For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைமுடி உதிர்விற்கு 'குட்-பை' சொல்லணுமா? அப்ப இத 10 நாள் குடிங்க போதும்...

கறிவேப்பிலை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் என 10 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தலைமுடி உதிர்வது சட்டென குறைவதைக் காணலாம். அதோடு தலைமுடியும் அடர்த்தியாக வளர்வதைக் காண்பீர்கள்.

|

இன்று பலரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக தலைமுடி உதிர்வது இருக்கிறது. சொல்லப்போனால் தலைமுடி உதிர்வதை நினைத்து கவலைக் கொள்வோர் ஏராளம். இதற்காக எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும், பலன் கிடைக்காமல் வேதனை அடைகிறோம். தலைமுடி உதிர்வதை நிறுத்துவதற்கு பல்வேறு எண்ணெய்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி மாதக்கணக்கில் பயன்படுத்தினாலும், எதிர்பார்க்கும் தீர்வு மட்டும் கிடைப்பதில்லை. ஒருவருக்கு தலைமுடி உதிர்வதற்கு முக்கியமான மற்றும் முதன்மையான காரணமாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடு தான்.

Curry Leaf Juice To Control Hair Fall

தலைமுடி வலுவாக இருக்க வேண்டுமானால், மயிர்கால்களின் வலிமைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும். அது கிடைக்காத பட்சத்தில் தான் அதிகளவிலான தலைமுடி கொட்ட ஆரம்பிக்கிறது. தலைமுடி உதிர்வதைத் தடுக்க பல்வேறு ஹேர் பேக்குகளும் உள்ளன. இப்படி எதைப் பயன்படுத்தியும் உங்கள் தலைமுடி உதிர்வது குறையவில்லையா? அப்படியானால் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

MOST READ: திருமணத்தின் போது சிவப்பு நிற லெஹெங்காவில் ஜொலித்த காஜல் அகர்வால்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரும்புச்சத்து நிறைந்த கறிவேப்பிலை

இரும்புச்சத்து நிறைந்த கறிவேப்பிலை

இரும்புச்சத்து பல உணவுப் பொருட்களில் இருந்தாலும், கறிவேப்பிலையில் அதிகம் உள்ளது. அதனால் தான் தலைமுடி நன்கு வளர வேண்டுமானால், கறிவேப்பிலையை சாப்பிட நம் முன்னோர்கள் கூறினார்கள். ஒருவர் எவ்வளவு கறிவேப்பிலையை உணவில் சேர்க்கிறாரோ, அந்த அளவு தலைமுடி வலிமையாக உதிராமல் இருப்பதுடன், அடர்த்தியாகவும், வேகமாகவும் வளரும். உண்மையில், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு வெளியே நாம் மேற்கொள்ளும் விஷயங்களை விட, சத்துள்ள உணவுகளை உண்பதால், நல்ல பலன் வேகமாக கிடைக்கும்.

கறிவேப்பிலையை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

கறிவேப்பிலையை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

தினமும் உண்ணும் உணவில் கறிவேப்பிலையை அதிகம் சேர்த்து வாருங்கள். அதற்காக கறிவேப்பிலையை தாளிப்பதற்கு மட்டுமின்றி, கறிவேப்பிலையைக் கொண்டு சட்னி, துவையல், கறிவேப்பிலை சாதம் என செய்து அடிக்கடி சாப்பிடுங்கள். இதனால் உடலில் இரும்புச்சத்து அதிகரித்து, தலைமுடி உதிர்வது கட்டுப்படுத்தப்படுவதோடு, கண் பார்வையும் மேம்படும்.

தலைமுடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும் மற்றொரு சிறப்பான வழி கறிவேப்பிலை ஜூஸ். என்ன கறிவேப்பிலை ஜூஸா என்று நீங்கள் யோசிக்கலாம். ஆம், கறிவேப்பிலையைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்தால், நற்பலனை வேகமாக பெறலாம்.

கறிவேப்பிலை ஜூஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை ஜூஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்:

* கறிவேப்பிலை - 1 கையளவு

* சீரகம் - 1/4 டீஸ்பூன்

* தயிர் - 3 டீஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை

* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை

செய்முறை:

செய்முறை:

* முதலில் மிக்ஸர் ஜாரில் கறிவேப்பிலையை நீரில் அலசிப் போட்டுக் கொள்ளவும்.

* பின் அதில் சீரகம், தயிர், உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த கலவையுடன் தேவையான அளவு நீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து கொண்டால், கறிவேப்பிலை ஜூஸ் தயார்.

இந்த மாதிரி ஜூஸ் தயாரித்துக் குடித்தால், கசப்புத்தன்மை எதுவும் தெரியாது.

கறிவேப்பிலை ஜூஸின் நன்மைகள்:

கறிவேப்பிலை ஜூஸின் நன்மைகள்:

* உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரையும்.

* தேங்கியுள்ள சளி கரைந்து வெளியேறும்.

* இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கி, இரத்தம் சுத்தமாகும்.

* இரத்த ஓட்டம் உடலில் சீராக இருக்கும். குறிப்பாக தலையில் இரத்த ஓட்டம் சீராகி, தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி மேம்படும்.

குறிப்பு

குறிப்பு

இந்த கறிவேப்பிலை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் என 10 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தலைமுடி உதிர்வது சட்டென குறைவதைக் காணலாம். அதோடு தலைமுடியும் அடர்த்தியாக வளர்வதைக் காண்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Curry Leaf Juice To Control Hair Fall

Want to control hair fall? Drink curry leaf juice for 10 days to prevent hair loss.
Desktop Bottom Promotion