For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூந்தல் பிரச்சனைகளுக்கு உருப்படியான தீர்வு தரும் உருளைக்கிழங்கு!!!

By Karthikeyan Manickam
|

உலகம் முழுவதிலும் பெரும்பாலான மக்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளில் உருளைக்கிழங்கு ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களில் அரிசி, கோதுமை மற்றும் சோளத்திற்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு 4 ஆவது தனி இடத்தைப் பெற்றுள்ளது.

சிலருக்கு உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படும் என்ற போதிலும், உருளைக்கிழங்கால் செய்யப்பட்ட சைடு டிஷ்களுக்கு ஈடு, இணை எதுவும் இருக்காது.

இத்தகைய உருளைக்கிழங்கு நம் உடல் அழகைப் பராமரிப்பதிலும் பெரும் பங்கை வகிக்கிறது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? குறிப்பாக, நம் கூந்தல் அழகிற்கு உருளைக்கிழங்கு பெரிதும் பயன்படுகிறது. இப்போது உருளைக்கிழங்கு கூந்தல் பராமரிப்பிற்கு எவ்வாறு உதவுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கிய கூந்தலுக்கு...

ஆரோக்கிய கூந்தலுக்கு...

உருளைக்கிழங்கைத் தண்ணீருடன் சேர்த்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அத்துடன் ஒரு முட்டை மற்றும் தயிரையும் கலந்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை தலை முடியின் வேர்ப்பகுதி மற்றும் முடியின் அனைத்துப் பகுதியிலும் தடவி, 20 நிமிடங்கள் வரை உலர வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி விட்டு, ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி 20 நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

கருகரு கூந்தலுக்கு...

கருகரு கூந்தலுக்கு...

நரைமுடி உள்ளவர்களுக்கு இது மிகவும் உதவும். உருளைக்கிழங்கின் தோலை மட்டும் எடுத்துக் கொண்டு, அதைத் தண்ணீரில் கலந்து, 20 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின் அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி, அந்த நீரை ஷாம்புவுடன் கலந்து தலைமுடியில் தடவி, பிறகு நீரில் கழுவ வேண்டும். ஒருமுறை விட்டு ஒருமுறை தலைக்குக் குளிக்கும் போது இதைக் கடைப்பிடித்து வந்தால், உங்கள் கூந்தல் கருகருவென்று இருக்கும்.

முடி உதிர்வு நிற்பதற்கு...

முடி உதிர்வு நிற்பதற்கு...

உங்களுக்கு முடி நிறைய உதிர்கிறதா? இந்த முறையைக் கடைப்பிடியுங்கள். 3 ஸ்பூன் உருளைக்கிழங்குச் சாறு, 3 ஸ்பூன் கற்றாழைச் சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேனைக் கலந்து தலைமுடியின் வேர்களில் தடவவும். சுமார் 2 மணி நேரம் கழித்து, ஷாம்பு கொண்டு முடியைக் கழுவவும். வாரத்திற்கு இரு முறை இது போல் செய்து வந்தால், முடி உதிர்வது விரைவில் நிற்கும்.

கூந்தல் வளர்ச்சிக்கு...

கூந்தல் வளர்ச்சிக்கு...

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் உருளைக்கிழங்கை நன்கு சுத்தமாக கழுவி, தோலை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Potato Beauty Tips For Any Hair Problem

Potatoes have been a basic part of everyone’s eating methodology. These are a standout amongst the most broadly utilized vegetables that are found within very nearly every kitchen around the world. You can use potato as beauty ingredient. Let’s talk about it how you could use it hair beauty tips.
Desktop Bottom Promotion