Latest Updates
-
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
பொடுகுத் தொல்லை அதிகமா இருக்கா? அப்ப இத யூஸ் பண்ணுங்க...
இங்கு பொடுகுத் தொல்லையைப் போக்கும் எலுமிச்சை ஹேர் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் தலையில் பொடுகு அதிகமாக உள்ளதா? உங்கள் தலைமுடி கொத்தாக உதிர்வதைக் கண்டு அஞ்சுகிறீர்களா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இக்கட்டுரையில் பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஓர் ஹேர் மாஸ்க் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹேர் மாஸ்க்கில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் ஏராளமாக உள்ளது. மேலும் இதில் சேர்க்கப்படும் எலுமிச்சையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் இருப்பதால், ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்கள் அழிக்கப்பட்டு, ஸ்கால்ப் சுத்தமாக இருக்கும்.
சரி, இப்போது பொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும் ஹேர் மாஸ்க்கை எப்படி போடுவதென்று காண்போம்.

ஸ்டெப் #1
முதலில் 1/2 கப் தயிரை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2
பின் அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #3
அடுத்து 1 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பலரும் தேன் முடியை வெள்ளையாக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தேன் மயிர்கால்களுக்கு ஈரப்பதமூட்டி, முடியை மென்மையாக வைத்துக் கொள்ளும்.

ஸ்டெப் #4
பின்பு அத்துடன் 3-4 துளிகள் டீ-ட்ரீ எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். டீ-ட்ரீ எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் உள்ளது. இது பொடுகை எளிதில் அழித்து விரட்டும்.

ஸ்டெப் #5
பின் தலைமுடியை சீப்பால் சீவி, சிக்கு எடுத்துவிட வேண்டும். ஒருவேளை தலைமுடி மிகவும் வறட்சியுடன் இருந்தால், தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவ வேண்டும்.

ஸ்டெப் #6
பின்பு கலந்து வைத்துள்ள கலவையை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவ வேண்டும்.

ஸ்டெப் #7
பின் 1 மணிநேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு நன்கு தலைமுடியை அலச வேண்டும்.

குறிப்பு
இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 1 முறை தலைக்கு போட்டு வந்தால், தலையில் உள்ள பொடுகு நீங்கி, தலைமுடி ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
