For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி கொட்டுதா? இத தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமடங்கு வேகத்தில் தலைமுடி வளருமாம்...

தலைமுடி உதிர்வால் அவதிப்படுகிறீர்கள் என்றால், ஒரு விஷயத்தை தினமும் தவறாமல் செய்யுங்கள் போதும். அது என்னவென்றால் ஒருசில உணவுப் பொருட்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

|

இன்று பலரது கவலைகளில் உடல் பருமனுக்கு அடுத்தப்படியாக தலைமுடி பற்றிய கவலை உள்ளது. ஏனெனில் பலர் தலைமுடி உதிர்வால் தங்களின் தலைமுடியை இழந்து வருகிறார்கள். தலைமுடி உதிர்வதற்கு மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை முக்கிய காரணமாக உள்ளது. அதோடு மோசமான உணவுப் பழக்கங்களால் உடலுக்கு மட்டுமின்றி தலைமுடிக்கும் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் முடியின் வலிமைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், தலைமுடி கொத்து கொத்தாக உதிர ஆரம்பிக்கிறது.

Consume These Things On An Empty Stomach To Increase Hair Growth

நீங்கள் இதுப்போன்று தலைமுடி உதிர்வால் அவதிப்படுகிறீர்கள் என்றால், ஒரு விஷயத்தை தினமும் தவறாமல் செய்யுங்கள் போதும். அது என்னவென்றால் ஒருசில உணவுப் பொருட்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனால் தலைமுடியின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய பொருட்கள் எவையென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கறிவேப்பிலை

கறிவேப்பிலை

ஏற்கனவே கறிவேப்பிலை தலைமுடிக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் கறிவேப்பிலையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளதால், இது தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். அதற்கு 3-4 கறிவேப்பிலை இலைகளை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனால் ஓரிரு நாட்களில் தலைமுடியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஆளிவிதை

ஆளிவிதை

ஆளிவிதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஏராளமான அளவில் உள்ளது. எனவே இது தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அதற்கு ஆளிவிதையை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, அந்நீரை மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆளிவிதை பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.

வேப்பிலை

வேப்பிலை

வேப்பிலை ஒரு அற்புதமான மருத்துவப் பொருள். வேப்பிலையை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தில் மட்டுமின்றி, தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அதற்கு வேப்பிலையை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

இளநீர்

இளநீர்

இளநீர் இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம். இது தலைமுடி, சருமம் மற்றும் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தலையில் போதுமான இரத்த ஓட்டம் இல்லாவிட்டால் தான் தலைமுடி உதிரும். ஆனால் இளநீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் இரத்த ஓட்டம் மேம்பட்டு, தலைமுடியும் வலுவாகும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது தலைமுடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அதற்கு சிட்ரஸ் பழ ஜூஸை காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஆனால் இந்த ஜூஸை வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Consume These Things On An Empty Stomach To Increase Hair Growth

Did you know consuming these things on an empty stomach to increase hair growth? Read on...
Story first published: Saturday, March 12, 2022, 14:49 [IST]
Desktop Bottom Promotion