For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க முடில அடிக்கடி பூச்சி வெட்டு வருதா அப்போ இத ட்ரை பண்ணுங்க.

கொலாஜென் இது மனிதர்களின் உடலில் காணப்படும் ஒரு புரதங்களில் ஒன்றாகும். இது சருமம் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் முக்கியமான ஒன்றாக உள்ளது. நமது உடல் இயற்கையாகவே கொலாஜென்களை உற்பத்தி செய்ய

|

கொலாஜென் இது மனிதர்களின் உடலில் காணப்படும் ஒரு புரதங்களில் ஒன்றாகும். இது சருமம் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் முக்கியமான ஒன்றாக உள்ளது. நமது உடல் இயற்கையாகவே கொலாஜென்களை உற்பத்தி செய்யும் தன்மை பெற்றுள்ளது. இருப்பினும் கொலாஜென்களை உணவுகளிருந்தும் நம் பெறலாம். எப்படி ஜெலட்டின் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகளை பெறுகிறோமோ அதே போல் கொலாஜென்களும் கிடைக்கின்றன.

Collagen For Hair Growth - Collagen Hair Masks.

இந்த கொலாஜென்கள் உங்கள் முடிக்குத் தேவையான சில ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இவை உங்கள் முடியை நீளமாக, அடர்த்தியாக மற்றும் பளபளப்பாக மாற்றுகிறது. இங்கே உங்கள் முடியின் ஆரோக்கியத்திற்கான கொலாஜென் ஹேர் மாஸ்க்குகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நரை முடி

நரை முடி

கொலாஜன் மாஸ்க் உங்கள் நரைமுடியை கருமையாக மாற்றும். அதாவது கொலாஜன் கொண்ட ஹேர் மாஸ்க்கை உங்கள் முடியில் தேய்க்கும் போது முடியின் வேர்ப்பகுதியில் சென்று கூந்தலுக்கு நிறத்தைக் கொடுக்கிறது. உங்கள் முடியில் உள்ள வெள்ளை நிறத்தை மாற்றி கருமையைத் தரும்.

MOST READ:வெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.

முடியின் ஈரப்பதம்

முடியின் ஈரப்பதம்

கொலாஜன் மாஸ்க் நீங்கள் உபயோகிப்பதன் மூலம் உங்கள் முடியை வறண்டு போகாமல் வைக்க உதவுகிறது. முடி ஈரப்பதத்துடன் இருக்கும் போது வலுவாக, அடர்த்தியாக, மென்மையாக மற்றும் பளபளப்பாக மாறும். ஆனால் உடலில் இருக்கும் கொலாஜென்கள் வயதுக்கு ஏற்ப கொலாஜன்களை உற்பத்தி செய்கிறது. எனவே கொலாஜென்கள் உற்பத்தியாகாத போது நீங்கள் கொலாஜென் மாஸ்க் பயன்படுத்தி உங்கள் முடியைப் பளபளக்கச் செய்யலாம்.

முடி பராமரிப்பு

முடி பராமரிப்பு

கொலாஜென் மாஸ்க் என்பது முடிக்கு மிகவும் தேவையான ஒன்று. நீங்கள் மிகவும் எளிமையான முறையில் கொலாஜென் மாஸ்க் தயார் செய்து மாதத்திற்கு ஒரு முறை உங்கள் முடியில் தேய்த்து வருவதால் உங்கள் முடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும். இந்த கொலாஜென்கள் தற்போது எளிதில் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன.

MOST READ:அட! டூத்பேஸ்ட்ட சருமத்தில பயன்படுத்தினா இது போய்டுமாம். என்னனு பாருங்க.

பூச்சி வெட்டு

பூச்சி வெட்டு

முடியின் ஈரப்பதமற்ற தன்மை பூச்சிவெட்டுகளுக்கு வழிவகுக்கும். முடி கொட்டுதல், பூச்சி வெட்டு, போன்றவற்றைச் சரி செய்ய கொலாஜன் மாஸ்க் உங்களுக்கு உதவும். இதற்கு நீங்கள் கொலாஜன் மாஸ்க்கை தொடர்ந்து முடிகளில் பயன்படுத்தி வர வேண்டும். இந்த கொலாஜென் மாஸ்க் உங்கள் முடியின் இயற்கையான ஈரப்பதத்தினை மீட்டெடுப்பதற்கு உதவுகிறது. இது உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் கொலாஜென் உங்கள் வயதைக் காட்டிலும் அதிகமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

உலர்ந்த முடி

உலர்ந்த முடி

உங்கள் முடி மிகவும் உலர்ந்து காணப்பட்டால் இனி கவலைப் பட வேண்டியது இல்லை. உங்கள் முடிக்கு நல்ல தீர்வாக கொலாஜென் மாஸ்க் இருக்கும். கொலாஜென் மாஸ்க் பயன்படுத்தும் போது உலர்ந்து அல்லது உறைந்த உங்கள் முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.

வெப்ப பாதுகாப்பு

வெப்ப பாதுகாப்பு

கொலாஜென் ஹேர் மாஸ்க்கை நீங்கள் உபயோகிப்பதால் இவை உங்கள் முடியை வெப்பத்தால் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் வெளியில் நீங்கள் செல்லும் போது சூரிய வெப்பத்தினால் உங்கள் முடியைப் பாதிக்காமல் பாதுகாக்கிறது.

கொலாஜன் ஹேர் மாஸ்க்

கொலாஜன் ஹேர் மாஸ்க்

கொலாஜன் ஹேர் மாஸ்க் பூச்சி வெட்டு, பிளவுகளைக் குறைத்து, முடியை வலுவாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றி முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். அதற்குத் தேவையான பொருட்கள், இரண்டு தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய், இரண்டு தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டியளவு கொலாஜன் எடுத்து அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் போட்டுக் கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலை முதல் முடியின் நுனிப் பகுதி வரை தடவி மசாஜ் செய்யுங்கள். பின்பு 20 நிமிடங்கள் கழித்து நல்ல ஷாம்பூ கொண்டு அலசுங்கள். இந்த முறையை நீங்கள் மாதத்திற்கு ஒருமுறை செய்தால் போதும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Collagen For Hair Growth - Collagen Hair Masks.

Collagen is the most amply available protein in human body. It is important for making up skin, tendons, and ligaments. Body produces collagen naturally. However, one can also get it from supplements and natural foods, such as gelatin and bone broth. This protein offers a wide variety of health benefits including stronger, lengthier, beautiful hair and also helps in hair growth.
Desktop Bottom Promotion