இளநரையை நிரந்தரமாக கருமையாக்க வழிகள் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நரைமுடி என்பது முதுமையின் அடையாளமாக இருப்பது மறைந்துவிட்டது. இப்போதெல்லாம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கே நரைமுடி வருவது அதிகரித்து வருகிறது.

சுற்றுச்சூழல் மாசு,அதிக டென்சன், ஊட்டச்சத்து இல்லாத உணவுகள் போன்றவற்றால் இளநரை வருவது அதிகரித்து வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடியின் நிறம் :

முடியின் நிறம் :

உங்கள் முடியின் நிறம் உங்கள் பிறப்பின் போதே நிர்ணயிக்கப்பட்டுவிடும்.நம் முடியின் வேர்ப்பகுதியின் உறை ஒன்று அடியில் இருக்கும். இங்கே மெலானோசைட்ஸ் என்கிற செல்கள் தங்கியுள்ளன. இவைதான் நம் முடிக்கு நிறமளிக்கு "மெலானின்' என்ற நிறமியை உற்பத்தி செய்கின்றன. மெலானின் அளவுப்படிதான் நம் முடியின் நிறம் அமையும்.

காரணங்கள் :

காரணங்கள் :

மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரை, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை தலை முடி உதிரும். சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும் அல்லது நரைமுடி வரும்.

பொடுகு :

பொடுகு :

தலையில் பொடுகு அதிகமாக இருந்தால், அவை முடியின் வேர்கால்களை அடைத்துவிடும். இதனால் மெலனின் உற்பத்தி குறைந்து நரைமுடி அதிகரிக்கும்.

ஷாம்பு :

ஷாம்பு :

தலைக்கு பயன்படுத்தும் சில ஷாம்புவில் வீரியமிக்க வேதிப்பொருட்கள் இருக்கும் அதனை தொடர்ந்து பயன்படுத்துகையில் அதிலிருக்கும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு முடியின் வேர்கால்களை சேதமடையச் செய்திடும். இதனால் மெலனின் உற்பத்தி பாதிக்கப்பட்டு நரைமுடி தோன்றுகிறது.

மாற்று கிடையாது :

மாற்று கிடையாது :

வயது ஆக ஆக இந்த "மெலானின்' உற்பத்தி குறைந்து போகும். ஒரு கட்டத்தில் அது நின்றுகூட போகும். அப்படி வயதின் காரணமாக "மெலானின்' உற்பத்தி நின்று முடியின் நிறம் வெள்ளையாகிவிட்டால், அதற்கு மாற்று என்று எதுவுமே கிடையாது.

செயற்கையான டை அடிப்பது, இயற்சை தாவரப் பொருட்களைத் தலையில் பூசி முடியின் நிறத்தை கருமையாகவோ பழுப்பு நிறமாகவோ மாற்றலாம். ஆனால் அவை நிரந்தரமில்லை.

ஹேர் டை :

ஹேர் டை :

நரை வந்தவுடனேயே பலரும் ஹேர் டை பயன்படுத்துவதை ஆரம்பித்துவிடுவார்கள். அமோனியா அதிகமிருக்கும் ஹேர் டையினால் பல கெடுதல்கள் ஏற்படும். நரை முடியை பிடுங்குவதால், மெலனின் இல்லாத செல்களில் மற்ற முடிகளுக்கும் சிதறி நரையை அதிகப்படுத்துகிறது.

தொடர்ந்து பயன்படுத்தினால் :

தொடர்ந்து பயன்படுத்தினால் :

தொடர்ந்து தலைமுடிக்கு கலரிங் செய்யும்போது, தலைமுடி ஆரோக்கியம் இழந்து, உடைந்து போகிறது. அதன் தரம் குறைகிறது. இதனால், தலைமுடி உதிர்வதுடன், பல இன்னல்களையும் ஏற்படுத்திவிடுகிறது. அதிலும் ரசாயனம் கலந்த கலரிங் செய்யும்போது, பெரும் பாதிப்புக்குள்ளாகிறது.

தானாக மாறுமா ? :

தானாக மாறுமா ? :

இளநரை வந்ததற்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். உடலில் என்ன குறைபாடு, எதனால் நரை வந்தது என்பதை கண்டறிந்து அதற்கேற்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரும்புச் சத்து, புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள இளநரை தடுக்கப்படும்.தலைக்கு சிகைக்காய், அரப்பு, பாசிப்பயறு மாவு போன்ற இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எப்போதாவது மைல்டு ஷாம்பு உபயோகிக்கலாம்.இதையெல்லாம் செய்தால் இளநரை மறையத் தொடங்கும் மற்றபடி, அது தானாக மறையாது.

தவிர்க்கலாம் :

தவிர்க்கலாம் :

இளநரை வந்தபின்னர் அவதிப்படுவதை விட வராமல் தடுப்பதே சிறந்தது. பீட்ரூட், நாவல்பழம், பீர்க்கங்காய், பாகற்காய், சுண்டைக்காய், நெல்லிக்காய், கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயப்பொடி, இஞ்சி, தேன், தயிர் ஆகியவற்றை ஒரு நாளைக்கு ஒன்றாக உணவில் சேர்த்து வாருங்கள்.

எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகாமல் கூலாக இருந்தாலே பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். இந்த நரைப்பிரச்சனை உட்பட!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About Grey Hair

Facts About Grey Hair
Story first published: Monday, September 4, 2017, 15:27 [IST]
Subscribe Newsletter