Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
நைட் இதெல்லாம் பண்ணிட்டு தூங்குனா முடி ஆரோக்கியமா இருக்கும்!
தற்போது கூந்தல் பிரச்சனைகள் அதிகரித்துவிட்டதால், பலரும் தங்கள் கூந்தலின் மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். அப்படி அக்கறை காட்டுபவர்கள், இரவில் படுக்கும் போது மறந்துவிடுகிறார்கள். ஆம், இரவில் படுக்கும் போது ஒருசில விஷயங்கள் தவறாமல் செய்து வந்தால், முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
பொதுவாக பெண்கள் பலருக்கும் இரவில் படுக்கும் போது, கூந்தலை கட்டிக் கொண்டு படுப்பது நல்லதா என்ற சந்தேகம் எழும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை இரவில் படுக்கும் போது கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டியவைகளை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தவறாமல் தினமும் பின்பற்றி வந்தால், கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

முடியை கட்ட வேண்டாம்
தினமும் நாள் முழுவதும் முடியை கட்டிக் கொண்டு இருந்தால், இரவில் படுக்கும் போது, முடியை லூசாக விட்டு தூங்குங்கள். ஏனெனில் நாள் முழுவதும் கட்டியவாறு இருந்ததால், மயிர்கால்களால் சரியாக சுவாசிக்க முடியாமல், அதன் ஆரோக்கியம் அழியும். ஆகவே இரவில் படுக்கும் போது ப்ரீ ஹேர் விட்டு தூங்கினால், மறுநாள் காலையில் கூந்தல் நன்கு புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமாக காணப்படும்.

தலை சீவுங்கள்
எப்போதுமே இரவில் படுக்கும் முன், சீப்பு கொண்டு ஒருமுறை தலையை சீவ வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

ஸ்கால்ப்பை மசாஜ் செய்யவும்
இரவில் படுக்கும் முன், கை விரல்களால் ஸ்கால்ப்பை சிறிது நேரம் மசாஜ் செய்து விட வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, மன அழுத்தம், தலை வலி போன்றவையும் நீங்கும்.

எண்ணெய் தடவவும்
தினமும் இரவில் ஸ்கால்ப்பிற்கு சிறிது எண்ணெய் தடவ வேண்டும். குறிப்பாக கோடையில் இந்த செயலை தவறாமல் செய்ய வேண்டும். இதன் உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

முடி வெடிப்பை நீக்கவும்
உங்கள் கூந்தலின் முனையில் அதிக முடி வெடிப்பு இருந்தால், அதனை இரவில் படுக்கும் முன் நீக்குங்கள். இல்லாவிட்டால், வாரம் ஒருமுறையாவது இச்செயலை செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
