Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
பொடுகு பிரச்சனை தாங்க முடியவில்லையா? இதோ சில சூப்பர் டிப்ஸ்...
பெரும்பாலானோர் பொடுகு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பொடுகு அளவுக்கு அதிகமானால், கூந்தல் உதிர்தல் ஏற்பட்டு, நாளடைவில் வழுக்கை தலைக்கு வழிவகுக்கும். பொடுகு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், தலையில் போதிய எண்ணெய் இல்லாததால் தான். எப்படியெனில், தலையில் எண்ணெய் இல்லாததால், தலைச் சருமமானது வறட்சியடைந்து, செதில் செதிலாக வர ஆரம்பிக்கின்றன. இதனால் கூந்தலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதோடு, அந்த பொடுகு ஸ்கால்ப்பில் இருந்து பரவி முகத்திற்கு வந்து, சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடுகின்றன.
எனவே பொடுகு வந்துவிட்டால், முதலில் அதனை போக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், பொடுகுகள் நகங்கள், உடுத்தும் ஆடைகள் போன்றவற்றில் சிதறி, பார்ப்பவர்களுக்கு ஒருவித கெட்ட எண்ணத்தை ஏற்படுத்திவிடும். மேலும் இத்தகைய பொடுகுகளைப் போக்குவதற்கு நிறைய பொருட்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்திலும் கெமிக்கல்கள் இருப்பதால், அவை நிலைமையை இன்னும் மோசமானதாக்கிவிடும். குறிப்பாக, கூந்தல் உதிர்தலை அதிகரித்து, வழுக்கை தலையை ஏற்படுத்திவிடும்.
ஆகவே எப்போதுமே இயற்கைப் பொருட்களைக் கொண்டு பொடுகுத் தொல்லைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். இதனால் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலை பெறுவதோடு, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக வளரும். இப்போது பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான சில வழிகளைப் பார்ப்போம்.

பேக்கிங் சோடா
சிறிது பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் அலசினால், தலையில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்தாலும், நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை சாறு
தலையில் இருந்து செதில் செதிலாக வருவதை தவிர்க்க வேண்டுமெனில், எலுமிச்சை தான் சிறந்த பொருள். அதற்கு எலுமிச்சை சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து குளித்து, பின் ஸ்கால்ப்பில் சிறிது எண்ணெய் தடவினால், ஸ்கால்ப் வறட்சியடைவதை தவிர்க்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்தாலும், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

தேங்காய் பால்
தேங்காய் பாலும் பொடுகில் இருந்து நிவாரணம் தரக்கூடியவையே. அதற்கு தேங்காய் பாலை தலையில் தடவி மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

கற்றாழை
கற்றாழை ஜெல் சருமத்திற்கு மட்டும் நல்ல பலனைத் தருவதில்லை, கூந்தலுக்கும் தான். அதிலும் கற்றாழையின் ஜெல்லை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் தடவி, கவர் கொண்டு மூடி, காலையில் எழுந்து குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும். இதனால் கற்றாழையில் உள்ள ஈரப்பதமானது, தலையில் இறங்கி, வறட்சியைத் தடுக்கும்.

நல்லெண்ணெய்
வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து குளித்து வந்தால், பொடுகு நீங்குவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக வளரும்.

டீ ட்ரீ ஆயில் (Tea Tree Oil)
தலையில் பாக்டீரியா அதிகம் இருப்பதற்கு ஒரு அறிகுறி தான் பொடுகு. எனவே இத்தகைய அரிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்க, டீ ட்ரீ ஆயிலை தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலுக்கும் ஸ்கால்ப்பில் இருந்து வெளிவரும் செதிலை போக்கும் தன்மை உள்ளது. ஆகவே ஆலிவ் ஆயிலை தலையில் தடவி மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

விட்ச் ஹேசல் (Witch Hazel)
ஸ்கால்ப்பில் ஏற்படும் தொற்றுகளை முற்றிலும் போக்க வேண்டுமெனில், விட்ச் ஹேசல் என்னும் மலரைப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு இந்த மலரை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, பின் அதனை பேஸ்ட் போல் அரைத்து, ஸ்கால்ப்பில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும்.

வெங்காயம்
வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பூண்டு
பூண்டை நன்கு அரைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள பாக்டீரியா நீங்கிவிடும்.

தயிர்
தயிரில், சிறிது மிளகு தூள் சேர்த்து கலந்து, உச்சந்தலையில் படும்படி தேய்த்து, 20-30 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு படிப்படியாக நீங்கும்.

வெந்தயம்
வெந்தயத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து அரைத்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, சீகைக்காய் போட்டு குளிக்க வேண்டும்.

பச்சை பயறு மாவு
பச்சை பயறு மாவில் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, ஸ்கால்ப்பில் படும்படியாக தேய்த்து, ஊற வைத்து குளித்தால், பொடுகு மறைந்துவிடும்.

மிளகுத் தூள்
மிளகுத் தூளை பால் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து குளித்தால், பொடுகு நீங்கிவிடும்.

வசம்பு
வசம்பை நன்கு பொடி செய்து, அந்த பொடியை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து, அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

வேப்பிலைக் கொழுந்து
வேப்பிலையின் கொழுந்தை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதனை தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்தால், அதில் உள்ள கசப்பு தன்மையால், ஸ்கால்ப்பில் உள்ள பாக்டீரியா அழிந்துவிடும்.

மருதாணி இலை
மருதாணி இலையை அரைத்து, அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தலைக்கு தடவி குளிக்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, நரைமுடியின் நிறமும் மாறும்.

முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவில், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், பொடுகு நீங்கும்.



Click it and Unblock the Notifications