Latest Updates
-
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா?
கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும் செயல்கள்!!!
பெண்கள் அனைவருக்குமே நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமென்ற ஆசை இருக்கும். சிலருக்கு அது வெறும் கனவாகவே உள்ளது. ஏனெனில் அனைவரும் ஆசை மட்டும் தான் கொள்கிறோமோ தவிர, அதற்கான சரியான முறையைப் பின்பற்றுவதில்லை. ஆம், அனைவருக்குமே கூந்தல் நன்கு வளர வேண்டுமெனில், தினமும் எண்ணெய் தடவி, கூந்தலை கட்டிக் கொண்டு இருக்க வேண்டுமென்று தெரியும். இது பழைய ஃபேஷன். ஆனால் பலர், வேலைக்கு செல்லும் போது அழகாக செல்ல வேண்டுமென்றும், பழைய ஃபேஷனை தவிர்த்துவிடுகிறோம். பின் கூந்தல் வளரவில்லையே என ஏங்குகிறோம்.
எவ்வளவு தான் பழைய ஃபேஷனாக இருந்தாலும், அதுவே சிறந்தது. எனவே அழகான, நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டுமெனில், என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று ஒருசில முக்கியமான செயல்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பின்பற்றி வந்தால், கூந்தலின் வளர்ச்சியை நிச்சயம் அதிகரிக்க முடியும். முக்கியமாக, இந்த செயல்களை அனைத்தும் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் தான். மேலும் இந்த செயல்கள், வேலைக்கு செல்வோர் பின்பற்றக் கூடிய வகையில் எளிமையாக இருக்கும்.

அடிக்கடி தலை சீவவும்
பலர் தினமும் இரண்டு முறை மட்டும் தான் தலை சீவுவோம். ஆனால் அது மட்டும் போதாது. அடிக்கடி தலையை சீவ வேண்டும். ஒரு நாளைக்கு எவ்வளவு முறை தலை சீவுகிறோமோ, அந்த அளவு கூந்தலின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

அழுத்தி சீவவும்
குறிப்பாக தலையை சீவும் பொழுது, சற்று அழுத்தி சீவ வேண்டும். ஏனெனில் அவ்வாறு அழுத்தம் கொடுக்கும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

எண்ணெய் குளியல்
வாரத்திற்கு ஒரு முறையாவது, எண்ணெய் குளியலை மேற்கொள்ள வேண்டும். அதுவும் வார இறுதியில் இரவில் படுக்கும் போது எண்ணெய் தடவி நன்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் எழுந்து கூந்தலை அலசினால், கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, கூந்தலும் ஆரோக்கியமாக வளரும்.

செம்பருத்தி எண்ணெய்
கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்க நினைக்கும் போது, இயற்கைப் பொருட்களை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. எனவே இரவில் படுக்கும் முன், சிறிது செம்பருத்தி பூவை வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் போட்டு, நன்கு ஊற வைத்து, அதனை கூந்தலுக்கு தடவி ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தல் நன்கு அடர்த்தியாகவும் வேகமாகவும் வளரும்.

கூந்தலை கட்ட வேண்டும்
எப்போதும் இரவில் தூங்கும் போது, கூந்தலை நன்கு கட்டிக் கொண்டு படுக்க வேண்டும். இதனால் படுக்கும் போது தலையணையுடன் ஏற்படும் உராய்வினால், கூந்தல் பாதிப்படைவதைத் தடுக்க முடியும்.

வைட்டமின் ஈ உணவுகள்
வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம். அதிலும் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்த உணவுகளான பாதாமை தினமும் சாப்பிடுவது நல்லது.

பாதாம் எண்ணெய்
இந்திய மக்கள் முடியின் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் மட்டும் தான் சிறந்தது என்று நம்புகிறார்கள். ஆனால் எப்போதும் தேங்காய் எண்ணெயை மட்டும் நம்பாமல், மற்ற இயற்கை எண்ணெய்களான பாதாம் எண்ணெயையும் கூந்தலுக்கு பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இதுவும் கூந்தலின் வளர்ச்சியின் முக்கிய பங்கினை வகிக்கிறது.

சூடான நீரைத் தவிர்க்கவும்
கூந்தலுக்கு எப்போதும் சூடான நீரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் சுடுநீரானது ஸ்கால்ப்பில் உள்ள மயிர்த்துளைகளை தளரச் செய்து, கூந்தல் உதிர்தலை அதிகரிக்கும். எனவே எப்போதும் குளிர்ந்த நீரை பயன்படுத்தி, கூந்தலை அலச வேண்டும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரையும் பயன்படுத்தலாம்.

தலையை சுத்தமாக வைத்திருக்கவும்
பொதுவாக கூந்தலுக்கு அதிகப்படியான ஷாம்பு பயன்படுத்தினால், கூந்தலின் தரமானது பாதிக்கப்படும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் உள்ளது. ஆனால் கூந்தலை ஷாம்பு கொண்டு அலசும் போது, தலையில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, ஸ்கால்ப்பானது சுத்தமாக இருக்கும். இதனால் கூந்தலின் வளர்ச்சியும் அதிகரிக்கும். எனவே கூந்தலுக்கு மைல்டு ஷாம்புவைக் கொண்டு வாரத்திற்கு மூன்று முறை அலசும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். வேண்டுமெனில் தலைக்கு சீகைக்காய் பொடியைப் பயன்படுத்தியும் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

ஸ்கார்ப் அல்லது தொப்பி
வெளியே வெயிலில் செல்லும் போது, சூரியக்கதிர்கள் நேரடியாக ஸ்கால்ப்பில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சூரியக்கதிர்களானது முடியின் தரத்தை மழுங்கச் செய்வதோடு, அதன் வளர்ச்சியையும் தடுத்துவிடும். ஆகவே எப்போதும் வெளியே செல்லும் போது, தலைக்கு ஸ்கார்ப் அல்லது தொப்பி அணிந்து செல்ல வேண்டும்.



Click it and Unblock the Notifications
