Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த மாதிரி உங்க கூந்தலும் அடர்த்தியா வளரணுமா?... இத அப்ளை பண்ணுங்க...
தலைமுடி அடர்த்தி குறைந்து காணப்படுவதற்கும், முடி கொட்டுவதற்கும் உள்ள காரணங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால், அதிக கெமிக்கல் மிக்க சாம்பூ, தலை முடி சார்ந்த பொருட்களை நாம் பயன்படுத்துவதால் அதிக முடி இழப்பு
தலை முழுவதும் ஆரோக்கியமான மற்றும் அடர்ந்த முடி இருந்தால் நாம் மிக அழகாக தெரியலாம். ஆனால் இப்போதுள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் இது ஒரு கனவு மட்டும் தான். சுற்றுச்சூழல் மாசுபாடு, மோசமான உணவு பழக்கம் மற்றும் அதிக மனஅழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறை தான் தலை முடி சார்ந்த எல்லாம் பிரச்சினைக்கும் தலையாய காரணமாக உள்ளது.

தலைமுடி அடர்த்தி குறைந்து காணப்படுவதற்கும், முடி கொட்டுவதற்கும் உள்ள காரணங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால், அதிக கெமிக்கல் மிக்க சாம்பூ, தலை முடி சார்ந்த பொருட்களை நாம் பயன்படுத்துவதால் அதிக முடி இழப்பு ஏற்படுகிறது.
அதனால் இத்தகைய கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவதை குறைத்தால், சிறிது கால அவகாசத்தில் முடி உதிர்வது கண்டிப்பாக குறையும்.

அடர்த்தியான கூந்தல்
முடி நீளம் மற்றும் அடர்த்தியை அதிகரிக்க சரிவிகித உணவு, மனஅழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை மற்றும் சரியான தலைமுடி பராமரிப்பு ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். நிறைய எளிய வீட்டு மருந்துகளை கொண்டும் தலைமுடி சார்ந்த பிரச்சினைகளை குணப்படுத்த முடியும் அந்த ரகசியங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
இயற்கையான முறையில் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க...

விட்டமின் சி
விட்டமின் சி யை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தலைமுடி அடர்த்தி அதிகரிக்கும். எலுமிச்சை பழங்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். விட்டமின் சி அதிகம் உள்ள பழவகைகள் தலைமுடியின் வேர்களை உறுதியாக்கும். ஆரஞ்சு, கிவி மற்றும் எலுமிச்சையில் இந்த சத்து அதிகமாக உள்ளது. அதனால் இதில் ஏதேனும் ஒரு பழத்தை நாள்தோறும் சேர்த்து கொள்ள வேண்டும்.

ஜெலட்டின்
தலைமுடி வேகமாக வளர இந்த வீட்டு குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.
இரண்டு டேபிள்ஸ்பூன் ஜெலட்டின், இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீரை, ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை எடுத்து கொண்டு நன்கு கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். பின்னர் இதை தலைமுடி முழுவதும் தடவி, ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

வெங்காயம் மற்றும் தேன்
தலைமுடி உதிர்வதை குறைக்கவும், அடர்த்தியை அதிகரிக்கவும் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. வெங்காயச் சாறு மற்றும் தேன் கலந்து எடுத்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தயிர் சேர்த்து கொள்ளலாம். இந்த பேஸ்டை தலை முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து, தலைக்கு குளித்து விட நல்ல மாற்றம் ஏற்படும்.

வாழைப்பழம், தேன் மற்றும் முட்டை செய்யும் அதிசயம்
மேற்கூறிய எல்லாம் பொருட்களிலும் சத்துகள் நிறைந்து உள்ளன. தேன் முடியை ஈரப்பதமுடன் வைக்கவும், முட்டை முடி வளர்ச்சியை அதிகப்படுத்தவும், வாழைப்பழம் முடிக்கு தேவையான ஊட்டமளிக்கவும் பயன்படுகிறது. மேற்பட்ட மூன்று பொருட்களையும் நன்கு அரைத்து தலையில் தேய்த்து 40-50 நிமிடம் கழித்து சாம்பூ போட்டு குளித்து விடுங்கள்.

நெல்லிக்காய்
நெல்லிக்காயில் உள்ள நோய் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மூலப் பொருட்கள் முடியின் நீளத்தை கூட்ட பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் பேஸ்ட் போலவோ அல்லது ஆயில் போன்றோ தலையில் தேய்க்கலாம். சில வாரங்களிலேயே வியக்கத்தக்க மாற்றத்தை உணரலாம்.
ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து எடுத்து கொள்ளவும். இதை கொதிக்க வைத்து பின்னா் வடிகட்டி முடியின் வேர்களில் மற்றும் முடி முழுவதும் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அடுத்த நாள் தலைக்கு குளித்து விட வேண்டும். இதை சில வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வர வேண்டும். ஒரு கப் சுடுநீரில் ஒரு கப் நெல்லிக்காய் கலந்து 10-15 நிமிடங்களுக்கு பிறகு இந்த கலவையை கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். சாம்பூ இல்லாமல் தலைக்கு குளித்து வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்.

வெங்காயம் சாறு, தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர்
தலைமுடி பிரச்சினைக்கு ஒரு வரப்பிரசாதமாகவே வெங்காயம் உள்ளது. வெங்காயம் சாறு, தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் கலந்து தலையில் மசாஜ் செய்து வந்தால் விரைவில் தலைமுடி அடர்த்தி அதிகரிக்கும். வெங்காயத்தில் உள்ள சல்பர், கோலஜினை உற்பத்தி செய்வதால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.

சீரகம்
நமது பாட்டிமார்கள் காலத்தில் இருந்தே சீரகம் முடி வளர்ச்சிக்கு பயன்படுகிறது. சீரகத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து காணப்படுகிறது. அதிலுள்ள சிலிகான் தலைமுடி அடர்த்தியை அதிகரிக்கவும், நீளத்தை கூட்டவும் பயன்படுகிறது. சீரகத்தை இரவு முழுவதும் ஆலிவ் ஆயிலில் ஊற வைத்து அடுத்த நாள் காலை தலை முழுவதும் இதை தடவி மசாஜ் செய்து பின்னர் 10-15 நிமிடங்கள் கழித்து இளம் சூடான நீரில் குளிக்க வேண்டும்.

கிரீன் டீ
கிரின் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், பாக்டீரியா எதிர்ப்பு பொருட்கள் அதிகமாக உள்ளதால் இது முடி உதிர்வதை குறைக்கவும் மற்றும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தவும் துணைபுரியும். கிரின் டீ யை சூடாக்கி பின்னர் ஆறியதும் இதை தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

ஆயில் மசாஜ்
தலைக்கு அடிக்கடி மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடி வேர்கள் ஆரோக்கியமாகும். இதனால் முடி உதிர்வது குறையும். இளம் சூடான தேங்காய் எண்ணெய் விட்டு தலை முழுவதும் வட்ட வட்டமாக மசாஜ் செய்து வந்தால் விரைவில் முடி அடர்த்தியை அதிகரிக்கலாம். ஜொஜோபா ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி மசாஜ் செய்யலாம். பொடுகு தொல்லைக்கு ரோஸ்மேரி ஆயில் சிறந்த தீர்வு ஆகும். தலைக்கு மசாஜ் செய்த பிறகு ஒரு டவலால் தலையை கட்டி விட வேண்டும் இதனால் இன்னும் பலன்கள் அதிகமாகும்.

தலைமுடியை பாதுகாக்கும் சரிவிகித உணவு
சரிவிகித உணவு எடுத்து கொள்வதால் தலைமுடி அடர்த்தி அதிகரிக்கும் முடி உதிர்தல் குறையும். தேவையான மினரல்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்த உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பு தாது மற்றும் விட்டமின் சி, பி, காப்பர் மற்றும் சின்க் போன்ற சத்துகள் முடி வளர்ச்சிக்கு அவசியமானது. நிறைய தண்ணீர் குடிப்பது தலைமுடி சார்ந்த பிரச்சினைகளை குறைக்கும்.

கன்டிஷனிங்
சிறந்த கண்டிஷனர் முடியை மினுமினுக்க வைத்து மிருதுவாக்கும். சாம்பூ போட்டு குளித்த பின்னர் தலைக்கு கண்டிஷனர் போடுங்கள். தலையின் வேர்கால்களில் தடவாமல், வேர்கால்களில் இருந்து 1-2 இன்ச் கீழேயே தடவுங்கள்.

சோற்று கற்றாழை
தலைமுடி பிரச்சினைக்கு சோற்று கற்றாழை சிறந்த தீர்வாக அமையும். முடிக்கு தேவையான ஊட்டமளிக்கவும் முடி வளர்ச்சிக்கும் சோற்று கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. தலை முழுவதும் சோற்று கற்றாழை ஜெல் தடவி மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் நீங்களே ஆச்சரியம் அடையும் வகையில் முடி வளர்ச்சி அதிகமாகும்.

கெமிக்கலுக்கு நோ செல்லுங்கள்
முடியை அழகாக்க என்று பெயரில் செய்யப்படும் ஸ்ட்ரைட்னிங், கலரிங், பெர்மிங் போன்றவை தான் தலைமுடிக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. இதை செய்வதால் முடி வறண்டு பொலிவு இழந்து அடர்த்தி இல்லாமல் ஆகிவிடும். மற்றும் முடியின் வேர்களை பலமிழக்க செய்து விடும். அதனால் இவற்றை அறவே தவிர்த்து விடுங்கள்.

முட்டை
முட்டையில் உள்ள புரோட்டின்கள் தலைமுடியை உறுதியாக்கும். முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை நன்கு கலந்து தலைக்கு 'பேக்' போடுங்கள். 10 நிமிடம் கழித்து இளம் சூடான நீரில் சாம்பூ போட்டு குளித்து விட வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

வெந்தயம்
வெந்தயம் தலைமுடி அடர்த்தியை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இரவு முழுவதும் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலை நன்கு அரைத்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வந்து தலையில் தேய்த்து விடுங்கள். பின்னர் 1 மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விட வேண்டும். இதனால் முடியின் ஷைனிங் அதிகரிக்கும். வாரம் ஒரு முறை செய்ய வேண்டும்.

உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கு சாற்றில் விட்டமின் ஏ, பி, சி நிறைந்து காணப்படுகிறது. உருளைக்கிழங்கு சாற்றை தலையில் தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து சாம்பூ தேய்த்து குளித்தால் தலைமுடி அடர்த்தி அதிகரிக்கும். வாரம் இருமுறை இதை தொடர்ந்து செய்ய வேண்டும்.

நெல்லிக்காய் பேக்
தலைமுடி உதிர்வதை குறைக்கவும், தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தவும் நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த கால அவகாசத்திலேயே இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். நெல்லிக்காய் சேர்க்கப்பட்டுள்ள தலைமுடி சார்ந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

செம்பருத்தி
தலைமுடி பிரச்சினைக்கு பயன்படுத்தப்படும் ஒரே மலர் செம்பருத்தி மட்டும் தான். இளநரை பிரச்சினையை செம்பருத்தி குணமாக்கும். செம்பருத்தி பூ பேஸ்ட் உடன் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்த்து சாம்பூ போட்டு குளிக்க வேண்டும்.

மருதாணி செய்யும் மாயம்
மருதாணி தலைமுடி வளர்ச்சியை அதிகமாக்குகிறது. வீட்டிலேயே செய்யப்பட்ட மருதாணியை பயன்படுத்த வேண்டும். கடையில் உள்ள மருதாணியில் கெமிக்கல் அதிகமாக உள்ளது. ஒரு இரும்பு பாத்திரத்தில் சிறிதளவு டீ டிக்காஷன், முட்டை வெள்ளை கரு, எலுமிச்சை, தயிர் மற்றும் மருதாணி பொடி கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலை இதை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தலைமுடி உறுதியாக மாறும்.

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை
தலைமுடி சார்ந்த எல்லாம் பிரச்சினைக்கும் மனஅழுத்தம் ஒரு முக்கிய காரணம் ஆகும். அதிக மனஅழுத்தத்தினால் முடி கருமை மறையும், அடர்த்தி குறையும் மற்றும் முடி உதிரும். உடற்பயிற்சி, சரிவிகித உணவு, யோகா மற்றும் மனஅழுத்தம் குறைக்கும் உங்களுக்கு பிடித்த விஷயங்களை அதிகமாக செய்யுங்கள். மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆலிவ் ஆயில்
நமது சருமத்திற்கும், தலைமுடிக்கும் ஆலிவ் ஆயில் மிக ஏற்றது. தற்போது மார்க்கெட்டுகளில் பல விதமான ஆலிவ் ஆயில் கிடைக்கிறது. ஆலிவ் ஆயிலை தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். சிறந்த தீர்வுகளுக்கு ஆலிவ் ஆயிலை லேசாக கொதிக்க வைத்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 3 நிமிடம் கழித்து சாம்பூ போட்டு குளிக்க வேண்டும்.

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயின் மனம் நம்மில் பல பேருக்கு பிடிப்பதில்லை ஆனால் முடி வளர்ச்சிக்கு இது மிக அவசியமானது. மற்ற எண்ணெயுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த எண்ணெயில் உள்ள விஸ்கோசிட்டி தலைமுடிக்கு மிகுந்த நன்மை தரக்கூடியது. இந்த எண்ணெயில் ஃபேட்டி ஆசிட் மற்றும் விட்டமின் ஈ அதிகம் உள்ளதால் முடி வளர்ச்சிக்கு உதவும். உங்களுக்கு விளக்கெண்ணெய் தேய்த்தால் முடி ஓட்டுவது போல் இருந்தால் நீங்கள் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் உடன் கலந்து சூடாக்கி பயன்படுத்துங்கள்.

அவகேடோ
நம்மில் பலருக்கு பிடித்த இந்த பழம் நமது தலைமுடி பிரச்சினைக்கும் தீர்வாக அமைவது ஆச்சரியம் தான். இந்த பழத்தில் விட்டமின் ஈ அதிகம் உள்ளது. நன்கு பழுத்த ஒரு பழத்தை எடுத்து கொண்டு அதை நன்கு மசித்து, பின்னா் அதில் சிறிது ஆலிவ் ஆயில் மற்றும் கொஞ்சம் வாழைப்பழம் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை இப்படியே ஒரு அரை மணி நேரம் வைத்த பின்னர் தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

சாம்பூ ஏற்படுத்தும் பாதிப்புகள்
நாம் பயன்படுத்தும் சாம்பூ நம் தலையின் வேர்கால்கள் வரை செல்வதால் பொருத்தமான சாம்பூவை தேர்ந்தெடுக்க வேண்டும். தலைமுடி வல்லுநரின் ஆலோசனை பெற்ற பிறகு சாம்பூ தேர்ந்தெடுப்பது சிறந்தது. உங்கள் தலைமுடி வறண்டு போய் இருந்தாலோ அல்லது சராசரியாக இருந்தாலோ தினசரி சாம்பூ பயன்படுத்த வேண்டாம். ஆயிலி தலைமுடிக்கு தினசரி பயன்படுத்தலாம்.

வெங்காயச் சாறு
பாட்டி காலத்தில் இருந்தே தலைமுடி பிரச்சினைக்கு எளிமையான வீட்டு மருந்துகள் மூலமாகவே தீர்வு கண்டுள்ளோம். வெங்காயச் சாற்றில் சல்பர் அதிகமாக உள்ளதால் தலைமுடிக்கு ஏற்றது. வெங்காயச் சாற்றை தலைமுடியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். வெந்தயம் தலைமுடி அடர்த்தியை அதிகரிப்பதில் சிறந்தது. இரவில் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை இதை கொதிக்க வைக்க வேண்டும். ஜெல்லி போன்ற பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அனைத்து ஆறிய பின் தலையில் தடவி மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.

சிகைக்காய்
கெமிக்கல் சாம்பூ பயன்படுத்தி முடி எல்லாம் உதிர்ந்து விட்டதா? இயற்கையான முறைக்கு திரும்ப நேரம் வந்து விட்டது. எல்லா வயதுள்ள பெண்களுக்கும் இது ஏற்றது.

ரிதா
ரிதாவும் தலைமுடி வளர்ச்சிக்கு ஏற்ற ஒரு மூலிகையாகும். முடியை சுத்தமாக இருக்க உதவும். அந்த காலத்தில் இந்த விலையுயர்ந்த சாம்பூவை யாரும் பயன்படுத்த மாட்டார்கள். சிகைக்காய், ரிதா போன்றவற்றை பயன்படுத்தியே அவர்கள் ஆரோக்கியமான தலைமுடி கொண்டு இருந்தார்கள்.

விட்டமின் ஈ மாத்திரைகள்
நம்மில் பல பேருக்கு விட்டமின் ஈ மாத்திரைகள் பற்றி தெரியும். இந்த விட்டமின் சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஏற்றது. இந்த மாத்திரைகள் எல்லா மருந்து கடைகளில் கிடைக்கும். இரண்டு விட்டமின் ஈ மாத்திரைகளை உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு எண்ணெயுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் கலந்து கொண்டு இதை கொண்டு தலை முழுவதும் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடம் கழித்து சாம்பூ போட்டு குளித்து விடுங்கள்.

பூண்டு மற்றும் தேங்காய் எண்ணெய்
நம்முடைய சமையலில் மணம் கூட்ட பூண்டு பயன்படுகிறது. இதே பூண்டை கொண்டு நம்முடைய தலைமுடி பிரச்சினைக்கும் தீர்வு காணலாம். ஒரு கப் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை கொதிக்க வைத்து அதில் இரண்டு பல் பூண்டு சேர்த்து மணம் வரும் வரை கொதிக்க விடுங்கள். இந்த எண்ணெய் கொண்டு தலையில் தடவி மசாஜ் செய்து பின்னர் குளிக்க வேண்டும்.

நிலமுல்லி எண்ணெய்
நிலமுல்லி எண்ணெய் நமது தலைமுடி பிரச்சினைக்கும் ஏற்றது. இந்த எண்ணெய் உடன் ஏதேனும் ஒரு நறுமண எண்ணெய் கலந்து பயன்படுத்துவது சிறந்தது. பின்னர் இதை நமது தலைமுடி முழுவதும் தடவி பயன்படுத்த வேண்டும். இதை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு நாள்தோறும் தலையில் தேய்த்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை
நம் அனைவர் வீட்டிலும் சாதாரணமாக கிடைக்கும் இந்த பொருட்களை கொண்டு நாம் பல விதமான நன்மைகள் அடையலாம். 30-40 புதிதாக பறித்த கறிவேப்பிலை இலைகளை கழுவி சுத்தம் செய்து எடுத்து கொண்டு பின்னர் அதை காய வைத்து கொள்ள வேண்டும்.
இரண்டு கப் தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கி அதில் கறிவேப்பிலை இலைகளை போட்டு 10-15 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இது ஆறியவுடன் இந்த எண்ணெயை வடிகட்டி எடுத்து கொண்டு காற்று புகாத டப்பாவில் ஊற்றி வைத்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை கொண்டு ஒவ்வொரு இரவு உறங்கும் முன்னும் தலையில் தேய்க்க வேண்டும். 2-3 மாதங்களில் நீங்கள் மாற்றத்தை உணரலாம்.

சோற்று கற்றாழை மற்றும் கிரீன் டீ
சோற்று கற்றாழையில் விட்டமின் ஈ அதிகம் உள்ளது. இது நமது தலைமுடியை பாதுகாக்கும். கிரின் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளதால் தலைமுடியில் உள்ள கிருமிகளை அழித்து விடும். இந்த இரண்டையும் கலந்து பயன்படுத்தினால் தலைமுடி பாதுகாக்கப்படும்.
2-3 சோற்று கற்றாழை இலைகளில் இருந்து ஜெல் எடுத்து கொண்டு இதனை 1/2 கப் தண்ணீருடன் கலந்து இளம் சூடாக்கி பின்னர் இதனுடன் 2-3 டேபிள்ஸ்பூன் கிரின் டீ பொடி கலந்து 4-5 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.. பின்னர் இதை வடிகட்டி பின்னர் இதனுடன் புதிதாக பறித்த சோற்று கற்றாழை ஜெல் கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இதை தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து சாம்பூ இல்லாமல் குளிக்க வேண்டும். முடிந்த வரை இதை அதிகமாக செய்ய வேண்டும்.

நறுமண எண்ணெய்
பொடுகு தொந்தரவு மற்றும் கிருமிகளை எதிர்க்க நறுமண எண்ணெய் சிறந்தது. இது புதிய முடிகள் வளர்வதை தூண்டும் மற்றும் பழைய முடிகளை பாதுகாக்கும். சீடர்வுட் மற்றும் சாமந்தி எண்ணெய் சிறந்தது. இதனுடன் பாதாம் எண்ணெய் கலந்தும் பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் சீடர்வுட் மற்றும் சாமந்தி எண்ணெய் தலா இரண்டு சொட்டுகள் எடுத்து கொண்டு பின்னர் 25 துளிகள் பாதாம் எண்ணெய் கலந்து எடுத்து கொள்ள வேண்டும். இதை கொண்டு இரவு தூங்கும் முன் தலையில் மசாஜ் செய்து அடுத்த நாள் காலை தலைக்கு குளித்து விட்டால் 3-6 மாதங்களில் சிறந்த மாற்றத்தை உணரலாம்.



Click it and Unblock the Notifications











