Latest Updates
-
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்..
ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்வதால், கூந்தலுக்கு ஏற்பட போகும் பாதிப்புக்கள்!!!
ஒரு பெண் மற்ற பெண்களிடம் முதலில் பார்க்க விரும்புவது அவர்களின் செருப்பை தான். அதற்கு பிறகு அவள் அதிகம் பார்ப்பது அவர்களின் கூந்தலை. பொதுவாக தோற்றம் அழகாக அமைவதற்கு கூந்தல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் சரியாக அமையாவிட்டால். பார்ப்பதற்கு பொலிவில்லாமல், களையிழந்து காணப்படும். அதனால் இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் தலைமுடியை நேராக்கல் (Straightening), பெர்மிங் போன்ற தலைமுடி சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
அழகை அதிகரிக்க விலை உயர்ந்த சிகிச்சைகளான இவைகளை மேற்கொண்டால், கூந்தலின் அமைப்புத் தரம் மேன்மேலும் அதிகரிக்கப்போவது என்னமோ உண்மை தான். ஆனால் காலப்போக்கில் கூந்தலின் வேர்கள் பாதிப்படையும். ஆகவே கூந்தலை அழகாக செயற்கை வழிமுறைகளை தேர்ந்தெடுக்காமல், இயற்கையாக விட்டு விட வேண்டும். அது ஏன் என்று தெரிய வேண்டுமா?
கூந்தலுக்கு செய்யும் மிக முக்கிய தீங்குகளில் ஒன்று தான் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக நேராக்குதல். கூந்தலை நிரந்தரமாக நேராக்க விரும்பும் பெண்கள் பார்லர் போய் அமரும் முன் பல ஆயிரம் முறை யோசித்துக் கொள்ளுங்கள். ஒரு முறை கூந்தலை நேராகி விட்டால், அதன் பின்னால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும் நிரந்த பாதிப்புகள் சிலவற்றை அது ஏற்படுத்திவிடும்.
சரி வாங்க, கூந்தலை நேராக்கல் செய்வதால், கூந்தலுக்கு ஏற்பட போகும் ஆபத்தை பார்ப்போம்.

முடி உதிர்தல்
கூந்தலை நேராக்கிய பின் அதிகளவிலான முடி உதிர்தலை அனுபவிக்க நேரிடும். இது நிரந்தரமாக முடியை நேராக்குவதால் ஏற்பட போகும் பெரிய பிரச்சனை. அதனால் முடியை நேராக்கல் செய்யக்கூடாத காரணங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.

வேர்களுக்கு பாதிப்பு
கூந்தலின் வேர்கள் பாதிக்கப்பட்டால் புதிதாக வளரும் முடிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும். கூந்தலை நேராக்கினால், கூந்தலின் வேர்கள் உடனடியாக பாதிக்கப்பட்டுவிடும். ஆகவே முடியின் வேர்களை பாதுகாக்க கண்டிப்பாக நேராக்கல் செய்யக் கூடாது.

கரடு முரடான கூந்தல்
கூந்தலை நேராக்கினால் காலப்போக்கில்கூந்தல் கரடு முரடாக மாறிவிடும். ஏனெனில் கூந்தலை நேராக்க பயன்படுத்தும் ஜெல், கூந்தலின் அமைப்புத் தரத்திற்கு நல்லதல்ல. மேலும் அந்த ஜெல் நாட்கள் போக போக கூந்தலை சொரசொரப்பாக மாற்றி விடும்.

முடியின் நுனிகள் பிரியத் தொடங்கும்
கூந்தலின் அமைப்புத் தரம் கரடு முரடாக மாறுவதால், முடியின் நுனிகள் பிரியத் தொடங்கும். இது ஒன்றோடு நிற்காமல் ஆயிரக்கணக்கில் பிரியத் தொடங்கும். இது கூந்தலை நேராக்குவதால் ஏற்படும் பாதிப்பு.

வறண்ட தலை சருமம்
கூந்தல் கரடு முரடாக மாறிய மறு நொடியே, தலை சருமம் வறண்டு போகும். இதனால் பொடுகும், பருக்களும் வரத் தொடங்கிவிடும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க கூந்தலை நேராக்குவதை தவிர்க்க வேண்டும்.

கூந்தல் ஜொலிப்பது நின்றுவிடும்
கூந்தலில் உள்ள ஜொலிப்பு நின்று போனால், பார்ப்பதற்கு வறண்டு களையிழந்து காட்சி அளிக்கும். முடியை நேராக்கினால், கூந்தலின் ஜொலிப்பை அது எடுத்துவிடும். அதனால் கூந்தல் களையிழந்து காட்சி அளிக்கும். ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்தால் இந்த இயற்கையான ஜொலிப்பு மற்றும் மென்மையை கூந்தல் இழந்து விடுவதால், அதனை தவிர்க்கலாம்.

பிசுறு உண்டாகும்
கூந்தலை ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்வதால் ஏற்படும் பெரிய பிரச்சனை என்னெவென்றால், அதை செய்து முடித்த பின்பு கூந்தலில் பிசுறு ஏற்படும். அது கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும். இதனை தவிர்க்க கூந்தலை நேராக்குவதை தவிர்க்கவும். இதனால் பிற்காலத்தில் ஏற்பட போகும் நூற்றுக்கணக்கான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.



Click it and Unblock the Notifications
