Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
பெண்களே! உங்களுக்கு கூந்தல் உதிர்தலை ஏற்படுத்தும் 10 காரணங்கள் எவை என்று தெரியுமா?
ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் கூட முடி உதிர்ந்து விழும் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆண்களின் முடி இழப்புக்கான காரணங்கள் தனியாக உள்ளன. அதே நேரம் பெண்களுக்கு இந்த காரணங்கள் வேறு மாதிரியாக உள்ளன. முடியின் அடர்த்தி குறைவது, ஆங்காங்கே இடைவெளிகள் ஏற்படுவது அதிகரிப்பது, முடி இருக்கும் வரிசைகள் குறைவது மற்றும் ஆங்காங்கே வழுக்கையான இடங்கள் தென்படுவது போன்றவற்றை முடி இழப்பு பிரச்சனைகளாக கருதலாம்.
அவசியம் படிக்க வேண்டியவை: முடி கொட்டுவதைத் தடுக்கும் இயற்கை பொருட்கள்!!!
எனவே, உங்களுக்கு முடி இழப்பு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான உண்மையான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எந்த அளவிற்கு முடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கேற்றவாறு சீரமைக்கும் செயல்களை செய்யத் தொடங்கலாம். இந்த வகையில் பெண்களுக்கு முடி இழப்பை ஏற்படுத்தும் 10 வகையான பொதுவான காரணங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

மோசமான தலைமுடி அணுகுமுறை
முடியை ஒழுங்குபடுத்தும் ஹேர் ஸ்டைலிங் கருவிகளான - தலைமுடியை நேர்படுத்தும் கருவி மற்றும் சுருள் முடிக்கான கருவி அல்லது ஸ்கால்ப்பை தொடக்கூடிய அழகுப் பொருட்களான ஜெல்கள், மை அல்லது சாயங்கள், ஸ்ப்ரேக்கள், வர்ணங்கள் போன்றவை முடியின் கால்களை சேதப்படுத்தி விடுகின்றன மற்றும் இவற்றை அதிக நாட்கள் தலைமுடியில் பயன்படுத்தி வந்தால் முடி வளர்வதும் தடைப்படுகிறது. இறுக்கமான குதிரை வால் பின்னல், தவறான சீப்புகள், முடியை பிரித்து வைத்து சீவிக் கொள்ளுதல், இந்த நிலையை மேலும் மோசமாக்கி விடுகிறது.

பிசிஓஎஸ்
இந்த நிலையில், ஆண்களுக்கான ஹார்மோன்கள் அல்லது ஆன்ட்ரோஜன்கள் அளவுக்கு அதிகமாக சுரக்கின்றன. அவை முடிக்கால்களில் சிஸ்ட்ஸ் (Cysts) என்று அழைக்கப்படும் சிறிய திரவம் போன்ற பைகளை உருவாக்குகின்றன. ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மையால் நிகழும் இந்த செயல்பாடு உங்களுடைய தலைமுடிய வளருவதையும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. உங்களுடைய உடற்பகுதிகளில் அதிகளவு முடி வளருவதை நீங்கள் காண நேரிட்டால், மண்டையை தடவி பாருங்கள் முடி குறையத் தொடங்கி இருக்கும்.

இரத்த சோகை
நீங்கள் சாப்பிடும் உணவில் குறைந்த அளவு இரும்புச் சத்தை சேர்த்துக் கொள்வதே இரத்த சோகை வருவதற்கான காரணமாகும். மாதவிடாயின் போது மிகவும் அதிகமான இரத்தப்போக்கு இருப்பதும் அல்லது ஃபோலிக் அமிலம் குறைவாக இருப்பதாலும் பல பெண்கள் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உங்களுடைய மயிர்க்கால்களுக்கு போதிய அளவு ஆக்சிஜன் சென்று சேராவிட்டால், அவை பலவீனமாகவும் மற்றும் எளிதில் உடையக் கூடியவையாகவும் மாறி விடுகின்றன. இது தான் தலை முடி உதிர்வதற்கான காரணமாகும்.

மாதவிடாய் நிற்கும் நேரம்
ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் நிற்கும் வேளைகளில் அவர்களுடைய உடலில் நிகழும் எண்ணற்ற மாற்றங்களில் ஒன்றாக தலைமுடி உதிருவதும் உள்ளது. உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் குறைவதன் காரணமாகவே இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக தலைமுடி வறண்டு போகவும் மற்றும் அதன் தொடர்ச்சியாக தலைமுடி இழப்புகளும் ஏற்படுகின்றன. மென்மையான ஷாம்புக்களை பயன்படுத்துவதும் மற்றும் தலைமுடியை கன்டிஷனர் செய்து வைப்பதும் இந்த இடத்தில் பிரச்சனையை தவிர்க்க உதவும் வழிமுறைகளாகும்.

பிரசவத்திற்கு பின்...
நிறைய பெண்கள் பிரசவத்திற்குப் பின்னர் தங்களுடைய தலைமுடி குறைந்திருப்பதை அனுபவித்திருப்பார்கள். ஏனெனில், பிரசவ காலங்களில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மிகவும் அதிக அளவு உடலில் இருக்கும், பிரசவம் முடிந்த பின்னர் இந்த அளவு குறைவதால் தலை முழுவதும் அடர்த்தியாக இருக்கும் முடி வெகுவாக குறையத் தொடங்கும். எனவே, மகப்பேறுக்கு பின்னர் தலைமுடி குறையத் துவங்கும். ஆனால், இது தற்காலிகமான விஷயம் தான், சில வாரங்களுக்குப் பின்னர் சாதாரணமாக இருந்து வந்த வளர்ச்சி திரும்பிவிடும்.

புரதச்சத்து குறைபாடு
புரதங்களின் வடிவில் ஒன்றாக இருக்கும் கெரட்டின் என்ற பொருளால் நமது தலைமுடி உருவாக்கப்பட்டிருக்கிறது. நாம் புரதச்சத்து அதிகமாக இருக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருக்கும் போது, அது நம்முடைய தலைமுடியின் உறுதித் தன்மையை குறைத்து விடுகிறது. இதன் காரணமாக வளரத் துவங்கும் முடிகள், முழுமையான வளர்ச்சி பெறும் முன்னரே விழுந்து விடுகின்றன.

மருந்துகள்
பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை சாப்பிட்டு வரும் பெண்கள் அந்த மாத்திரைகள் சாப்பிடுவதை திடீரென நிறுத்தும் போது, தலைமுடி இழப்பு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். பிற ஹார்மோன் மாத்திரைகளும் மற்றும் சிகிச்சைகளும் கூட இதே விளைவை ஏற்படுத்தும். ஹீமோதெரபி செய்தால் கூட தலைமுடி இழப்பு பிரச்சனை வரும்.

அதிகமான எடை இழப்பு
கடும் விரதம் இருப்பதாலும் மற்றும் திடீரென உடல் எடை பெருமளவு குறைவதாலும் அல்லது மிகவும் வேகமாக குறைவதாலும் தலைமுடியின் சாதாரண வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படுகிறது. ஏனெனில், இந்த உணவு முறையால், நமது உடலுக்கு அவசியம் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் முழுமையாக கிடைப்பதில்லை மற்றும் சில வகை உணவுகளை நாம் சாப்பிடக் கூடாது என்று தடை செய்யப்படுவதால் முடி வளர்வதற்கு தேவையான சத்துக்களும் தடைபட்டு விடலாம்.

தைராய்டு போன்ற ஹார்மோன் குறைபாடுகள்
நமது உடல் முறையாக வளர்வதற்குத் தேவையான டிரியோடோதைரோனைன் மற்றும் தைரோக்ஸின் ஆகிய ஹார்மோன்களை சுரப்பது தான் தைராய்டு சுரப்பியின் பணியாகும். ஒருவருக்கு தைராய்டு ஹார்மோனின் அளவு மிகவும் குறைவாகவோ அல்லது மிகவும் அதிகமாகவோ இருக்கும் பிரச்சனை இருந்தால், அதன் காரணமாக ஹார்மோன்கள் குறைபாடு மிகவும் அதிகரித்து விடும். எனவே, இந்த பிரச்சனையை தக்க சமயத்தில் சிகிச்சை எடுத்து களைய வேண்டியது அவசியம். நமது உடலில் நடக்கும் பல்வேறு மாற்றங்களால் தலைமுடி இழப்பும் கூட ஏற்படும். ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வேளைகளில், நமது செல்கள் மற்றும் தசைகளுக்கு எதிரான பொருட்கள் நமது உடலால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த எதிர் பொருட்களின் தாக்குதலுக்கு தலைமுடியும் விதிவிலக்கல்ல என்பதால், தலைமுடி இழப்பைத் தவிர்க்க முடிவதில்லை.

நாள்பட்ட நோய்கள்
நீரிழிவு, சொரியாசிஸ் ஆகிய நாள்பட்ட மற்றும் கடுமையான வியாதிகள் தலைமுடி இழப்புக்கும் வகை செய்கின்றன. நமது உடலின் இரத்த ஓட்டப் பாதையை எதிர்மறையான வகையில் நீரிழிவு நோய் பாதிக்கிறது. இதன் காரணமாக, உடலின் மேல் மற்றும் கீழ் பகுதியின் கடைசியில் உள்ள உறுப்புகளுக்கு மிகவும் குறைவான சத்துக்கள் மற்றும் ஆக்சிஜன் சென்று சேர்கிறது. உதாரணமாக பாதம் மற்றும் மண்டைத் தோல் பகுதிகளை சொல்லலாம். நீரிழிவு நோயின் காரணமாக தலைக்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால், முடிக்கால்கள் இறந்து விடுகின்றன. இதனால் தலைமுடி இழப்பும் ஏற்படுகிறது. சொரியாசிஸ் நோயும் ஸ்கால்ப் மற்றும் முடிக்கால்களை பாதிக்கும் நோயாகும்.



Click it and Unblock the Notifications











