Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..
ஹென்னா போட்ட பின் முடி ரொம்ப வறண்டு போகுதா? இந்த ஹேர் மாஸ்க்குகளைப் போடுங்க...
ஒருவரது தலைமுடி அதிகம் வறண்டு போகிறது என்றால், அதற்கு காரணம் தரம் குறைவான ஹென்னா தான். ஆனால் ஹென்னாவை பயன்படுத்திய பின் சந்திக்கும் முடி வறட்சியைத் தடுக்க சில ஹேர் மாஸ்க்குகள் உள்ளன.
நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் காலத்திற்கு ஏற்ப மாறி வருவதால், நமது ஆரோக்கியம் மற்றும் அழகிலும் அதன் தாக்கம் இருந்து வருகிறது. முன்பெல்லாம் வெள்ளை முடி முதுமையின் அடையாளமாக இருந்தது. ஆனால் தற்போது மாசுபாடு, உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையினால், இளம் வளதிலேயே நரை முடி வந்துவிடுகிறது. இந்த நரை முடியை மறைப்பதற்கு வேறு வழியின்றி ஹேர்-டை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இருப்பினும், இந்த ஹேர்-டையில் உள்ள கெமிக்கல்கள் நமது முடியின் வலிமையை இழக்கச் செய்வதோடு, கண்கள் மற்றும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.

எனவே பலர் ஹென்னா அல்லது மருதாணியை தங்களின் தலைமுடிக்கு பயன்படுத்தி வருகிறார்கள். ஹென்னா நமது முடிக்கு நல்ல நிறத்தைத் தருவதோடு, முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. ஆனால் சில சமயங்களில் ஹென்னாவை பயன்படுத்திய பின், தலைமுடி அதிகம் வறண்டு போவதைக் காணலாம். ஆனால் ஒருவரது தலைமுடி அதிகம் வறண்டு போகிறது என்றால், அதற்கு காரணம் தரம் குறைவான ஹென்னா தான். ஆனால் ஹென்னாவை பயன்படுத்திய பின் சந்திக்கும் முடி வறட்சியைத் தடுக்க சில ஹேர் மாஸ்க்குகள் உள்ளன. அந்த ஹேர் மாஸ்க்குகள் என்னவென்பதை இப்போது காண்போம்.

நெல்லிக்காய்
தலைக்கு ஹென்னா பயன்படுத்திய பின் ஏற்படும் முடி வறட்சியைத் தடுக்க, ஹென்னா பேஸ்ட் தயாரிக்கும் போது, அத்துடன் 1 டீஸ்பூன் நெலிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவுங்கள். இதனால் தலைமுடி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருப்பதோடு, நன்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தயிர் ஹேர் மாஸ்க்
நீங்கள் பொடுகுத் தொல்லையுடன், முடி வறட்சி பிரச்சனையாலும் அவதிப்படுகிறீர்கள் என்றால், ஹென்னாவை தலைக்கு பயன்படுத்திய பின் தயிர் ஹேர் மாஸ்க்கைப் போடுங்கள். அதற்கு ஒரு பௌல் தயிரில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

வாழைப்பழ ஹேர் மாஸ்க்
ஊட்டச்சத்து நிறைந்த வாழைப்பழம் தலைமுடிக்கு மிகவும் நல்லது. அதற்கு நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை ஹென்னா பயன்படுத்திய தலைமுடியில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

முட்டை ஹேர் மாஸ்க்
முட்டை தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான புரோட்டீன் நிறைந்த பொருள். அதோடு இது தலைமுடிக்கு நல்ல தோற்றத்தையும் தரக்கூடியது. தலைக்கு ஹென்னாவை போட்ட பின்னர், இந்த முட்டையைக் கொண்டு மாஸ்க் போட்டால் முடி வறட்சி நீங்கும். இந்த முட்டை ஹேர் மாஸ்க் போடுவதற்கு, ஒரு முட்டையின் வெள்ளைக்கருவுடன், தேன், எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.



Click it and Unblock the Notifications
