For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நரைமுடியை கருகருவென மாற்றும் பீர்க்கங்காய்... எப்படி தேய்க்க வேண்டும்?

இளநரையை நீங்கள் என்ன தான் மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நேரம் வீணானது தான் மிச்சமாக இருக்கும். செயற்கை கலரிங் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்த கூட வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கை முறைக

By Mahibala
|

நமது அழகில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது என்றால் அது கூந்தல் அழகு தான். அதிலும் கருகருவென அலைபாயும் கூந்தல் என்றால் போதும் உங்கள் அழகை பலமடங்கு கூட்டியே காட்டும். அழகை மட்டுமா என்ன உங்கள் இளமையையும் சேர்த்து தான். அப்படியானால் இளம் வயதிலேயே உங்கள் கூந்தல் நரைத்து விட்டால் என்ன நடக்கும்.

Grey Hair

உங்கள் இளமையும் வயதான தோற்றம் பெற்று விடும் அல்லவா. இந்த இளநரையை நீங்கள் என்ன தான் மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நேரம் வீணானது தான் மிச்சமாக இருக்கும். செயற்கை கலரிங் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்த கூட வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கை முறைகள் அப்படி இல்லை நிரந்தர பலனுடன் பக்கவிளைவுகள் இல்லாத பரிசை கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கறிவேப்பிலை டானிக்

கறிவேப்பிலை டானிக்

கறிவேப்பிலை உங்கள் சமையலை மட்டும் மணமாக்க போவதில்லை. உங்கள் கூந்தலையும் நிறமாக்க போகிறது. உண்மையை சொல்ல போனால் இது இயற்கை கொடுத்த வரம். இதை உங்கள் உணவுகளில் தொடர்ச்சியாக சேர்த்து வந்தாலே போதும் உங்கள் கூந்தல் கருகருவென அலைபாயும். அப்படியொரு சிறந்த கூந்தல் டானிக்கையை தான் இப்பொழுது பார்க்க போறோம். இதை தயாரித்து ஸ்டோர் செய்து கூட நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

MOST READ: அட வெங்காயத்த தினமும் இப்படி செஞ்சா சாப்பிட்டா சர்க்கரை நோய் வராதாமே? சூப்பர்ப்பா...

எப்படி தயாரிப்பது?

எப்படி தயாரிப்பது?

தேங்காய் எண்ணெய் - 100 மில்லி லிட்டர்

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு (தேவைக்கேற்ப)

செய்யும் முறை

கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து கொள்ளுங்கள். அதை நன்றாக கொதிக்க விடவும். உங்கள் தேங்காய் எண்ணெய் உறைந்து இருந்தால் முதலில் அதை உருக்கி விட்டு பிறகு கறிவேப்பிலை சேர்த்து சூடுபடுத்தவும்

கறிவேப்பிலை கருப்பு கலரில் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். இந்த எண்ணெய்யை வடிகட்டி ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து கொள்ளவும்.

எப்படி தேய்க்க வேண்டும்?

எப்படி தேய்க்க வேண்டும்?

இந்த ஆயிலை தினமும் தூங்குவதற்கு முன் உங்கள் கூந்தலில் தேய்த்து நன்றாக மயிர்க்கால்களில் படும் படி 15-20 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் கூந்தலை அலசி விடுங்கள். இதை 3 மாதத்திற்கு செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

சுவாரஸ்யமான தகவல்

சுவாரஸ்யமான தகவல்

பிரிட்டிஷ் புகழ்பெற்ற நடிகையான அன்னா ப்ரைல் தினமும் கறிவேப்பிலை டீ குடித்து வந்துள்ளார். அவரின் கூந்தலுக்கு இயற்கையான நிறம் கிடைத்ததாக தன் அனுபவத்தை நம்மிடம் கூறியுள்ளார். அவர் கறிவேப்பிலை இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்ததில் தனது இளநரை மறைந்துள்ளது என்று கூறுகிறார்.

MOST READ: அமீர்கான் கட்டுமஸ்தா இருக்கிறதுக்கு காரணம் தண்ணி மட்டும்தானாம்... எப்படி குடிக்கிறார்னு நீங்களே பாரு

நெல்லிக்காய் ரெசிபி

நெல்லிக்காய் ரெசிபி

நெல்லிக்காய் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் சி சத்து கூந்தலை பராமரிக்க பெரிதும் பயன்படுகிறது. இவை இளநரையை தடுத்து முடிகள் அடர்த்தியாகவும் நன்றாக வளரவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் பொடி - 2 டேபிள் ஸ்பூன் (பொடி தயாரிப்பு பின்வருமாறு காணலாம்)

வெந்தய பொடி - 1 டீ ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 1 கப்

செய்முறை

நெல்லிக்காயை நறுக்கி நிழலில் சுருள காய வைத்து எடுக்கவும். நன்றாக காய்ந்ததும் பொடியாக அரைத்து கொள்ளவும். நெல்லிக்காய் பொடி, தேங்காய் எண்ணெய், வெந்தயம் இவற்றை ஒரு கடாயில் சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும். எண்ணெய் பழுப்பு நிறத்தில் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். ஆற விடவும். எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து கொள்ளவும்

பயன்படுத்தும் முறை

இரவு நேரத்தில் இந்த நெல்லிக்காய் எண்ணெய்யை தலை மற்றும் கூந்தலில் மசாஜ் செய்து தடவி வந்தால் இளநரையை தடுக்கலாம். காலையில் எழுந்ததும் அலச வேண்டும்.

நெல்லிக்காய் டோனர்

நெல்லிக்காய் டோனர்

இந்த மாதிரியான கூந்தலை நீங்கள் பெற்று இருந்தால் எண்ணெய்க்கு பதிலாக நெல்லிக்காய் தண்ணீர் உபயோகிக்கலாம்.

தேவையான பொருட்கள்

1 கப் தண்ணீர்

1டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடி

செய்முறை

நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் சேர்க்க வேண்டும்.

தண்ணீர் நன்றாக கொதித்து பாதியாக வற்றும் வரை கொதிக்க விடவும். 3 டீ ஸ்பூன் நெல்லிக்காய் தண்ணீராவது தேவை. இதனுடன் 3 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்க்கவும்

பயன்படுத்தும் முறை

இதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து உங்கள் முடிக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தண்ணீரைக் கொண்டு கூந்தலை அலசுங்கள். சுவாரஸ்யமான தகவல் :இந்த இந்திய நெல்லிக்காயின் அளவு 1 அங்குலமாகும். இதன் ஆன்டி ஸ்கோர் புயூட்டிக் மதிப்பு இரண்டு ஆரஞ்சிற்கு சமமான சத்தை கொண்டுள்ளது. இதை நீங்கள் கொதிக்க வைத்தாலோ, ஜாம் வடிவிலோ அல்லது ஊறுகாய் வடிவிலோ இப்படி எப்படி பயன்படுத்தினாலும் இதன் சத்து மாறாது.

பீர்க்கங்காய் டானிக்

பீர்க்கங்காய் டானிக்

இதுவும் இளநரைகளின் வேர்ப் பகுதியின் நிறத்தை மாற்றி இளநரையை போக்குகிறது. இதற்கு இந்த டானிக்கை நாம் தயாரிக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்

உலர்ந்த பீர்க்கங்காய் - 1/2 கப்

தேங்காய் எண்ணெய் - 1 கப்

செய்முறை

பீர்க்கங்காயை துண்டுகளாக நறுக்கி நிழலிலே காய வைக்க வேண்டும்

இந்த உலர்த்த பீர்க்கங்காயை 3-4 நாட்கள் தேங்காய் எண்ணெய்யில் ஊற வைக்கவும். இப்பொழுது தேங்காய் எண்ணெய்யை பீர்க்கங்காயுடன் கொதிக்க விடவும். எண்ணெய் கருப்பாக, மாறும் வரை குறைந்த தீயில் வைத்து சூடுபடுத்தவும்.

வடிகட்டி ஸ்டோர் செய்து கொள்ளவும்

பயன்படுத்தும் முறை

இதை வாரத்திற்கு இரண்டு முறை என கூந்தல் மற்றும் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வரவும்.

சுவாரஸ்யமான தகவல்

பீர்க்கங்காய் பொதுவாக லூவ்பா என்று அழைக்கப்படுகிறது. இந்த உலர்ந்த பீர்க்கங்காயை கொண்டு தேய்த்து குளிக்க பயன்படும் ப்ரஷ் தான் லூவ்பா ப்ரஷ் என்பது. மேலும் இது மஞ்சள் காமாலை, தொழுநோய் போன்றவற்றிற்கு உதவுகிறது.

MOST READ: ஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்?

 நல்லெண்ணெய் காரட் ஜூஸ்

நல்லெண்ணெய் காரட் ஜூஸ்

இள நரைமுடி அதிகமாக வருவதை தடுக்க இது பயன்படுகிறது. இதற்கு நல்லெண்ணெய், வெந்தயம், காரட் ஜூஸ் போன்றவற்றை கொண்டு ஆயுர்வேத முறையில் இளநரையை தடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய்

காரட் ஜூஸ்

(இரண்டையும் சமமான அளவு எடுத்து கொள்ளுங்கள்)

வெந்தயம் - ஆயில் மற்றும் ஜூஸில் 1/ 2 மடங்கு ஆகும்.

பயன்படுத்தும் முறை

நல்லெண்ணெய், வெந்தய பொடி மற்றும் காரட் ஜூஸ் மூன்றையும் ஒரு சுத்தமான பாட்டிலில் கலக்கவும்.

இதை 21 நாட்களுக்கு வெயிலில் வைத்திருக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை

பிறகு இதை 21 நாட்களுக்கு தலை மற்றும் கூந்தலில் தடவி வாருங்கள். இதை 3 மாதத்திற்கு பயன்படுத்தி வரவும். இந்த டானிக் உங்கள் தாடி, புருவம், மீசையிலுள்ள இளநரையை கூட போக்கும். கண்டிப்பாக அதிசயப்பீர்கள்.

சுவாரஸ்யமான தகவல்

இந்த டானிக்கையை வெயிலில் வைப்பதற்கு காரணம் இதிலுள்ள தண்ணீரை அது உறிஞ்சி கொள்ளும், மேலும் கிருமிகள் எதாவது இருந்தால் 6 மணி நேர சூரிய ஒளியில் அழிந்து விடும்.

பட்டர்மில்க் ரெசிபி

பட்டர்மில்க் ரெசிபி

பட்டர்மில்க், கறிவேப்பிலை இரண்டும் இளநரையை போக்க பெரிதும் பயன்படுகிறது. எண்ணெய் பசை கூந்தலையுடையவர்களுக்கு இந்த ரெசிபி சிறந்தது.

தேவையான பொருட்கள்

பட்டர்மில்க் - 1/2 கப்

கறிவேப்பிலை ஜூஸ் - 1/2 கப்

செய்முறை

கறிவேப்பிலையை நன்றாக அரைத்து அதன் ஜூஸை மட்டும் வடிகட்டி கொள்ளவும்

பட்டரை வீட்டில் தயாரிக்க யோகார்ட்டுடன் வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து பட்டரை மட்டும் தனியாக எடுக்கவும். கறிவேப்பிலை ஜூஸ் மற்றும் பட்டர் மில்க்கை கலக்கவும். குறைந்த தீயில் இதை 5 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்

வெதுவெதுப்பாக ஆற விடவும். இதை தலையில் மற்றும் கூந்தலில் தடவ வேண்டும்.

1/2 மணி நேரம் அப்படியே வைத்து இருக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரை கொண்டு கூந்தலை அலசவும். இது கூந்தல் உதிர்விற்கும் மிகச் சிறந்த டானிக் ஆகும்.

சுவாரஸ்யமான தகவல்

இந்த பட்டர் என்ற பெயர் பால் பொருட்களில் இது குறைந்த கொழுப்பு சத்து கொண்டது என்பதை காட்டுகிறது. 1 கப் பட்டர்மில்க்கில் 2.2 கிராம் கொழுப்பு, 99 கலோரிகள் அடங்கியுள்ளன. 1 கப் முழுப்பாலில் 8.9 கிராம் கொழுப்பு, 157 கலோரிகள். இது கெமோதெரபி, ரேடியேஷன் தெரபி போன்ற புற்று நோய் சிகிச்சைக்கும் உதவுகிறது.

இந்த முறைகளை பின்பற்றினாலும் அடிக்கடி கூந்தலுக்கு கெமிக்கல் பொருட்கள், கெமிக்கல் ஹேர் கேர் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ridge Gourd For Treating Grey Hair

Now you know whether your’s is a premature graying of hair or not! And if the answer is yes, you don’t have to worry a lot because there are certain very effective home remedies to prevent such early graying of your hair.amla, curry leaves, carrot juice, ridge gourd, butter milk these are used for gray hair
Story first published: Wednesday, March 20, 2019, 17:44 [IST]
Desktop Bottom Promotion