Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
கொரோனாவால் தலைமுடி ரொம்ப கொட்டுதா? இதோ அதைத் தடுக்கும் சில வழிகள்!
கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்த பின், ஏராளமானோர் தலைமுடி உதிரும் பிரச்சனையை அதிகம் சந்திக்கிறார்கள். முக்கியமாக கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் பலர், தங்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டுவதாக புகாரளிக்கிறார்கள்.
ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே சந்திக்கும் மிகவும் பொதுவான பிரச்சனை தான் தலைமுடி உதிர்வு. தலைமுடி பிரச்சனைகளானது நாம் உண்ணும் உணவு, வாழ்க்கை முறை மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளுடன் நேரடி தொடர்புடையவை. மேலும் இது ஒருவர் அதிக மன அழுத்தத்தில் இருப்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம். கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்த பின், ஏராளமானோர் தலைமுடி உதிரும் பிரச்சனையை அதிகம் சந்திக்கிறார்கள். முக்கியமாக கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் பலர், தங்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டுவதாக புகாரளிக்கிறார்கள்.

ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில எளிய வீட்டு வைத்தியங்களை கீழே கொடுத்துள்ளது. இந்த வைத்தியங்களை பின்பற்றினால், தலைமுடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். சரி வாருங்கள், அந்த வைத்தியங்கள் என்னவென்பதைப் பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் உள்ள பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து, தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, தலைமுடி உதிர்வதையும் குறைக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் ஒரு மணிநேரம் கழித்தோ அல்லது ஒரு இரவு முழுவதும் ஊற வைத்த பின்போ தலைமுடியை அலசலாம்.

வெங்காய சாறு
வெங்காய சாற்றினை தலைச்சருமம் மற்றும் தலைமுடியில் தடவினால், அதில் உள்ள வளமான அளவிலான சல்பர் தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும். அதற்கு வெங்காய சாற்றினை தலையில் தடவி நன்கு ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க வெங்காய சாறுடன் தேனை சேர்த்துக் கொள்ளலாம்.

முட்டை
முட்டையில் சல்பர், அயோடின், ஜிங்க், புரோட்டீன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அற்புதமான பொருட்கள் உள்ளன. இவை தலைமுடி உதிர்வதைத் தடுக்க உதவும். அதற்கு ஒரு முட்டையை பௌலில் உடைத்து ஊற்றி, அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

நெல்லிக்காய்
வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் நிறைந்த நெல்லிக்காய், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதற்கு நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுவது மட்டுமல்லாமல், நெல்லிக்காய் சாற்றுடன், எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, தலையில் தடவி நன்கு காய்ந்த பின், வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

ஹென்னா/மருதாணி
மருதாணியில் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் சத்துக்கள் உள்ளது. எனவே தலைமுடி ஆரோக்கியமாகவும், உதிராமலும் இருக்க வேண்டுமானால், தலைக்கு மருதாணியைப் பயன்படுத்துங்கள். அதற்கு மருதாணியின் இலைகளை நன்கு மென்மையாக அரைத்தோ அல்லது ஹென்னா பவுடரையோ நீரில் பேஸ்ட் போல் கலந்தோ, தலையில் தடவி நன்கு காய்ந்த பின், தலைமுடியை நீரில் அலச வேண்டும்.

கற்றாழை
கற்றாழை தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, தலைமுடியின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். அதற்கு கற்றாழையின் ஜெல்லை எடுத்து, தலைச்சருமம் மற்றும் முடியில் தடவி குறைந்தது 45 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வெந்தய விதைகள்
வெந்தயம் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்து, தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவி புரியும். அதற்கு வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நன்கு அரைத்து, தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு எதுவும் பயன்படுத்தாமல் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை என ஒரு மாதத்திற்கு பின்பற்றி வந்தால், தலைமுடி உதிர்வது கட்டுப்படும்.

தேங்காய் பால்
தேங்காய் பாலில் உள்ள புரோட்டீன், அத்தியாவசிய கொழுப்புக்கள் தலைமுடி உதிர்வதைக் கட்டுப்படுத்துவதுடன், முடி உடைவதைக் குறைக்கும் மற்றும் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதற்கு தேங்காயை நீர் ஊற்றி அரைத்து, வடிகட்டி பால் எடுத்து, தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20-30 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை நீரில் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம், கால்சியம், கார்போஹைட்ரேட், புரோட்டீன், பாஸ்பரஸ் போன்ற தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. மேலும் இது தலைமுடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும் ஒரு அற்புதமான பொருளும் கூட. அதற்கு தினமும் பீட்ரூட்டை அன்றாட உணவில் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் சிறிது பீட்ரூட் இலைகளை ஒரு கப் நீரில் போட்டு, நீர் பாதியாக குறையும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, பின் அந்த இலையை அரைத்து, அத்துடன் ஹென்னா பவுடரை சேர்த்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், தலைமுடி உதிர்வது கட்டுப்படும் மற்றும் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications