Latest Updates
-
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெங்காய மாஸ்க் போடுங்க...
அனைவருக்கும் வெங்காயம் என்றாலே எரிச்சல் தான் வரும். ஏனெனில் அதனை நறுக்கும் போதெல்லாம், கண்களில் இருந்து கண்ணீர் வருவதாலேயே ஆகும். ஆனால் அத்தகைய வெங்காயத்தைப் பயன்படுத்தி முடியின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். ஏனெனில் இதில் தடைப்பட்ட முடியின் வளர்ச்சியை தூண்டும் மற்றும் முடி உதிர்தலைத் தடுக்கும் பொருளான சல்பர் அதிக அளவில் உள்ளது. மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் பொடுகுத் தொல்லையை தடுக்கும். ஆகவே முடி உதிர்தலை தடுக்க நினைப்போர் மற்றும் அழகான வலுவான முடி வேண்டுமென்பவர்கள் வெங்காய மாஸ்க்கை ட்ரை பண்ணலாம்.
குறிப்பாக வெங்காய மாஸ்க்கை முடிக்கு போடுவதால், அதிலிருந்து வரும் துர்நாற்றம் வருமே என்று சிலர் கேட்கலாம். இருப்பினும் முடியின் வளர்ச்சிக்கு சகித்துக் கொள்ள வேண்டும். நண்பர்களே! இங்கு சில வெங்காய மாஸ்க்குகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து முடியின் வளர்ச்சிக்கு செய்யும் அதிகப்படியான செலவை நிறுத்திவிட்டு, இதனை ட்ரை செய்து, நல்ல பலனைப் பெறுங்கள். குறிப்பாக இந்த செயலை தொடர்ச்சியாக குறைந்தது ஒரு மாதமாவது செய்ய வேண்டும்.
சரி, இப்போது வெங்காயத்துடன் எந்த பொருட்களையெல்லாம் சேர்த்து தலைக்கு மாஸ்க் போடுவது என்று பார்ப்போமா!!!

வெங்காய சாறு
வெங்காயத்தை நறுக்கி, அதனை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி, சூடான நீரில் நனைத்து பிழிந்த ஈரத்துணியை தலையில் சுற்றி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

ரோஸ்மேரி எண்ணெய்
இந்த மாஸ்க்கிற்கு, வெங்காயச் சாற்றுடன், சிறிது ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து கலந்து, முடி மற்றும் ஸ்கால்ப்பில் நன்கு தடவி, குறைந்தது 1 மணிநேரமாவது ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வளர்ச்சியடைவதோடு, இதில் உள்ள ரோஸ்மேரி எண்ணெய் வெங்காய துர்நாற்றத்தை குறைக்கும்.

ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய்
வெங்காயச் சாற்றில், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, அந்த கலவையை மயிர்க்கால்களில் தடவி, குறைந்தது 2 மணிநேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும் போது இறுதியில், ஒரு கப் தண்ணீரில் முடியை அலசினால், முடியில் உள்ள வெங்காய நாற்றத்தைப் போக்கலாம்.

பீர் மற்றும் தேங்காய் எண்ணெய்
வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்தப் பின்னர், அதில் சிறிது பீர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, சுடு நீரில் நனைத்து பிழிந்த துணியை சுற்றிக் கொண்டு, 1 மணிநேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

தேன்
வெங்காயச் சாற்றில் தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி, 1-2 மணிநேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளித்து, இறுதியில் எலுமிச்சை நீரில் முடியை அலசினால், முடி நன்கு பொலிவோடு மின்னும். இதனை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.

ரம்
இந்த கலவைக்கு நறுக்கிய வெங்காயத்தை, 1 டம்ளர் ரம்மில், இரவில் படுக்கும் போது ஊற வைத்து, காலையில் எழுந்து முடிக்கு அந்த கலவைக் கொண்டு மசாஜ் செய்து குளிக்க வேண்டும். இந்த முறையை தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் கூட செய்யலாம்.



Click it and Unblock the Notifications