Latest Updates
-
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா?
இந்த உணவுகளை சாப்பிட்டா முடி அதிகமா கொட்டி சீக்கிரம் வழுக்கை வந்துடுமாம்..
நிபுணர்களின் கூற்றுப்படி, நாம் உண்ணும் சில உணவுப பொருட்கள் தலைமுடி உதிர்வதை அதிகரிக்கும். கீழே தலைமுடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமானால் எந்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று உடல் பருமன் பிரச்சனைக்கு அடுத்தப்படியாக பலரும் வருத்தப்படுவது தலைமுடி உதிர்வதை நினைத்து தான். ஏனெனில் இன்றைய தலைமுறையினர் அதிக தலைமுடி உதிர்வால் இளம் வயதிலேயே வழுக்கை தலை பிரச்சனையை சந்திக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம், மருந்துகள் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவை ஆகும். இதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்களும் தலைமுடி அதிகம் உதிர்வதற்கு முக்கிய காரணங்களாகும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, நாம் உண்ணும் சில உணவுப பொருட்கள் தலைமுடி உதிர்வதை அதிகரிக்கும். கீழே தலைமுடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமானால் எந்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகள்
சர்க்கரை உடலில் குறிப்பாக உச்சந்தலையில் உள்ள பாக்டீரியாக்களுக்கு ஊட்டமளிக்கிறது. ஆகவே தான் இனிப்பான உணவுகளை உண்ணும் போது, அது பொடுகு, சருமம் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. முக்கியமாக சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை உண்பது தலைமுடியை பலவீனப்படுத்தி, தலைமுடி உதிர்தலை அதிகரிக்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
தலைமுடி அதிகமாக உதிர்ந்தால், உடனே பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதை முற்றிலும் நிறுத்துங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள செயற்கை பொருட்கள், மயிர்கால்களை பலவீனப்படுத்துகிறது. மேலும் இந்த வகை உணவுகளில் உப்பு மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. எனவே உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். இதனால் இவற்றில் உள்ள நார்ச்சத்து மயிர்கால்களை வலுப்படுத்தி, முடி உதிர்வதை தடுக்கும்.

ஆல்கஹால்
இன்று ஆல்கஹால் அருந்துவது ஃபேஷனாகிவிட்டது. ஆல்கஹால் மயிர்கால்களை சேதப்படுத்துவதோடு, உலர வைக்கிறது. இதன் விளைவாக முடி வலுவிழந்து உடைய ஆரம்பிக்கிறது. இது தவிர, ஆல்கஹால் முகப்பரு பிரச்சனையையும் சந்திக்க வைக்கிறது.

பால் பொருட்கள்
பாலில் கேசீன் உள்ளது. இது ஒரு வகையான புரோட்டீன். இது மயிர்கால்களை உலர செய்வதோடு, மெல்லியதாக மாற்றுகிறது. தயிர் மற்றும் சீஸ் ஆகியவற்றிலும் இந்த புரோட்டீன் உளளது. எனவே உங்களுக்கு தலைமுடி அதிகம் உதிர்வதாக இருந்தால், பால் பொருட்களை சில காலம் சாப்பிடுவதை நிறுத்துங்கள்.

மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. இது மயிர்கால்களை சேதப்படுத்தும். மேலும் மாட்டிறைச்சியை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

வறுத்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த/வறுத்த உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்புகள் உள்ளன. இது மயிர்கால்களை உலர்த்துவதோடு, பலவீனப்படுத்தி, தலைமுடி அதிகம் உதிர வழிவகை செய்கிறது. எனவே வறுத்த உணவுகளை சாப்பிட விரும்பினால், வாரத்திற்கு ஒருமுறைக்கு மேல் சாப்பிடாதீர்கள்.

சர்க்கரை நிறைந்த பானங்கள்
குளிர்பானங்களில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இந்த பானங்களை குடிப்பதன் மூலம் தலைமுடி வலுவிழந்து உதிர ஆரம்பிக்கும். மேலும் சர்க்கரை பானங்கள் உடலில் நீர்ச்சத்தின் அளவைக் குறைக்கிறது. இதன் விளைவாக உடல் பருமன் அதிகரிக்கும். எனவே உங்களுக்கு தலைமுடி உதிர்ந்தால், இந்த வகை பானங்களைக் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.



Click it and Unblock the Notifications