Latest Updates
-
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்!
தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை தூண்ட வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...
இங்கு தலைமுடி உதிர்வதைத் தடுத்து அதன் வளர்ச்சியைத் தூண்டும் ஹேர் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை தலைமுடி உதிர்வதைத் தடுக்க உதவும் ஏராளமான வழிகளைப் பற்றி படித்திருப்பீர்கள் மற்றும் முயற்சியும் செய்திருப்பீர்கள். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர் பேக் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும். குறிப்பாக இந்த ஹேர் பேக் செய்வதற்கு நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களே போதும்.

சரி, இப்போது தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்ட உதவும் ஹேர் பேக் குறித்து காண்போம். அதைப் படித்து முயற்சித்து நன்மைப் பெறுங்கள்.

தேவையான பொருட்கள்:
1.
வாழைப்பழம் - 2

2.
முட்டை மஞ்சள் கரு - 1

3.
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை:
முதலில் வாழைப்பழத்தை கையால் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை #1
தயாரித்து வைத்துள்ள ஹேர் பேக்கை, ஸ்கால்ப் மற்றும் தலைமுடியின் முனை வரை நன்கு தடவிக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை #2
பின்பு பிளாஸ்டிக் கவர் அல்லது ஷவர் கேப் கொண்டு தலையை நன்கு சுற்றி, 40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை #3
இறுதியில் தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை நன்கு அலச வேண்டும்.

குறிப்பு
இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடி உதிர்வது படிப்படியாக குறைந்து, அதன் வளர்ச்சியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.



Click it and Unblock the Notifications
