Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
ஒல்லியாக இருக்கும் கூந்தலை சரிசெய்வதற்கான சில இயற்கை சிகிச்சைகள்!!!
பொதுவாக கூந்தல் அடர்த்தியாக நீளமாக இருந்தால் தான் அழகாக இருக்கும். தற்போது கூந்தல் உதிர்தலின் காரணமாக, கூந்தலானது ஒல்லியாக அசிங்கமாக காணப்படுகிறது. இதனால் அதனை அடர்த்தியாக்குவதற்கு கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி, கூந்தல் உதிர்தலை குறைக்க முயல்வார்கள்.
இருப்பினும் கூந்தல் உதிர்தலானது குறையாமல் இருக்கும். ஆகவே முடி உதிர ஆரம்பித்தால், உடனே கண்ட கண்ட பொருட்களை பயன்படுத்தாமல், அது எதனால் கொட்டுகிறது என்று முதலில் கண்டறிய வேண்டும். பொதுவாக கூந்தல் உதிர்தலானது மன அழுத்தம், பழக்கவழக்கங்கள், டயட், தண்ணீர் மாற்றம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை என்று பல காரணங்களால் ஏற்படுகிறது.
இதுப்போன்று வேறு படிக்க: பொலிவான மற்றும் ஆரோக்கியமான முடியைப் பெற உதவும் உணவுகள்!!!
எனவே அவற்றை சரிசெய்ய முயற்சித்தால், நிச்சயம் கூந்தல் உதிர்தல் ஏற்பட்டு, முடி ஒல்லியாவதைத் தடுக்கலாம். இங்கு கூந்தல உதிர்வதைத் தடுத்து, கூந்தல் ஒல்லியாவதை தடுக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

நெல்லிக்காய் ஜூஸ்
கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரித்து, கருமையான கூந்தலைப் பெற உதவும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய். ஆகவே நெல்லிக்காய் சாற்றினை, எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

வெங்காயம்
வெங்காயம் கூட கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும். அதற்கு வாரத்திற்கு மூன்று முறை வெங்காயத்தை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து குளித்து வர வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சி அதிகரித்து, அதன் அடர்த்தியும் அதிகரிக்கும்.

இறுக்கமாக கட்ட வேண்டாம்
கூந்தலை எப்போதும் இறுக்கமாக கட்டினால், அது நாளடைவில் கூந்தலை ஒல்லியாக மாற்றும். எனவே எப்போம் கூந்தலை இறுக்கமாக பின்னவோ அல்லது போனி டைல் போடவோ வேண்டாம்.

கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், அது முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் கூட சிறப்பான கூந்தல் பராமரிப்பு பொருட்களில் ஒன்று. அதற்கு விளக்கெண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் 1 மணிநேரம் ஊற வைத்து மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

இறுக்கமான சீப்பு வேண்டாம்
கூந்தல் உதிர்தல் பிரச்சனை அதிகம் இருக்கும் நேரத்தில், தலைக்கு இறுக்கமான சீப்புக்களைப் பயன்படுத்தினால், தலையில் உள்ள முடி அனைத்தும் வந்துவிடும். ஆகவே அப்போது நல்ல பெரிய சீப்புக்களை பயன்படுத்த வேண்டும்.

ஹேர் ட்ரையர்
கூந்தலை எப்போதும் இயற்கையாகவே உலர வைக்க வேண்டும். அப்படி இல்லாமல், ஹேர் ட்ரையர் பயன்படுத்தினால், அது மயிர்கால்களை வலுவிழக்கச் செய்து, கூந்தல் உதிர்தலை அதிகரித்துவிடும்.

ஆரோக்கியமான உணவுகள்
கூந்தல் நன்கு ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டுமானால், வைட்டமின்கள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், பயோடின் மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இவை கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் சக்தி கொண்டவை.



Click it and Unblock the Notifications
