உங்க தலைமுடியும் இப்படி அலைபாயணுமா?... ஷாம்புவோட இத ஒரு ஸ்பூன் சேர்த்துக்கோங்க...

Posted By: suganthi rajalingam
Subscribe to Boldsky

பேக்கிங் சோடா இது சோடியம் பைகார்பனேட் என்று அழைக்கப்படுகிறது. அதிகமாக சமையலில் பயன்படுத்தப்படும் இந்த பொருள் உங்கள் அழகு பராமரிப்பையும் விட்டு வைக்கவில்லை. எண்ணிலடங்காத நன்மைகளை அள்ளிக் கொடுத்து போகிறது.

baking soda uses for hair

இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் சரும pH அளவை சமநிலையாக்குகிறது. ஏன் விலைமலிவான ஒரு பியூட்டி பார்முலா என்றால் அது இந்த பேக்கிங் சோடா முறை தான். இது உங்க சருமத்திற்கு மட்டுமல்ல உங்கள் கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சரி வாங்க பேக்கிங் சோடா எப்படி உங்கள் கூந்தல் பராமரிப்புக்கு உதவுகிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்லதா? கெட்டதா?

நல்லதா? கெட்டதா?

இந்த பேக்கிங் சோடா ஒரு அல்கலைன் பொருள். இதன் pH அளவு 7 க்கு அதிகமாக இருப்பதால் கூந்தலில் ஏற்படும் பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கிறது. எனவே உங்கள் கூந்தலின் pH அளவு 7 க்கு அதிகமாக இருந்தால் அதற்கு இது உகந்தது அல்ல. இதனால் கூந்தல் வறண்டு போய் உடைவதற்கு வாய்ப்புள்ளது.

ஷாம்பு

ஷாம்பு

தினமும் தலைக்கு குளிக்கும் போது ஷாம்புவுடன் இந்த பேக்கிங் சோடாவை கலந்து தடவி அலசி விட வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல உறுதியான அலைபாயும் கூந்தல் கிடைக்கும். பேக்கிங் சோடாவை ஷாம்புடன் சேர்த்துப் பயன்படுத்தும்போது, ஷாம்புவில் உள்ள வேதித்தன்மை குறையும்.

எண்ணெய் பசை

எண்ணெய் பசை

உங்கள் தலை எண்ணெய் பசை தலையாக இருந்தால் அதிகம் வியர்த்து தலையில் துர்நாற்றம் வீசும் மேலும் அதிகமான மாசுக்களை ஊறிஞ்சி கொல்லும். இதனால் உங்கள் கூந்தல் ஆரோக்கியமற்று காண வாய்ப்புள்ளது. இதற்கு பேக்கிங் சோடா நல்ல தீர்வைத் தருகிறது.

பயன்படுத்தும் முறை

பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை 1:3 என்ற விகிதத்தில் கலந்து தலையில் தடவி மசாஜ் செய்து 5 நிமிடங்கள் கழித்து அலச வேண்டும். மாதத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கி ஆரோக்கியமான கூந்தலை பெற இயலும்.

இல்லையென்றால் சாம்பு போடும் போது கொஞ்சம் பேக்கிங் சோடாவை தலையில் தூவி நன்றாக மயிர்கால்களில் படும் படி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு நன்றாக தேய்த்து குளிக்கவும்.

பொடுகு

பொடுகு

தலையில் ஏற்படும் அலற்சியால் தோல் உரிந்து பொடுகு தொல்லை ஏற்படும். இதற்கும் பேக்கிங் சோடா நல்ல தீர்வை கொடுக்கிறது.

பயன்படுத்தும் முறை

முதலில் உங்கள் தலையை நீரில் நனைத்து கொள்ளுங்கள். பிறகு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை தலையில் மசாஜ் செய்து தடவிக் கொள்ளுங்கள். 2 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் அலசுங்கள். வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். பேக்கிங் சோடாவுடன் ஒரு லெமன் ஜூஸை கலந்து மயிர்கால்களில் படும் படி நன்றாக தடவிக் கொள்ளுங்கள். கொஞ்சம் நேரம் உலர விட்டு பிறகு நீரில் அலசவும். லெமன் ஜூஸில் உள்ள விட்டமின் சி, மக்னீசியம் தலையில் உள்ள அழுக்கை நீக்கி சுத்தப்படுத்துகிறது.

கண்டிஷனர்

கண்டிஷனர்

இதன் அமிலத்தன்மை காரணமாக இது ஒரு நல்ல கண்டிஷனராக செயல்படுகிறது.

பயன்படுத்தும் முறை

1/2 கப் பேக்கிங் சோடாவுடன் 1 கப் கண்டிஷனரை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் கூந்தல் மற்றும் மயிர்கால்களில் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் கழித்து அலச வேண்டும்.

குறிப்பு

பேக்கிங் சோடாவை தனியாக கண்டிஷனராக பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இது அல்கலைன் என்பதால் ஏதாவது கண்டிஷனருடன் கலந்து உபயோகியுங்கள். அப்பொழுது தான் pH அளவு 5-5.5 ஆக பராமரிக்க முடியும்.

கெமிக்கல் பொருட்கள்

கெமிக்கல் பொருட்கள்

நாம் தினமும் கெமிக்கல் சாம்பு, கெமிக்கல்கல் கலந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துகிறோம். இவற்றை நீங்கள் என்ன தான் அலசினாலும் முழுவதும் நீங்காது. எனவே இந்த கெமிக்கல் பொருட்களை கூந்தலிருந்து நீக்க இது பயன்படுகிறது.

பயன்படுத்தும் முறை

3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் ஒரு பெளல் நிறைய தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். தலையை நீரில் நனைத்து விட்டு இந்த கலவையை தலையில் தடவி கொஞ்சம் நேரம் கழித்து அலச வேண்டும். துண்டை கொண்டு கூந்தலை உலர்த்த வேண்டும்.

முரடான கூந்தலுக்கு

முரடான கூந்தலுக்கு

ஒவ்வொரு முடி பாகமும் புறணி பகுதி, வெளிப்புற தோல் மற்றும் மெடுல்லா நடுப்பகுதி என்ற மூன்று லேயர்களை கொண்டிருக்கும். இதில் இந்த வெளிப்புற தோல் முரடாக இருக்கும் போது நமது கூந்தலும் முரட்டுத்தன்மையுடன் காணப்படும். எனவே பேக்கிங் சோடாவை பயன்படுத்தும் போது இந்த முரட்டுத் தன்மை நீங்கி விடுகிறது. கூந்தல் பட்டு போன்று மாறி விடும்.

குறிப்பு

ஏற்கனவே உங்கள் கூந்தலின் pH அளவு 7 க்கு மேல் இருந்தால் அப்பொழுது இதை பயன்படுத்த வேண்டாம்.

முடி உதிர்தல்

முடி உதிர்தல்

முடி உதிர்தல் பிரச்சினை என்பது ஆண்கள் முதல் பெண்கள் வரை சந்திக்கும் பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. பரம்பரை, கெமிக்கல் பொருட்கள், மன அழுத்தம் போன்றவை இந்த முடி உதிர்தல் பிரச்சினைக்கு மூல காரணங்களாக இருக்கிறது.

பயன்படுத்தும் முறை

முடி வளர்ச்சியை தூண்ட ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 டீ ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து குடித்து வந்தால் புது முடி வளர்ச்சியை தூண்டலாம்

பேக்கிங் சோடா மற்றும் வினிகர்

பேக்கிங் சோடா மற்றும் வினிகர்

பேக்கிங் சோடா மற்றும் வினிகரை பயன்படுத்தினால் போதும் கூந்தலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. வினிகரின் அமிலத்தன்மையும் பேக்கிங் சோடாவின் அல்கலைன் தன்மையும் கூந்தலின் pH அளவை நடுநிலையாக்குகிறது.

பயன்படுத்தும் முறை

முதலில் உங்கள் கூந்தலை நீரில் நனைத்து விட்டு பேக்கிங் சோடாவை கொண்டு மயிர்க்கால்களை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

பிறகு ஒரு பாட்டிலில் 1 பங்கு வினிகரும் 4 பங்கு தண்ணீரும் சேர்த்து கொள்ள வேண்டும். (உங்கள் முடியின் நீளத்திற்கு ஏற்றவாறு அளவை மாற்றி கொள்ளுங்கள்) நன்றாக இந்த கலவையை கொண்டு கூந்தலை அலசி பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

குறிப்புகள்

குறிப்புகள்

வினிகர் காரமான நெடியுடன் இருப்பதால் சில துளிகள் எஸன்ஷியல் ஆயிலான சந்தன எண்ணெய், லாவண்டர் எண்ணெய், ரோஸ் மேரி ஆயில் போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். அதே நேரத்தில் லாவண்டர் ஆயில் நறுமணத்தை தருவதோடு முடி உதிர்தல் பிரச்சினையையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே சரியான அளவில் பயன்படுத்தவும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அதிக அளவு பேக்கிங் சோடாவை பயன்படுத்தும் போது அதிக pH அளவால் முடியின் மேல் புற தோல் திறந்து விடுகிறது. பேக்கிங் சோடாவை பயன்படுத்துவதற்கு முன் பரிசோதனை செய்து விட்டு பயன்படுத்துங்கள். எதாவது பக்க விளைவுகள் ஏற்பட்டால் பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள் நீங்கள் உபயோகிக்கும் ஹேர் ப்ரஷ்களை கூட சுத்தம் செய்ய பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: beauty hair கூந்தல்
English summary

Wonders of Baking Soda for Hair

baking soda is the most inexpensive thing around that has lots of medicinal properties, as well. Apart from the regular use, like cleaning, it can be used as a beauty product or as a remedy to treat numerous problems of our skin and body.But, can you use baking soda for hair? If yes, then what are the problems that can be solved with this ingredient? Check them. Hair growth, dandruff removal, conditioner these are the benefits are given.