கூந்தல் உதிர்வை தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய 7 வழிமுறைகள்!!

Posted By: Bala Karthik
Subscribe to Boldsky

சுருளாகவோ அல்லது பிசுபிசுப்புடனோ உங்கள் முடி போக...கடைசியாக அது பார்ப்பதற்கு, தலை மேல் கட்டிய குருவி கூட்டினை போல் ஆகிவிடுகிறது. இதனால், பயம்கொள்ளும் பெண்கள்...உடனடியாக, கூந்தலை பராமரிக்க பயன்படும் பொருட்களை கொண்டு கூந்தலை கழுவ முயற்சிக்கின்றனர். சேர்த்து கொள்வதும், துலக்குதலும் (Brushing), பின்னிகொள்வதும், கட்டி கொள்வதும் என முடியில் பலவித முயற்சிகளை செய்து அவர்கள் குழப்பம் அடைய, எத்தகைய முயற்சிகளும் அவர்களுக்கு இறுதியில் பலனளிப்பதில்லை.

எனவே நீங்களும், கூந்தலை பராமரிக்க ஆசைகொள்ளும் ஒரு பெண்ணாக இருந்தால், பக்கவிளைவுகள் அற்ற கூந்தலை பாதுகாக்கும் பொருளையே விரும்புவீர்கள். அப்படி என்றால், உங்களுக்கு தீர்வினை தர துடிக்கும், முயற்சித்த, சோதனை செய்யப்பட்ட சில தீர்வுகளை பற்றி நாம் இப்பொழுது தெரிந்துகொள்ளலாம்.

10 Tried And Tested Ways For A Good Hair Day At Work

இந்த கூந்தல் பாதுகாப்பு தீர்வுகள், உங்கள் பிரச்சனைகளை நிரந்தரமாக போக்குவதுடன், முடியை பல வழிகளில் பராமரித்து, ஆரோக்கியமான மற்றும் மிளிரும் கூந்தலையும் உங்களுக்கு தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சரியான தலையணை அவசியம்:

சரியான தலையணை அவசியம்:

காலையில் எழுந்தவுடன் உங்கள் சிகை அலங்காரம் என்பது சரியாக வராமல் சிக்கலை தருகிறதா? அதற்கு காரணம், இரவில் நீங்கள் உபயோகப்படுத்தும் தலையணையை., தவறாக தேர்வு செய்வதனாலே என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம், நீங்கள் தூங்கும்பொழுது, உங்களுடைய கூந்தலானது தலையணையுடன் வெகு நேரத்துக்கு நேரடி தொடர்பினை வைத்து இருக்கிறது. அதனால், இந்த பிரச்சனைக்கு தீர்வாக, ஒண்பட்டுத்துணியால் ஆன தலையணை சிறந்த தீர்வாகிறது..

கூந்தலை சரியான நேரத்தில் அலச வேண்டியது அவசியம்:

கூந்தலை சரியான நேரத்தில் அலச வேண்டியது அவசியம்:

வேலைக்கு செல்லும் முன் உங்கள் கூந்தலை கழுவும் பழக்கத்தை தினசரி கடைப்பிடிப்பது நல்லதாகும்.

இருப்பினும், இதற்கான நேரம் என்பது மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது. அப்படி என்றால், நம் கூந்தலை எப்படி கழுவுவது? இரவு நேரத்தில் தூங்கும் முன் கழுவ போதுமான நேரம் நமக்கு கிடைக்கிறது. இதனால் அவசர கதியில் காலையில் அரைகுறையாக கழுவுவதை தவிர்க்கலாம்.

கூந்தல் வாகினை மாற்ற வேண்டும் :

கூந்தல் வாகினை மாற்ற வேண்டும் :

நீங்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஸ்டைலில் உங்கள் கூந்தலையும் வைத்துகொள்ளலாம். அதற்கு ஒரு சிம்பிள் டிப்ஸ் என்னவென்றால்...வாகு எடுப்பதனை மாற்றம் செய்வதே. ஓரே மாதிரியான வாகு எடுப்பதன் மூலம் பார்ப்பவர்களுக்கு அது சலிப்பினை உண்டாக்கலாம்.

அதோடு மட்டுமல்லாமல், இதனால் உங்கள் உச்சந்தலையின் அந்த குறிப்பிட்ட இடத்தில் (வாகு எடுக்கும் இடம்) முடி குறையவும் வாய்ப்பிருக்கிறது. அதனால், உங்கள் வாகை ஒவ்வொரு நாளும் மாற்றுவதன் மூலம்...உங்களுக்கு புதிய தோற்றம் கிடைப்பதுடன் சிறந்த கூந்தலையும் அது உங்களுக்கு தருகிறது.

 கூந்தம் பராமரிப்பு பொருட்கள் :

கூந்தம் பராமரிப்பு பொருட்கள் :

ஷாம்புவில் தொடங்கும் பெண்களின் கூந்தல் பாதுகாப்பு பொருட்கள், ஹேர் ஆயில் மற்றும் கண்டிஷனர் (சீரமைப்பி) என அதிகரித்துகொண்டே செல்கிறது.

அப்படி பட்ட உங்கள் புதிய பொருட்கள் பட்டியலில், ட்ரை ஷாம்பு, ஹேர் வால்யூமிசர் (Hair Volumizer), மௌசி (Mousse), முடி சீரம் (Hair Serum) ஆகியவைகளும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இந்த புதிய கூந்தல் பராமரிப்பு பொருட்கள், சிறந்த கூந்தலை தந்து பணியின் வேகத்தை முன்னுரிமைபடுத்த, வேகமாகவும், வேர்களிலிருந்து கூந்தல் வளரவும் இது உதவி செய்கிறது.

டவலை மாற்றும் பழக்கம் நன்மை தரும்:

டவலை மாற்றும் பழக்கம் நன்மை தரும்:

உங்கள் கூந்தல் இறுகி தொங்குமெனில், அலுவலகத்திற்கு செல்லும்முன் அது பெரும் எரிச்சலை உங்கள் மனதில் ஏற்படுத்துகிறது. அவ்வாறு நீங்கள் கூந்தலுடன் போராடும் பொழுது...என்றாவது ஒரு நாள் இந்த கூந்தல் பிரச்சனைகளுக்கான காரணத்தை பற்றி யோசித்திருக்கிறீர்களா? அதற்கு காரணம், வேறுஒன்றுமில்லை. உங்கள் டவல் மென்மையானதாக இல்லாமல் போக, அதனாலே உங்கள் கூந்தலின் தோற்றமானது அவ்வாறு காணப்படுகிறது. உங்கள் டவலை மாற்றி ஒரு பழைய பனியனை எடுத்துகொள்ளுங்கள்.

உங்கள் டயட்டில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்:

உங்கள் டயட்டில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்:

உங்களுடைய கூந்தலுக்கு ஊட்டசத்து அவசியமாக, உடம்பின் மற்ற உறுப்புகளை விட முக்கியமானதாகவும் அவை இருக்கிறது. கீரை, தயிர், சால்மன் மீன்கள், இலவங்கப்பட்டை, ஓட்ஸ், கொய்யா பழங்கள், முட்டைகள், பயறு என பலவற்றில் இருக்கும் ஊட்டசத்து, உங்கள் கூந்தலை பாதுகாக்க முன்வருகிறது.

அதேபோல், தண்ணீரை நாம் எடுத்துகொள்ள வேண்டிய அளவும் அதிகமாகவே இருப்பதில் நமக்கு கவனம் தினசரி தேவைப்படுகிறது.

இவற்றினை நாம் தினமும் பின்பற்றிவர...உங்களுடைய டையட் உங்களுக்கு உதவி செய்து, அனைத்து நாட்களையும் அருமையானதொரு நாளாக தர முந்துவதுடன் கூந்தல் பிரச்சனைக்கு முற்றுபுள்ளியையும் வைக்கிறது.

 சுடு தண்ணீருக்கு நோ :

சுடு தண்ணீருக்கு நோ :

ஒரு சிலர் கூந்தலுக்கு, குளிர்ந்த நீரினை கொண்டு கழுவுவது அவசியம் எனவும் சிபாரிசு செய்யப்படுகிறது. நீங்கள் ஷாம்பினை உபயோகிக்கும் நாட்களில், குளிர்ந்த நீரினை பயன்படுத்துவதா? சுடு தண்ணீரை பயன்படுத்துவதா? என்னும் குழப்பம் வருகிறதா? சுடு தண்ணீர் உங்கள் கூந்தலின் தரத்தை குறைத்துவிடவும் செய்கிறது.

அதனால், குளிர்ந்த நீரினை பயன்படுத்துவதே அந்த நேரத்தில் சிறந்ததாக அமைகிறது என்றும் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Tried And Tested Ways For A Good Hair Day At Work

10 Tried And Tested Ways For A Good Hair Day At Work
Story first published: Saturday, June 17, 2017, 8:00 [IST]