For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயுர்வேத முறையில் பொடுகை எளிதாக போக்குவது எப்படி..? செய்முறை உள்ளே...

|

தலை முடி என்பது ஆண் என்றாலும் பெண் என்றாலும் மிக முக்கிய ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. குறிப்பாக இது ஒருவரின் அழகை மெருகேற்ற பெரிதும் உதவுகிறது. சிறிது முடி உதிர்ந்தாலே பலரால் தாங்கி கொள்ள முடியாது. முடி உதிரும் பிரச்சினை இன்று பலருக்கும் இருக்கிறது. முடி உதிர்வது ஒரு சில முக்கிய காரணிகளால் ஏற்படுகிறது. இதில் பொடுகு தொல்லையும் அடங்கும். பொடுகு பிரச்சினையே முடி உதிர முதன்மையான காரணமாக உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Ayurvedic Cures For Dandruff

பொடுகு தொல்லைக்கு நாம் பல வித ஷாம்புக்களை பயன்படுத்தி பார்த்திருப்போம். ஆனால், அவை சிறந்த பலனை தராது. முடியில் உள்ள பொடுகை எப்படி போக்குவது என குழம்பி கொண்டிருப்போர்களுக்கே இந்த பதிவு. ஆயுர்வேத முறையை பயன்படுத்தி பொடுகை விரைவில் நீக்கிவிடலாம். எவ்வாறு என்பதை இனி அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொடுகும் முடி-யும்...

பொடுகும் முடி-யும்...

பொடுகு ஏற்பட முதல் காரணமாக இருப்பது தலை முடியின் அழுக்குகள் தான். தலையில் அதிகமாக அழுக்கு சேர்ந்தால் பொடுகு உருவாகும். முதலில் சிறிய அளவில் இது ஏற்பட கூடும். பின் இவற்றின் அளவு அதிகமாகி முடி உதிர்வை ஏற்படுத்த கூடும். எனவே, பொடுகு அதி பயங்கரமானதாக கருதப்படுகிறது.

வேம்பும் எலுமிச்சையும்

வேம்பும் எலுமிச்சையும்

பொடுகை போக்குவதற்கு பல வழி முறைகள் இருந்தாலும், இந்த ஆயர்வேத முறை மிக அற்புதமான பலனை தரும். இதனை பயன்படுத்தி வந்தால் 2 வாரங்களில் பொடுகு தொல்லை நீங்குமாம்.

தேவையானவை :-

காய் நிறைய வேப்பிலை இலைகள்

எலுமிச்சை சாறு 3 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் வேப்பிலையை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றின் சாற்றை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, எலுமிச்சை சாறை இதனுடன் சேர்த்து தலையில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் பொடுகு தொல்லை குணமாகும்.

கற்பூர வைத்தியம்..!

கற்பூர வைத்தியம்..!

கற்பூரத்தை தலைக்கு பயன்படுத்தினால் நல்ல பயனை எதிர்பாக்கலாம். இவை குறிப்பாக பொடுகு தொல்லையை உடனடியாக நீக்குவதில் இது முக்கிய ஆயுர்வேத முறையாம். இந்த வைத்தியத்தை நம் பாட்டி காலத்திலே பயன்படுத்தினர்.

தேவையானவை :-

தேங்காய் எண்ணெய் 5 ஸ்பூன்

சிறிதளவு கற்பூரம்

MOST READ: தொப்பையை சட்டென குறைக்க நெய்யை சாப்பிட்டாலே போதும்...! மேலும் பல தகவல்கள் உள்ளே...

செய்முறை :-

செய்முறை :-

தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு கற்பூரம் சேர்த்து ஒரு பாட்டிலில் கலந்து வைத்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தினமும் இரவு தூங்குவதற்கு முன் முடியின் அடி வேரில் நன்றாக தடவி மறுநாள் தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

முட்டை வைத்தியம்

முட்டை வைத்தியம்

நாம் முட்டையை பொதுவாகவே சாப்பிடுவதற்கு தான் பயன்படுத்துவோம். ஆனால், இவற்றை தலைக்கு பயன்படுத்தினால் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தேவையானவை :-

முட்டை 2

எலுமிச்சை பழம் 1

செய்முறை :-

செய்முறை :-

முதலில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ள வேண்டும். பின் இதனை நன்றாக அடித்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து, கலந்து கொள்ளவும். இந்த கலவையை முடியின் எல்லா பகுதிகளிலும் தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து தலைக்கு குளித்தால் பொடுகு தொல்லை குறைய தொடங்கும்.

தயிர் மருத்துவம்

தயிர் மருத்துவம்

பொடுகு தொல்லையில் இருந்து உடனடியாக விடுபட இந்த ஆயுர்வேத முறை பயன்படும். இது ஆயர்வேதத்தின் சிறந்த முறையாக கருதுகின்றனர். இதனை தொடர்ந்து செய்து வந்தால் போடுகில் இருந்து விடுபடலாம்.

தேவையானவை :-

கடலை மாவு 2 ஸ்பூன்

தயிர் 1 கப்

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

MOST READ: திருமணமான முதல் 5 நாள், மருமகளை நிர்வாணமாக அமர வைக்கும் வினோத சடங்கு!

செய்முறை :-

செய்முறை :-

முதலில் கடலை மாவை தயிருடன் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறை சேர்த்து நன்கு கலந்து தலையில் தடவி மசாஜ் செய்யவும். பிறகு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு நீங்கும்.

மூன்றும் முக்கியம்...

மூன்றும் முக்கியம்...

முடியை பொலிவு பெற செய்யவும், பொடுகு தொல்லையை சரி செய்யவும் இந்த 3 முக்கிய மூலிகைகள் பயன்படும். இவற்றில் முதன்மையான ஆற்றல்கள் உள்ளன.

தேவையானவை :-

நெல்லிக்காய் 2

சிகைக்காய் 7

ரீத்தா 5

செய்முறை :-

செய்முறை :-

சிகைக்காய், ரீத்தா மற்றும் நறுக்கிய நெல்லிக்காய் ஆகியவற்றை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து கொள்ளவும். பிறகு மறுநாள் காலையில் இதனை எடுத்து கொண்டு, சிறிது நேரம் கொதிக்க விடவும். பின் நன்றாக இவற்றை கலந்து கொண்டு, வடிகட்டி கொள்ளவும். இதனை பயன்படுத்தி தலைக்கு தேய்ந்து குளித்து வந்தால் பொடுகில் இருந்து விடுபடலாம்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Cures For Dandruff

Follow these easy and simple beauty tips for hair to give that lustre and shine, and flaunt your hair like the models do...
Desktop Bottom Promotion