Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மளமளவென கூந்தல் வளர உதவும் இந்திய மசாலாப் பொருட்கள்!
ஆண்களோ, பெண்களோ முடி உதிர்வது என்பது இருபாலருக்கும் உள்ள பெரிய பிரச்சனை ஆகும். முடி உதிர்வதால் மனமுடைபவர்கள் பெரும்பாலானவர்கள் உள்ளனர். ஏன்? நீங்களும் கூட அதில் ஒருவராக இருக்கலாம். முடி உதிர்வது என்பது, சிலருக்கு பரம்பரை பிரச்சனையாக இருக்கும், சிலருக்கு புதிதாக வேலை நிமிர்த்தமாய் வெளியூர் சென்று வந்தால் இந்த பிரச்சனை வரும். ஒரு சிலருக்கு அவர்கள் உபயோகிக்கும் ஷாம்பு, ஹேர் டை போன்றவற்றின் மூலம் முடி உதிரும் பிரச்சனை ஏற்படும்.
குளிர்காலத்தில் தலையில் உள்ள பொடுகையும், அரிப்பையும் தடுப்பது எப்படி?
இதற்கான தீர்வு பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கும். கூந்தலுக்கு நல்ல பயனளித்து நன்கு வளர ஏதேனும் மருந்து உண்டா என உலகம் முழுவதும் தேடிக் கொண்டு இருகின்றவரா நீங்கள்? கவலையை விடுங்கள். கூந்தல் நன்கு வளர்வதற்கு ஏற்ற மருந்து உங்களது சமையல் அறையிலேயே உள்ளது. ஆம்! சில இந்திய சமையல் மசாலா பொருட்களின் மூலம் நமது கூந்தல் நன்கு வளர வாய்ப்புகள் உண்டு. மேலும் அறிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்...

சேஜ் - மூலிகை இலை
இந்த மூலிகையின் நற்பண்புகள் சொட்டை வராமல் இருக்க உதவுகிறது. இதை உபயோகிப்பதன் மூலம் கூந்தலின் மயிர்கால்கள் வலுவடைவதால் முடி உதிரும் பிரச்சனை குறையும். இந்த மூலிகையை நீங்கள் தலைக்கு குளிக்கும் போது உபயோகிக்கும் ஷாம்புவோடும் கலந்தும் பயன்படுத்தலாம்.

வெந்தயம்
பெரும்பாலானோர் வெந்தயத்தின் பயன்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இது முடி உதிர்வை குறைத்து கூந்தல் நன்கு வளர உதவுவது மட்டும் இல்லாமல் பொடுகு பிரச்சனையில் இருந்தும் விடுபட உதவுகிறது.

தைம் - மூலிகைச் செடி
தைம் மூலிகை செடியில் உயர்ரக இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இந்த மூலிகையை நீங்கள் உச்சந்தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறையும் மற்றும் உங்களது முடி நன்கு அடர்த்தியாய் வளர உதவும்.

தேவாதாரு மர இலை (Cedar Tree)
தலை முடி நன்கு ஆயுள் பெற்று வளர தேவாதாரு மர இலைகள் நல்ல பயன் தருகிறது. தலையில் நன்கு முடி வளர தேவாதாரு மர இலைகள் ஊட்டம் அளிக்கின்றது. தேவாதாரு மர இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை உபயோகப்படுத்துவதன் மூலம் உங்களது தலை முடி நல்ல வலுவடையும்.

கொத்தமல்லி
தலை முடி வளர்வதற்கு கொத்தமல்லி ஒரு சிறந்த மூலப்பொருள் ஆகும். மல்லியை அரைத்து நீங்கள் தலைக்கு உபயோகிக்கும் எண்ணெயில் கலந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி நன்கு வளர்வது மட்டுமின்றி முடியின் வேர்களுக்கும் ஊட்டம் அளிக்கும்

சீரகம்
கருஞ்சீரக விதைகளை நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி அதோடு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து பஞ்சின் மூலம் உச்சந்தலையில் தேய்த்து உபயோகப்படுத்தினால், பொடுகு தொல்லை முழுவதுமாகத் தீரும் மற்றும் தலைமுடி நன்கு வளர தொடங்கும்.



Click it and Unblock the Notifications