For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  மொட்டை பாஸ் மண்டையில் முடி வளர செய்யும் கடல் களைகள்...! சில கடல் ரகசியங்கள் இதோ...

  |

  விக் வச்சி உங்க தலையின் சொட்டையை மறைக்கிறீர்களா..? எவ்ளோதான் தலையில எண்ணெய் தடவினாலும் ஒரு முடிகூட வளர மாட்டுதா..! வேலை பளு, இயற்கை மாற்றங்கள், அதிக மாசுக்கள், எண்ணற்ற மன குழப்பங்கள், தேவையற்ற உணவு சாப்பிடுதல், பரம்பரை நோய் இவையே தலையில் முடி வளராமல் தடுக்கும் முக்கிய காரணிகள். ஒருவரின் புற அழகை பார்க்கும்போது அதில் தலை முடி இன்றியமையாததாகும்.

  beauty

  முடி சார்ந்த பிரச்சினைகளில் முதல் இடத்தில் இருப்பது முடி உதிர்ந்து வழுக்கையாக மாறும் தொல்லையே. இதனை சரி செய்ய பலவித பொருட்களை சந்தையில் விளம்பரம் செய்வார்கள். அவற்றையெல்லாம் பயன்படுத்தியும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லையா..? உங்களின் தலை முடி பிரச்சினைகளை சரி செய்ய கடல் களைகளே போதும். இதில் உள்ள ரசியங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  கடல் களைகள்

  கடல் களைகள்

  "களைகள்" என்ற வார்த்தையை கேட்டவுடனேயே உங்கள் நினைவிற்கு வருவது வயலில் உள்ள களைகள் தானே..' பொதுவாக இதனை தேவையற்றவையாகவே நாம் பார்ப்போம். இதே போன்றுதான் கடலிலும் களைகள் அதிகம் காணப்படும். சிறிய தாவர உயிரினத்தை சார்ந்தவை இவை. இதில் பல மருத்துவ ரகசியுங்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. கடற்பாசியை போன்றே இது வளர கூடிய தன்மை உடையது.

  பாரம்பரிய முறை

  பாரம்பரிய முறை

  பல காலங்களாகவே கடற்களைகளை நாம் உண்ணும் உணவில், மருத்துவ பயன்பாட்டில், உடல் சார்ந்த சில கோளாறுகளை சரி செய்ய பயன்படுத்தி வருகின்றனர். alginate, carrageenan, agar போன்றவையே கடல் களையாக இன்று உபயோகிக்கின்றனர். இதில் ஒமேகா-3, ஒமேகா-6 போன்ற முக்கிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. அத்துடன் முடியின் வளர்ச்சியை மேம்படுத்த வைட்டமின் எ,பி,சி,ஈ ஆகியவையும், மெலனின் நிறமியை சுரக்க வைக்கும் பண்புகளையும் கொண்டது. மேலும் இவற்றில் உள்ள ஐயோடின், இரும்பு சத்து, ஜின்க், காப்பர் போன்றவை உடலுக்கு உறுதியை தரும்.

  வழுக்கையில் முடி வளர

  வழுக்கையில் முடி வளர

  உங்கள் வழுக்கை மண்டையில் முடி வளர இந்த கடல் களைகள் குறிப்புகள் பெரிதும் உதவும். சிறிதளவு கடல் களைகளை எடுத்து வெயிலில் உலர்த்தி பொடி செய்யவும். பிறகு அதனுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தலையில் 20 நிமிடம் தேய்த்து, மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே சொட்டை இருந்த இடத்தில் முடிகள் வளர செய்யும். மேலும் முடி உதிர்வை கட்டுப்படுத்தி அடர்த்தியாக முடி வளர செய்யும்.

  ப்ளாடர் வ்ராக் (bladder wrack)

  ப்ளாடர் வ்ராக் (bladder wrack)

  கடற்பாசி வகையை சார்ந்த இது, அதிக மருத்துவ தன்மை நிறைந்தது. பொதுவாக கடலில் கிடைக்கும் எல்லா பொருட்களிலும் ஐயோடின் அதிகம் நிறைந்திருக்கும். கடலில் கிடைக்கும் சில மூலிகைகளில் இது மிகவும் சிறந்தது. இதனை 200 mg தினமும் எடுத்து கொண்டால், முடி உதிரும் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். மந்தமான உங்கள் மூளையை சீர்படுத்தி சுறுசுறுப்பாக வேலை செய்ய செய்கிறது. இது உடலுக்கு மிகவும் நன்மையை தரும்.

  கடல் கீரை (Sea lettuce)

  கடல் கீரை (Sea lettuce)

  முருங்கை கீரை, அரை கீரை போலவே இது கடலில் கிடைக்கும் ஒருவகை கீரையாகும். தலையில் சொட்டை விழுந்து அதிகம் பாதிக்கபட்டுள்ளீர்களா..? உங்களின் பிரச்சினையை தீர்க்க இந்த ஒரு கீரை போதும். கடல் கீரையை ஜூஸ் போல அரைத்து தலையின் அடி வேரில் தடவி வந்தால் வழுக்கையில் முடி வளரும். இளநரையையும் இது குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது.

  தைராய்டு

  தைராய்டு

  மக்கள் தொகையில் அதிக பேருக்கு இருக்கும் குறைபாடு தைராய்டுதான். கடல் சார்ந்த அனைத்துமே ஐயோடின் நிறைந்த பொருட்களே. கடல் களைகளை உண்பதால் உடலில் ஐயோடினை அதிகரித்து தைராய்டு சுரப்பியை சீரான முறையில் சுரக்க செய்து ஹைப்போதைராடிசத்தை குணப்படுத்தும். அத்துடன் சீரான உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தி தாய்மை அடைய உதவுகிறது. அதிகம் உடல் உஷ்ணம் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் சூடு குறையும். மேலும் மன அழுத்தம், பசியின்மை, மன பித்து ஆகியவையும் சரி செய்யும்.

  ஹார்மோன் பிரச்சினை

  ஹார்மோன் பிரச்சினை

  நம்மில் பலருக்கு இருக்கும் நோய்களில் ஒன்று ஹார்மோன்கள் சரிநிலையில் இல்லாமையே. உடலின் ஆரோக்கியத்தை ஹார்மோன்கள் வைத்தே கணக்கிடப்படும். இந்த ஹார்மோன்களை சீராக சுரக்க வைக்க இந்த கடல் தாவரங்கள் பெரிதும் பயன்படுகிறது. மூளையின் செயல்பாட்டை அதிகரித்து உடலின் மெட்டபாலிசத்தை சமமாக வைக்கிறது. கடலில் இவ்வளவு அதிசய தாவரங்கள் இருப்பதை நாம் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். களைகள் தானே என மேம்போக்காக விடாதீர்கள். "சிறு துரும்பும் பல்குத்த உதவும்"என்பதே உண்மை.

  மேலும் இவற்றை உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்துவது நல்லது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Seaweed : A Natural Supplement For Hair Problems

  Accelerated hair loss is daunting, with very little prospect of reversing. It comes with unwanted social stigma, which can affect the quality of your life. To date, prevention is the best option for keeping and regenerating your hair.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more