முடிப் பிரச்சனைக்கு இஞ்சியை பயன்படுத்துங்க !

Posted By:
Subscribe to Boldsky

வீட்டில் எளிதாக கிடைத்திடும் இஞ்சியில் ஏராளமான ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள் இருக்கிறது.அதனை எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்காக மட்டுமல்ல அழகுக்காகவும் பயன்படுத்தலாம் குறிப்பாக தலைமுடிக்கு மிகவும் நல்லது.தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பொடுகை அழிக்கவும் பயன்படுகிறது.ஆசியாவின் பல்வேறு நாடுகளில் இஞ்சியை தலைமுடிக்கு பயன்படுத்துகிறார்கள்.

இஞ்சியை தலைமுடிக்கு தடவியவுடன் ஒரே நாளில் உங்களுக்கு முடிவு தெரியாது என்பதால் தொடர்ந்து பயன்படுத்துவதை நிறுத்தக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி உதிர்வை தடுக்க :

முடி உதிர்வை தடுக்க :

இஞ்சியை லேசாக நெருப்பில் சுட்டுக்கொள்ளுங்கள்.பின்னர் தோலை நீக்கி அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை தலைமுடியின் வேர்கால்களில் படும்படி நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள்.அரை மணி நேரம் கழித்து தலைக்குளிக்கலாம். இது முடியின் வறட்சியை தடுத்திடும் இதனால் முடி உதிர்வதை தடுத்திடும்.

வெங்காயச் சாறும் இஞ்சிச்சாறும் :

வெங்காயச் சாறும் இஞ்சிச்சாறும் :

சின்ன வெங்காயத்தை லேசாக வறுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்துக் கொண்ட வெங்காயத்தின் பாதியளவு இஞ்சியை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இதனை அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைத்திடுங்கள். அதனை ஒரு நாள் முழுக்க அப்படியே வைத்திருந்தால் தெளிந்த எண்ணெய் மேலே வந்துவிடும்.எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது அதனை பயன்படுத்தலாம்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் :

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் :

இஞ்சி உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவிடுகிறது.வாரம் ஒரு முறை இஞ்சியை அரைத்து வாரம் ஒரு முறை தலையில் ஹேர் பேக்காக போட்டு ஒரு மணி நேரம் கழித்து தலைக்குளித்துவிடுங்கள்.

இஞ்சியும் ஆலிவ் எண்ணெய் :

இஞ்சியும் ஆலிவ் எண்ணெய் :

ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுதை மூன்று டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயில் ஊற வைத்திடுங்கள். பின்னர் அதனை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்திடுங்கள். இளஞ்சூடான நீரில் இதனை கழுவிடலாம்.ஏதேனும் எரிச்சல் இருந்தால் உடனடியாக கழுவி விடங்கள் சிலருக்கு இஞ்சி இரிட்டேஷன் கொடுக்கும்.

இஞ்சி- தேங்காய் எண்ணெய் :

இஞ்சி- தேங்காய் எண்ணெய் :

ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு பாதியளவு இஞ்சியை எடுத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை தலையில் தேய்த்து மைல்ட் ஷாம்பு போட்டுத் தலைக்குளிக்கலாம்.

பொடுகு :

பொடுகு :

தலையில் உள்ள செல்கள் பாதிப்பு ஏற்பட்டால் பொடுகு ஏற்படும். அதோடு பொடுகு ஏற்பட காரணமான பூஞ்சானை அழித்திடவும் இஞ்சி முக்கிய காரணியாக அமைந்திடும். இதனால் இஞ்சியை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை நீங்கிடும்.

இஞ்சி-எலுமிச்சை :

இஞ்சி-எலுமிச்சை :

இரண்டு டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து கொள்ளுங்கள். இத்துடன் அரை டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் கலந்து தலையில் மாஸ்க் போல போட்டுக் கொள்ளுங்கள்.வாரம் மூன்று முறை இதனை செய்யலாம். எலுமிச்சை ஆண்டி பாக்டீரியல் க்ளன்சராக பயன்படுத்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

hair care tips with ginger

Mainly ginger is used for health.Here some of hair care tips
Story first published: Monday, August 14, 2017, 10:33 [IST]