Just In
- 4 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 5 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 14 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 16 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
Don't Miss
- News
உன் ’அந்த’ போட்டோஸ் எங்ககிட்ட இருக்கு! வெளிய விடவா? ஆப்பு வைக்கும் லோன் ஆப்கள்! தப்பிப்பது எப்படி?
- Finance
3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் கணிப்பு..!
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Movies
ரோஜா சீரியலில் இருந்து ரசிகர்களின் ஃபேவரைட் 'அர்ஜுன் சார்' சிபு சூரியன் விலகல்...கவலையில் ரசிகர்கள்
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதி.. இங்கிலாந்து தொடரில் அடுத்தடுத்த சர்ச்சை.. எப்படி பரவியது??
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த ஹேர் மாஸ்க்கை மட்டும் நைட் உங்க தலையில யூஸ் பண்ணுனீங்கனா... உங்களுக்கு முடி கொட்டவே கொட்டாதாம்!
முடி உதிர்தல் பிரச்சனையை நாம் அனைவரும் எதிர்கொண்டிருக்கிறோம். கடுமையானதாக இருந்தாலும் அல்லது லேசானதாக இருந்தாலும், இது ஒரு தனிநபரின் வெளிப்புறத் தோற்றத்தையும் நம்பிக்கை அளவையும் பெரிதும் பாதிக்கும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பொதுவானது, மரபணுக்கள், ஹார்மோன்கள், உணவுமுறை, சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற பல காரணிகள் முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தலைமுடி பிரச்சனை உள்ளது. முடி உதிர்தல், முடி வலுவிழந்து காணப்படுவது, வழுக்கை, நரை முடி போன்ற பிரச்சனைகளை இளைஞர்கள் பெரும்பாலும் அனுபவித்து வருகிறார்கள்.
தற்போது, இதற்கு இயற்கை முறையிலான தீர்வுகளையே மக்கள் விரும்புகிறார்கள். வீட்டு வைத்தியம் மூலம் இழந்த உங்கள் அழகான கூந்தலை மீண்டும் பெற முடியும். முடி உதிர்தல் பிரச்சனைக்கு மிகவும் மலிவான முறையில் சிகிச்சை அளிக்கும் அற்புதமான எளிதான வழியை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
வெங்காய சாறு, தேன் மற்றும் லாவெண்டர் இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி ஹேர் பேக்கை உங்கள் தலைமுடியில் பயன்படுத்துவதுதான் நீங்கள் செய்ய வேண்டியது.
பொருட்கள்:
ஒரு வெங்காயத்தின் புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட சாறு
பச்சை தேன் 2 தேக்கரண்டி
லாவெண்டர் எண்ணெய் 3-4 சொட்டுகள்

ஹேர் பேக் செய்வதற்கான வழிமுறைகள்
முதலில் வெங்காயத்தை உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். பிறகு, அதை ஒரு ஜூஸரில் கலக்கவும். சாறு பிரித்தெடுத்த பிறகு, அதில் தேன் மற்றும் லாவெண்டரை சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும். கலவையை தலைமுடி மற்றும் உச்சந்தலை முழுவதும் தடவவும். அதை மறைக்க ஷவர் கேப் பயன்படுத்தவும். அது ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் உங்கள் முடியை லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தி அலசவும்

பரிசோதனை
ஒரே இரவு முழுவதும் பேக்கை விட்டுவிடுவது உங்களுக்கு வசதியாக இல்லை என்றால், அதைக் கழுவுவதற்கு முன் குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் உங்கள் உச்சந்தலையில் இருக்கட்டும். மேலும், இந்த பேக்கிற்கு உங்கள் தலைமுடி எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை முதலில் சரிபார்க்க வேண்டியது அவசியம். எதுவும் தவறாக நடக்கவில்லை என்றால், உடனடி, விரும்பத்தக்க முடிவுகளுக்கு வாரத்திற்கு இரண்டு முறை ஒரே இரவில் இந்த பேக்கைப் பயன்படுத்துங்கள். இந்த எளிய ஹோம்மேட் பேக்கை முயற்சித்துப் பாருங்கள் மற்றும் மாற்றத்தை நீங்களே தெரிந்துகொள்ளலாம்.

வெங்காயத்தின் நன்மைகள்
முடி உதிர்தல் போன்ற ஒரு பெரிய பிரச்சனையை சமாளிக்கும் போது, வெங்காயம் குறிப்பாக பயனுள்ளதாக கருதப்படுகிறது. வெங்காயம் சல்பர் கொண்ட சேர்மங்களின் சிறந்த மூலமாகும். இது முடி வளர்ச்சியைத் தூண்டுவதாக அறியப்படுகிறது. மேலும், வெங்காயத்தில் உள்ள மற்ற சேர்மங்கள், முடிக்கு கெரட்டின் உருவாவதற்கு சிறந்தவை.

தேனின் நன்மைகள்
தேன் மென்மையாக்கும் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த முடி மாய்ஸ்சரைசராக அமைகிறது. எமோலியண்ட்ஸ் முடியின் வேர்களை மென்மையாக்குகிறது. மந்தமான முடிக்கு பிரகாசத்தை சேர்க்கிறது. ஈரப்பதம் நீர் மூலக்கூறுகளுடன் பிணைக்கிறது. உலர்ந்த முடிகளுக்கு ஈரப்பதத்தை சேர்க்கிறது. ஈரப்பதம் மற்றும் பளபளப்பை பூட்டுவதன் மூலம், தேன் உங்கள் முடியின் இயற்கையான பிரகாசத்தை மீட்டெடுக்க உதவும்.

ஹேர் மாஸ்கின் நன்மைகள்
இந்த ஹேர் மாஸ்க்கில் வெங்காயத்தை பச்சை தேனுடன் இணைக்கும்போது, நீங்கள் எப்போதும் விரும்பியதைப் போலவே முடிவுகள் உங்களுக்கு கிடைக்கும். இந்த பேக் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் உங்கள் தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. மேலும் லாவெண்டர் எண்ணெயைச் சேர்ப்பது வெங்காயத்தின் கடுமையான வாசனையைக் குறைத்து, உங்கள் தலைமுடியை மென்மையாகவும் பட்டுப் போலவும் மாற்றும்.