Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் சில ஆயுர்வேத வழிகள்!
ஒவ்வொருவரின் அழகிலும் தலைமுடி முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் இன்று ஏராளமானோர் தலைமுடி சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளால் அவஸ்தைப்படுகின்றனர். அதில் ஒன்று தான் பொடுகுத் தொல்லை. ஒருவருக்கு பொடுகு பல காரணங்களால் வரலாம். அதில் வறட்சியான ஸ்கால்ப், வறட்சியான காலநிலை, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஸ்கால்ப்பில் பொடுகு இருந்தால், தலை அசிங்கமான வெள்ளை செதில்களுடன் காணப்படும்.
ஒருவரது ஸ்கால்ப்பில் பொடுகு அதிகமாக இருந்தால், அது தலைமுடியை பலவீனமடையச் செய்து, தலைமுடி உதிர்வை உண்டாக்கும். அதுவே பொடுகு ஒருவரது தலையில் அதிகமாக இருந்தால், அது தோள்பட்டை, புருவங்கள் மற்றும் உடுத்தும் உடைகளின் மீது உதிர்ந்து மோசமான தோற்றத்தைக் கொடுக்கும். சில சமயங்களில் பொடுகு மன அழுத்தம் அல்லது இதர ஆரோக்கிய பிரச்சனைகளாலும் ஏற்படலாம்.

இத்தகையய பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட பல ஆயுர்வேத வழிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்து, உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதித்துக் கொண்டிருக்கும் பொடுகு தொல்லைக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்.

கற்றாழை
மருத்துவ குணம் கொண்ட கற்றாழையின் ஜெல் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிப்பதோடு, இதர தலைமுடி பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும். ஆகவே கற்றாழையின் ஜெல்லை எடுத்து ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறு நாள் காலையில் தலைமுடியை மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள்.

பாதாம் ஆயில் மற்றும் ஆலிவ் ஆயில்
பாதாம் ஆயில் மற்றும் ஆலிவ் ஆயில் போன்றவை தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறப்பான எண்ணெய்களாகும். இந்த இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால், நல்ல மாற்றத்தைக் காணலாம். அதற்கு பாதாம் மற்றும் ஆலிவ் எண்ணெய்களை ஒன்றாக கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசவும்.

நெல்லிக்காய் பேஸ்ட்
நெல்லிக்காய் பொடி மற்றும் துளசி பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அந்த கலவையை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் தலைமுடியை நன்கு அலசுங்கள். இச்செயலால் பொடுகுத் தொல்லையில் இருந்து விரைவில் விடுபட முடியும்.

மிளகுத் தூள்
பாலில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினையும் கலந்து கொள்ளுங்கள். பின் அந்த திரவத்தை ஸ்கால்ப்பில் நன்கு தேய்த்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின்பு நீரால் தலைமுடியை அலசுங்கள். இந்த வழியால் பொடுகு பிரச்சனைகள் குணமாவதோடு, தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும்.

கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய்
நமது முன்னோர்கள் முந்தைய காலத்தில் பயன்படுத்திய ஓர் வழி தான் இது. அதற்கு சிறிது கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தினமும் இரவு தூங்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். இதனால் கற்பூரத்தில் உள்ள குளிர்ச்சித்தன்மை ஸ்கால்ப்பை குளுமையாக வைத்திருப்பதோடு, பொடுகுத் தொல்லையின் அளவையும் குறைக்கும்.

எலுமிச்சை மற்றும் தயிர்
ஒரு பௌலில் தயிரை எடுத்து, அதில் இரண்டு எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வையுங்கள். அதன் பின் நீரால் தலையை அலசுங்கள். இந்த குளிர்ச்சியான முறையினால் பொடுகை நீக்க முடியும். மேலும் இச்செயலால் ஸ்கால்ப் சுத்தமாகவும், வறட்சியடையாமல் ஈரப்பசையுடனும் இருக்கும்.

தேங்காய் மற்றும் எலுமிச்சை
எலுமிச்சை பல்வேறு தலைமுடி சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து ஸ்கால்ப்பில் தடவுங்கள். பின் 1/2 மணிநேரம் கழித்து, மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசுங்கள். இப்படி குறைந்தது இரண்டு வாரம் தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

முட்டை
முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது தலைமுடிக்கு நல்ல ஊட்டத்தை வழங்கும். எனவே அதற்கு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, நீர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு கொண்டு தலைமடியை அலகுங்கள். இதனால் முட்டை ஸ்கால்ப்பில் இருந்து பொடுகை அறவே போக்கும்.

வெந்தய விதைகள்
இரவில் தூங்கும் முன் வெங்தயம்தை நீரில் ஊற வைத்து, அந்த கலவையை தலைமுடி மற்றும் ஸகால்ப்பில் படும்படி தடவுங்கள். 30-45 நிமிடம் கழித்த பின், நீரால் தலைமுடியை அலசுங்கள். இது தலையில் உள்ள பொடுகுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும். முக்கியமாக இந்த வழியால் தலைமுடி உதிர்வதும் தடுக்கப்படும்.

கடலை மாவு மற்றும் தயிர்
ஒரு சிறிய பௌலில் தயிர் மற்றும் 2 ஸ்பூன் கடலை மாவு, 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அந்த கலவையை ஸ்கால்ப்பில் படும்படி தடவிய பின், 30 நிமிடம் னுற வைத்து, பின் முடியை நீரால் அலசுங்கள். தயிர் மற்றும் கடலை மாவில் கிளின்சிங் பண்புகள் உள்ளதால், இது ஸ்கால்ப் மற்றும் தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

புதினா இலை மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு கப் நீரில் ஒரு கப் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, கொதிக்க வையுங்கள். பின் அதில் சிறிது புதினா இலைகளைப் போட்டு மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். பின்பு அந்த நீரை குளிர வைத்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வையுங்கள். முடியானது காய்ந்த பின், நீரால் தலைமுடியை அலசுங்கள்.

வேப்பிலை மற்றும் எலுமிச்சை
வேப்பிலையை சிறிது அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதில் பாதி எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவுங்கள். பின் இந்த கலவையை ஸ்கால்ப்பில் 30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள். இந்த செயலை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.



Click it and Unblock the Notifications
