலாஜனை அதிகரிக்கும் மூலிகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வகையில் எந்த மாதிரியான மூலிகைகள் கொலாஜனை அதிகரிக்கின்றன என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

மங்குஸ்தான் பழம் (Mangosteen)
இந்த மங்குஸ்தான் பழம் பழங்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இது சரும கொலாஜனை உற்பத்தி செய்வதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இதில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் காணப்படுகிறது. இதில் வைட்டமின் சி காணப்படுகிறது. இந்த வைட்டமின் சி தான் கொலாஜன் உற்பத்தியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இதனால் நம் சருமம் உறுதியாகவும், மீள் தன்மையுடனும் இருக்கும். இந்த பழம் சருமம் சுருக்கம் இல்லாமல் செயல்பட உதவுகிறது. எனவே சருமம் என்றும் இளமையாக இருக்க நினைப்பவர்கள் மங்குஸ்தான் பழத்தை எடுத்துக் கொண்டு வரலாம்.
முருங்கை இலை
முருங்கை இலையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைத்து சிறந்த தூக்கத்தை மேம்படுத்தக் கூடியது. முருங்கை இலையில் வைட்டமின் ஏ, சி, பி, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இது சரும கொலாஜனை பாதுகாக்க உதவுகிறது உடலில் கொலாஜனை உற்பத்தி செய்யவும் உதவுகிறது. எனவே உங்கள் சருமம் என்றும் இளமையாக இருக்க முருங்கை கீரையை சாப்பிட்டு வரலாம்.
தைம் மூலிகை
தைம் மூலிகையில் ஆரஞ்சு பழத்தை விட மூன்று மடங்கு அதிகளவு வைட்டமின் சி காணப்படுகிறது. வைட்டமின் கே, இரும்புச்சத்து, கால்சியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் அதை போக்கவும் இந்த தைம் மூலிகைகளை நீங்கள் பயன்படுத்தி வரலாம். சருமம் இளமையாக இருக்கவும் இது சிறந்தது.
பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்கள், ராஸ்ப்பெர்ரி, பிளாக்பெர்ரி போன்ற பழங்களில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்டுகள் காணப்படுகிறது. இதில் வைட்டமின் சி அதிகளவில் காணப்படுகிறது. பெர்ரி பழங்களும் உங்கள் சரும ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது கொலாஜனை உற்பத்தி செய்வதில் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
சிறுகாஞ்சொறி மூலிகை
இந்த சிறுகாஞ்சொறி மூலிகையில் அதிகளவு கால்சியம், சிலிக்கா மற்றும் கந்தகம் காணப்படுகிறது. இது கொலாஜன் ஏற்பிகளை அதிகரிக்க உதவுகிறது. அதனால் தான் இந்த மூலிகையை ஷாம்பு மற்றும் சோப்பு போன்ற அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்துகின்றனர். இதில் வைட்டமின் ஏ, பி1, பி5, சி, டி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இது சருமத்தை இறுக்கமாக வைக்கவும், அரிக்கும் தோல் அழற்சியை தடுக்கவும் உதவுகிறது.
செம்பருத்தி மூலிகை
செம்பருத்தி ஒரு சூப்பர் ஃபுட் மூலிகை ஆகும். இது ஆன்டி ஏஜிங் டோனராக செயல்படுகிறது. இதிலுள்ள ஆல்ஃபா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது ஒரு சிறந்த இயற்கை எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படுகிறது. இது சருமத்தை மென்மையாக வைக்க உதவி செய்யும்.
காமு காமு பழம்
இந்த காமு காமு பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட 60 மடங்கு வைட்டமின் சி காணப்படுகிறது. இந்த காமு காமு பழம் நிறத்திட்டுக்களை எதிர்த்து போராட உதவுகிறது. இதிலுள்ள ஃப்ளாவனாய்டுகள் சரும சுருக்கங்கள் மற்றும் சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இந்த காமு காமு பழம் வறண்ட சருமத்திற்கு எதிராக செயல்படுகிறது.



Click it and Unblock the Notifications
