For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடியுதிர்வை உடனே தடுக்க இந்த டானிக் யூஸ் பண்ணிப் பாருங்க!

கெமிக்கல் சேர்க்காமல் வீட்டிலேயே இயற்கை மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிற சில எண்ணெய்களைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.

|

கூந்தலைப் பற்றி அதன் வளர்ச்சியைப் பற்றி கவலைப்படுவது தான் பெருங்கவலையாக இருக்கிறது. முடி உதிர்வு, இளநரை, பொடுகு என தலைமுடியில் ஏற்படுகிற பிரச்சனைகளுக்கு சந்தையில் கிடைக்கிற எண்ணற்ற எண்ணெய்களை வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

வரண்ட முடியை சீராக்க அதிக எண்ணெய்ப் பசையும் இல்லாத நார்மலான முடிக்கு என்னென்ன பிரயத்தனங்கள் படுகிறோம் எல்லாவற்றிற்கும் மேலாக முடி நீளமாக வளர வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. கெமிக்கல் சேர்க்காமல் வீட்டிலேயே இயற்கை மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிற சில எண்ணெய்களைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெந்தயம் :

வெந்தயம் :

வெந்தயம் மற்றும் நல்லெண்ணெய் இரண்டுமே தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்கும் என்று எல்லாருக்குமே தெரியும். இதனை தனித்தனியாக பயன்படுத்தாமல் சேர்த்து புதுமையான தலைக்கு போஷாக்கு அளிக்கும் டானிக் செய்யப்போகிறோம்.

இது தலைமுடியின் வறட்சியை கட்டுப்படுத்துவதோடு பொடுகுத்தொல்லையையும் குறைத்திடும். இது தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்திடும்.

அரைகப் அளவு வெந்தயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் நல்லெண்ணையை சூடாக்குங்கள். லேசாக சூடானதும் அதில் வெந்தயத்தை சேர்க்க வேண்டும்வெந்தயம் நிறம் மாறம் வரை அப்படியே கலக்கி விடுங்கள். வெந்தயம் எண்ணெயில் பொறிந்து வாசனை வரும் போது அடுப்பை அணைத்து விடலாம்.

பின்னர் இதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். தலையின் எல்லா ;பகுதிகளுக்கும் குறிப்பாக முடியின் வேர்கால்களுக்கு படுமாறு எண்ணெயை தடவி இரண்டு மணி நேரம் ஊற வேண்டும். பின்னர் தலைக்குளித்து விடலாம்.

Nettle இலைகளில் அதிகப்படியான இரும்புச்சத்து இருக்கிறது

Nettle இலைகளில் அதிகப்படியான இரும்புச்சத்து இருக்கிறது

இது தலைமுடியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நெட்டில் இலைகளைக் கொண்டு டீ தயாரித்து குடிக்கலாம்.அப்படி இல்லையென்றில் இந்த இலைகளை கொண்டு எண்ணெய் தயாரித்தும் பயன்படுத்தலாம்.

ஒரு கப் தண்ணீரில் கைப்பிடியளவு நெட்டில் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்திடுங்கள். சுமார் பத்து நிமிடம் வரை கொதிக்க வேண்டும்.பின்னர் அதனை வடிகட்டி அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து தலைக்கு பயன்படுத்தலாம்.

வினிகர் மற்றும் தேங்காய் எண்ணெய் :

வினிகர் மற்றும் தேங்காய் எண்ணெய் :

நாம் தினமும் பயன்படுத்துகிற தேங்காய் எண்ணெயைக் கொண்டு தலைமுடியின் வளர்சிக்கு உறுதுணையாய் இருக்கும் ஹேர் டானிக் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இயற்கையாகவே தேங்காய் தலைமுடிக்கு ஊட்டம் அளிக்ககூடியது.இதில் சேர்க்க கூடிய வினிகர் தலையை தாக்கும் தொற்றிலிருந்து பாதுகாக்கும்.

இதனை தயாரிப்பதும் மிகவும் எளிமையானது. நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் பத்து முதல் பன்னிரெண்டு சொட்டு வரை ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து கொள்ளுங்கள். எண்ணெயின் அளவு பொறுத்து நீங்கள் சேர்க்க வேண்டிய வினிகரின் அளவு மாறுபடும்.

இதனை வாரம் ஒரு முறை தலைமுழுவதும் தேய்த்து தலைக்குளிக்கலாம்.

Horsetail :

Horsetail :

ஹார்ஸ் டெயில் என்பது ஒரு வகை செடி. அதனைக் கொண்டும் ஹேர் டானிக் தயாரிக்க முடியும். இதிலிருக்கும் சிலிக்கா தலைமுடி வேகமாக வளர்வதற்கு துணை புரிகிறது.

நார்மலாக நீங்கள் ஷாம்பு போட்டு குளித்த பிறகு இந்த செடியை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை தலையில் ஊற்றி அலச வேண்டும்.

ஆலிவ் ஆயில் :

ஆலிவ் ஆயில் :

தலைமுடிக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை நிற்பது இந்த ஆலிவ் ஆயில். தலையில் வறட்சியை போக்கி சாஃப்ட் ஆக்கிடும். இதனால் முடியுதிர்வு தவிர்க்கப்படும். இத்துடன் ரோஸ்மெரி எண்ணெயை கலக்க வேண்டும். இதற்கு இளநரையை போக்கும் ஆற்றல் உண்டு. அதை விட வழுக்கை விழாமல் தவிர்க்கச் செய்திடும்.

வழுவழுப்பான நீளமான கூந்தல் வளர வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். பாதாம் எண்ணெயில் விட்டமின் இ நிறைய இருக்கிறது. இது தலையில் ஏற்ப்பட்டிருக்கும் அரிப்பு , பொடுகு ஆகியவற்றை நீக்கும்.

ஒரு ஸ்பூன் ரோஸ் மேரி எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள் அத்துடன் மூன்று ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெயை சேர்த்து நன்றாக சூடாக்க வேண்டும். இதனைக் கொண்டு தலைடில் மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு தலைக்குளிக்கலாம்.

வேப்பிலை :

வேப்பிலை :

இயற்கையாகவே வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது. தலையில் ஏற்படும் தொற்று, பாக்டீரியா பாதிப்பு ஆகியவற்றிற்கு தீர்வாக அமைந்திடுகிறது.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

விட்டமின் பி :

விட்டமின் பி :

இன்றைக்கு வயது வித்யாசமின்றி இளையோருக்கு நரைமுடி வர ஆரம்பித்து விட்டது. வைட்டமின், 'பி' குறைவினால், விரைவில் தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். ஊட்டசத்துமிக்க உணவே, இக்குறைபாட்டை நீக்கும். கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் இளநரை கட்டுப்படும்.

தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்த தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாக மாறிடும்.

செம்பருத்தி :

செம்பருத்தி :

செம்பருத்திப்பூவை இடித்து சாறு பிழித்துகொள்ளுங்கள். இந்த சாறுக்குச் சமமாக தேங்காய் எண்ணெய் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்துக் காய்ச்சுங்கள். தேங்காய் எண்ணெய்யின் கொதி வாசனை வருவதற்கு முன்பே இறக்கி விடுங்கள்.

இந்த தைலத்தை தினமும் தேய்த்து வர, முடி வளர்ச்சி தூண்டப்படும் கருகருவென முடி வளரும். தலையில் உள்ள பிசுக்கைப் போக்கவும் இந்தத் தைலம் பயன்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing tonics for long hair

hair tonic is a kind of hair product, which can deal with many of your hair issues easily such as removal of dandruff, dryness in the hair, and treating scalp infections.
Story first published: Monday, November 13, 2017, 12:52 [IST]
Desktop Bottom Promotion