For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க நரை முடியை போக்கவும் நீளமான பளபளப்பான கூந்தலை பெறவும் உருளைக்கிழங்கை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?

உருளைக்கிழங்கு சாறு மற்றும் அரிசி கலந்த நீரில் உங்கள் முடியை அலசுவதன் மூலம் உங்கள் உச்சந்தலை மற்றும் முடியில் உள்ள அதிகப்படியான எண்ணெயை அகற்றலாம்.

|

சமீபத்திய ஆண்டுகளில் ஆரோக்கியமான முடியைப் பராமரிப்பது என்பது மிகவும் கடினமாகி வருகிறது. இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான முடியைப் பராமரிக்க சிறந்த வழி. இது எந்த பக்கவிளைவையும் சேதத்தையும் ஏற்படுத்தாமல் நேர்மறையான முடிவுகளை அளிக்கிறது. கூடுதலாக, அதிகப்படியான இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதை விட, கிட்டத்தட்ட அனைத்து முடி பிரச்சனைகளையும் குணப்படுத்தும் ஒரு தீர்வில் கவனம் செலுத்துவது சிறந்தது, இல்லையா? அந்த வகையில், உருளைக்கிழங்கு சாறு எந்த ஒரு முடி பிரச்சனைக்கும் சிறந்த இயற்கை வைத்தியமாக இருக்கிறது.

Potato Juice For Hair: Benefits And How To Use It in tamil

உருளைக்கிழங்கு கூந்தல் பராமரிப்புக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் மாவுச்சத்தை வழங்குகிறது. மற்ற பொருட்களுடன் கலக்கும்போது, மற்ற முடி பிரச்சனைகளை சமாளிக்கும் போது அவை சிறந்த முடிவுகளை அளிக்கின்றன. இந்த கட்டுரையில், முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் எதிர்த்துப் போராட உருளைக்கிழங்கு சாற்றைப் பயன்படுத்துவதற்கான சில வழிகளைப் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடிக்கு உருளைக்கிழங்கு சாறு நல்லதா?

முடிக்கு உருளைக்கிழங்கு சாறு நல்லதா?

உருளைக்கிழங்கு சாற்றில் அதிக மாவுச்சத்து இருப்பதால், உங்கள் தலைமுடியில் உள்ள அதிகப்படியான எண்ணெயை அகற்றலாம், அத்துடன் ப்ளீச்சிங் பண்புகளும் உங்கள் தலைமுடியை சாயமிடுவதற்கு அல்லது ஒளிரச் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். மறுபுறம், உருளைக்கிழங்கு சாறு மலிவானது மற்றும் எளிதில் உங்களால் தயாரிக்க முடியும். ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று முறை இதை பயன்படுத்தலாம். வேர்களை வலுப்படுத்தவும், உங்கள் முடியின் அளவை அதிகரிக்கவும் உங்கள் தலைமுடியில் மூல உருளைக்கிழங்கு சாற்றைப் பயன்படுத்தலாம்.

உருளைக்கிழங்கு சாற்றின் நன்மைகள்

உருளைக்கிழங்கு சாற்றின் நன்மைகள்

உங்கள் உச்சந்தலையில் உருளைக்கிழங்கு சாற்றைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான pH அளவைப் பராமரிக்கவும், உங்கள் உச்சந்தலையைச் சுத்தம் செய்யவும், ஊட்டமளிக்கவும், பொடுகு மற்றும் பிற பூஞ்சை பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவும். பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதோடு மட்டுமல்லாமல், உருளைக்கிழங்கு உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் உதவுகிறது.

கொலாஜனை அதிகரிக்கிறது

கொலாஜனை அதிகரிக்கிறது

உருளைக்கிழங்கு சாறு கொலாஜனை மீட்டெடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முடியின் சரியான வளர்ச்சிக்கு அவசியம். கொலாஜன் என்பது முடியின் கட்டுமானப் பொருளாகும். முடி விரைவாக வளர இந்த புரதம் மிகவும் அவசியமாகும். மேலும், உருளைக்கிழங்கு சாறு மயிர்க்கால் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, முடி உதிர்வதைத் தடுக்கிறது மற்றும் நுண்ணறைகளுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. உருளைக்கிழங்கில் உள்ள கலவைகள் முடி இழைகளை வலுப்படுத்த ஆக்ஸிஜனுடன் பிணைக்கிறது. இதனால் முடி உதிர்வதைத் தடுக்கிறது.

முடி வளர்ச்சிக்கு உதவுகிறது

முடி வளர்ச்சிக்கு உதவுகிறது

உங்கள் கூந்தல் மிகவும் மெலிந்ததாக இருக்கிறதா? அப்படியென்றால், உருளைக்கிழங்கு சாறு இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வுகளில் ஒன்றாகும். இந்த ஆரோக்கியமான காய்கறி சாற்றை உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் போல தடவி, வெதுவெதுப்பான நீரில் நன்கு அலச வேண்டும். இந்த சாற்றில் உள்ள பண்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். சிறந்த பலன்களுக்கு, இந்த தீர்வை மாதத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

முடி உதிர்தலை தடுக்கிறது

முடி உதிர்தலை தடுக்கிறது

உருளைக்கிழங்கு சாறு முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. 50 மில்லி உருளைக்கிழங்கு சாறு 10 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் 5 மில்லி ஆலிவ் எண்ணெய் கலந்து கலவையை உருவாக்க வேண்டும். இந்த சாற்றை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி, 15 நிமிடங்களுக்கு உங்கள் தலையை சூடான துண்டுடன் போர்த்தி விடுங்கள். பின்னர், முடியை ஷாம்பு கொண்டு அலசுங்கள்.

உலர்ந்த கூந்தலுக்கு சிகிச்சையளிக்க உதவும்

உலர்ந்த கூந்தலுக்கு சிகிச்சையளிக்க உதவும்

உலர் முடிக்கு உருளைக்கிழங்கு சாறு உதவியுடன் சிகிச்சை அளிக்கலாம். 50 மில்லி உருளைக்கிழங்கு சாற்றில், 9 மில்லி கற்றாழை ஜெல் சேர்க்கவும். பொருட்களைக் கலந்து, உச்சந்தலையில் இருந்து நுனிகள் வரை எண்ணெய் போல உங்கள் தலைமுடி முழுவதும் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முடியை அலச வேண்டும்.

எண்ணெய் பசையுள்ள உச்சந்தலைக்கு சிகிச்சை அளிக்கும்

எண்ணெய் பசையுள்ள உச்சந்தலைக்கு சிகிச்சை அளிக்கும்

உருளைக்கிழங்கு சாறு மற்றும் அரிசி கலந்த நீரில் உங்கள் முடியை அலசுவதன் மூலம் உங்கள் உச்சந்தலை மற்றும் முடியில் உள்ள அதிகப்படியான எண்ணெயை அகற்றலாம். இந்த இரண்டு பொருட்களிலும் உள்ள ஸ்டார்ச் உங்கள் தலைமுடியை சுத்தம் செய்ய உதவும்.

நரை முடியை போக்க உதவுகிறது

நரை முடியை போக்க உதவுகிறது

நரை முடியை மறைக்க உருளைக்கிழங்கு சாறு உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? காய்கறியில் உள்ள மாவுச்சத்து இயற்கையான நிறமாக செயல்படுகிறது, மேலும் பல நூற்றாண்டுகளாக உருளைக்கிழங்கு துணிகளுக்கு சாய மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து பயன்படுத்தினால், நரை முடியை மிகவும் திறம்பட கருமையாக்கும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்கள் தலைமுடியில் உருளைக்கிழங்கு சாற்றைப் பயன்படுத்தவும். 3 வாரங்களில் உங்கள் முடி நிறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் கவனிப்பீர்கள். இந்த வீட்டு வைத்தியம் உங்கள் தலைமுடியை மென்மையாக்கவும் உதவும்.

முடிக்கு உருளைக்கிழங்கு சாறு செய்வது எப்படி?

முடிக்கு உருளைக்கிழங்கு சாறு செய்வது எப்படி?

நடுத்தர அளவிலான உருளைக்கிழங்கை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். பின்னர், உருளைக்கிழங்கை நன்றாக அரைக்கவும். ஈரமான துணியைப் பயன்படுத்தி, அரைத்த உருளைக்கிழங்கிலிருந்து சாற்றை பிழியவும். ஒரு கொள்கலனில், அந்த சாற்றை சேகரிக்கவும். உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியின் நீளத்திற்கு தடவுவதற்கு ஒரு காட்டன் பேடைப் பயன்படுத்தவும். சிறிது நேரம் கழித்து உங்கள் முடியை அலசினால், நல்ல பலனை பெறுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Potato Juice For Hair: Benefits And How To Use It in tamil

Here we are talking about the Potato Juice For Hair: Benefits And How To Use It in tamil.
Story first published: Wednesday, February 1, 2023, 19:37 [IST]
Desktop Bottom Promotion