For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த காயோட எண்ணெயை ஒரு முறை யூஸ் பண்ணா போதும், எல்லாவித கூந்தல் பிரச்சனையும் சரியாகிடும்…

கேரட் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்தியவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த கூந்தலை பெற்றதோடு அல்லாமல், கூந்தல் பாதிப்பு குறைந்து, துரிதமான கூந்தல் வளர்ச்சியை பெற்றிருக்கின்றனர்.

|

பெண், ஆண் யாராக இருந்தாலும் அவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தக்கூடிய ஒரு விஷயம் என்றால், அது முடி உதிர்வு தான். சிறு வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனைகளை பலர் சந்திக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாசடைந்த இன்றைய சூழல் தான் காரணம். இருப்பினும், அதனை சரிசெய்வதற்காக, தெரிந்தவர், தெரியாதவர் என யார் அறிவுரை கூறினாலும் அதனை கண்ணை மூடிக் கொண்டு முயற்சிப்பவர்கள் இருக்க தான் செய்கின்றனர். அப்படி, தெரியாமல் உபயோகிக்கும் சில பொருட்கள் கூட ஒருவருடைய கூந்தலை மேலும் பாதிக்கக் கூடும்.

How To Use Carrot Oil For Hair Fall

பெரும்பாலானோர், செயற்கை கூந்தல் பராமரிப்பு பொருட்களையே நம்புகின்றனர். ஆனால், ஒருவருடைய கூந்தல் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது, எது உபயோகித்தால் அது சரியாகும், என்பதை குறித்து நன்கு ஆராய்ந்த பின்னர் தான் புதிதாக ஒன்றை முயற்சிக்க வேண்டும். தினந்தோறும் ஷாம்பு போட்டு குளிப்பதை எந்த மருத்துவரும் பரிந்துரைப்பது கிடையாது. ஆனாலும், ஒரு சிலர் தினந்தோறும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்க தான் செய்கின்றனர். இருப்பினும் அவர்களது கூந்தலுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதற்காக எல்லாருக்கும் அப்படி இருக்கும் என்று கூறி விட முடியாது அல்லவா?

MOST READ: பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் உள்ளதா? அதை வெள்ளையாக்க இதோ சில வழிகள்!

அதனால் தான் அனைத்து வகையான கூந்தல் பிரச்சனைக்கும் உதவக் கூடிய ஒரு இயற்கை எண்ணெயைப் பற்றி தற்போது தெரிந்து கொள்ள போகிறோம். அதுவும் ஒரு வகை காயில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் என்பதால், ஏராளமான ஆரோக்கியமான நன்மைகளை தரக்கூடும். வாருங்கள் இப்போது அந்த எண்ணெய் பற்றி சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேரட் எண்ணெய் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

கேரட் எண்ணெய் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் போல கேரட் எண்ணெய் வழக்கத்தில் இருப்பது தான். ஆனால், பொதுவாகவே அவை குறைந்த அளவில் உபயோகிக்கப்படுவதால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்காக அதனை குறைத்து மதிப்பிடவும் முடியாது. மார்க்கெட்டிலும் இது அவ்வளவு சுலபமாக கிடைத்துவிடாது என்பதால், பலர் இதனை வீடுகளிலேயே தயாரித்து உபயோகிக்கின்றனர். கேரட் எண்ணெய் தயாரிப்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு முன்பு, அதனை உபயோகிப்பதால் கூந்தலுக்கு கிடைக்கக்கூடிய பலன்களை பற்றி அறிந்து கொள்வோம்.

எதற்காக கேரட் எண்ணெய் கூந்தலுக்கு உபயோகிக்கப்படுகிறது?

எதற்காக கேரட் எண்ணெய் கூந்தலுக்கு உபயோகிக்கப்படுகிறது?

கேரட்டில் ஏராளமான அவசியமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் என பல உள்ளன. இவை அனைத்துமே கூந்தலுக்கு மிகுந்த நன்மை அளிக்கக்கூடியவை. கூந்தல் பிரச்சனைக்கான காரணத்தை கண்டறிந்து, அதனை சரிசெய்து, கூந்தல் பிரச்சனைக்கு முற்றிப்புள்ளி வைத்து விடும். இந்த கேரட் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்தியவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த கூந்தலை பெற்றதோடு அல்லாமல், கூந்தல் பாதிப்பு குறைந்து, துரிதமான கூந்தல் வளர்ச்சியை பெற்றிருக்கின்றனர். மேலும், கூந்தல் உதிர்வு முற்றிலும் நின்று, மிருதுவான கூந்தலை பெறுகின்றனர். அதற்காக இதனை தினந்தோறும் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் இல்லை. இதனை பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

கேரட் எண்ணெயின் நன்மைகள்:

கேரட் எண்ணெயின் நன்மைகள்:

முடி உதிர்வை கட்டுப்படுத்தும்

கேரட் எண்ணெயானது, கூந்தலை அதன் வேரிலிருந்து வலுப்படுத்தக்கூடியது. வலுவான வேர்களை உருவாக்கி, கூந்தல் உதிர்வினை தடுத்திடும். இதனால், முடி உதிர்வு முதல் கூந்தல் இழப்பு வரை அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்திடலாம்.

ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்திடும்

ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்திடும்

இந்த எண்ணெயை முடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து, நன்கு மசாஜ் செய்யவும். இதனால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். எனவே, முடியானது வேரிலிருந்தே ஆரோக்கியமாக இருக்கும். இந்த எண்ணெயுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து உபயோகித்தால் சிறந்த பலனை பெற்றிடலாம்.

வெளிப்புற பாதிப்பில் இருந்து கூந்தலை காக்கும்

வெளிப்புற பாதிப்பில் இருந்து கூந்தலை காக்கும்

வெளிப்புற காரணிகள், அதாவது தூசு, மாசு, அழுக்கு மற்றும் புற ஊதா கதிர்கள் போன்றவை கூந்தலை அதிகமாக பாதிக்கக்கூடும். கேரட் எண்ணெயில் இருந்து ஊட்டச்சத்துக்கள் பாதுகாப்பு திறன் கொண்டதால், இதுப்போன்ற வெளிப்புற பாதிப்பிலிருந்து கூந்தலை காத்திடும்.

கூந்தல் அமைப்பை மேம்படுத்திடும்

கூந்தல் அமைப்பை மேம்படுத்திடும்

மற்ற கூந்தலை பிரச்சனைகளை சரி செய்வது மட்டுமின்றி, இந்த எண்ணெய் கூந்தலின் அமைப்பையே மாற்றக்கூடும். வறண்ட, பொலிவிழந்த கூந்தலை கூட, இது மிருதுவானதாக, பொலிவுமிக்கதாக மாற்றிடும். கூந்தலுக்கு கேரட் எண்ணெய் பயன்படுத்தினால், அடர்த்தியான கூந்தலையும், வெடிப்புகள் இல்லாத கூந்தலையும் கூட பெற்றிடலாம். கேரட்டை போலவே, மாம்பழமும் கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கு சிறந்தது.

பொடுகு தொல்லை மற்றும் ஸ்கால்ப் தொற்றை போக்கிடும்

பொடுகு தொல்லை மற்றும் ஸ்கால்ப் தொற்றை போக்கிடும்

கேரட் எண்ணெயை கொண்டு ஸ்கால்ப்பை தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம், பொடுகு தொல்லை மற்றும் பிற ஸ்கால்ப் தொற்றுகளில் இருந்தும் காத்திடலாம். ஏனென்றால், கேரட் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், அவை பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளை அகற்றிடுவதோடு, வறண்ட ஸ்கால்ப் மற்றும் பிற பூஞ்சை தொற்று பிரச்சனைகளையும் விரட்டிடும்.

கேரட் எண்ணெயை உபயோகிக்கும் முறை

கேரட் எண்ணெயை உபயோகிக்கும் முறை

பிற எண்ணெய்களைப் போலவே, கேரட் எண்ணெயையும் நேரடியாக தலையில் உபயோகிக்கலாம் அல்து கேரட் எண்ணெயுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்த நீரை கொண்டு கூந்தலை அலசலாம்.

இதிலிருக்கும் ஒரு முக்கிமான விஷயம் என்னவென்றால், இந்த எண்ணெயை அளவிற்கு அதிகமாக உபயோகித்து விடக்கூடாது. அதிக அளவில் அடிக்கடி இந்த எண்ணெயை உபயோகித்தால், கூந்தலின் நிறம் மாறக்கூடும். இது தான் இதிலிருக்கும் ஒரே குறைபாடு.

குறிப்பாக, ஹேர் கலரிங் செய்தவர்கள், இந்த எண்ணெயை வாரத்தில் ஒரு முறைக்கு மேல் உபயோகிக்க வேண்டாம். அப்படி செய்தால், கூந்தலின் நிறத்தை இழக்க நேரிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Carrot Oil For Hair Fall

Want to know how to use carrot oil for hair fall? Read on...
Desktop Bottom Promotion