Latest Updates
-
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப கற்றாழை எண்ணெய் யூஸ் பண்ணுங்க...
இங்கு தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க கற்றாழை எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
கற்றாழை மிகவும் அற்புதமான மூலிகைப் பொருள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியம் முதல் சருமம், தலைமுடி போன்றவற்றின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வல்லது. தலைமுடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள், கற்றாழை ஜெல்லைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.

அதற்கு கற்றாழை ஜெல்லை நேரடியாகவோ அல்லது அதனைக் கொண்டு எண்ணெய் தயாரித்தோ பயன்படுத்தலாம். ஆனால் கற்றாழை எண்ணெய் தயாரித்து வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், மூன்றே மாதங்களில் தலைமுடி நன்கு வளர்ந்திருப்பதைக் காணலாம்.
உங்களுக்கு கற்றாழை எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

தேவையான பொருட்கள்:
கற்றாழை இலை - 1 (2-4 இன்ச் நீளமுள்ளது)
தேங்காய் எண்ணெய் - 50 மிலி

செய்முறை #1
முதலில் கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுக்கும் போது அதில் உள்ள மஞ்சள் நிற பகுதியை தப்பித்தவறியும் எடுத்துவிட வேண்டாம்.

செய்முறை #2
பின் ஒரு பௌலில் கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து, 2-3 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.

செய்முறை #3
பின்பு ஊற வைத்துள்ள கற்றாழை ஜெல் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, குறைவான தீயில் 10-15 நிமிடம் நன்கு கிளறி விட்டு சூடேற்றி, ஒரு பதத்திற்கு வந்ததும் இறக்கி குளிர வைத்து, வடிகட்டினால், கற்றாழை எண்ணெய் தயார்.

பயன்படுத்தும் முறை
கற்றாழை எண்ணெயை இரவில் படுக்கும் முன் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்வதால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று வலிமையடைந்து, அதன் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும்.



Click it and Unblock the Notifications