Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கேசத்திற்கு ஏற்ற சிறந்த ஹேர்ஆயில்கள்!

தேங்காய் எண்ணெய்
நூற்றாண்டு காலமாகவே இந்தியாவில் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு உள்ளது. கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதன் மூலம் கூந்தல் ஆரோக்கியமான வளர்ச்சியடையும். சுத்தமான தேங்காய் எண்ணெய் கூந்தலானது வறண்டுபோகாமல் தடுக்கிறது. பொடுகு தொல்லையை நீக்குகிறது. வெப்பத்தினால் கூந்தல் பாதிக்கப்படும் போது தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி அதை தலையில் மசாஜ் செய்தால் தலைக்கும், கூந்தலுக்கும் அது சிறந்த சிகிக்சையாக செயல்படுகிறது.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் உயர்தர கொழுப்பு உள்ளது. இது கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது. வாரம் ஒருமுறை ஆலிவ் ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் உடைந்து உதிர்வது தடுக்கப்படுகிறது.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் இ அடங்கியுள்ளது. இது கூந்தல் அடர்த்தியாக வளர உதவி செய்கிறது. மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து தலைக்கு பாதம் எண்ணெய் உபயோகித்தால் கூந்தலின் வளர்ச்சி 4 இஞ்ச் அளவிற்கு அதிகமாக வளரும் என்று கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் குளிர்ச்சியானது. கண்களைச் சுற்றியும், புருவங்கள் வளரவும் விளக்கெண்ணெய் உபயோகிப்பது உண்டு. இது கூந்தல் வளர்ச்சியில் உதவி புரிவதோடு தலைக்கும் சிறந்த ஆரோக்கியத்தை தருகிறது. விளக்கெண்ணெய் கொண்டு தலைக்கு மசாஜ் செய்வதன் மூலம் தலையில் ரத்த ஓட்டம் அதிகமாகும் கூந்தலும் ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஜோஜோபா எண்ணெய்
ஜோஜோபா விதையில் இருந்து கிடைக்கும் எண்ணெய் சருமத்திற்கும், கூந்தலுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது. இது பிசுபிசுப்பு தன்மையற்றது. இது கூந்தலின் வளர்ச்சிக்கு உதவுவதோடு வறட்சியடையாமல் பாதுகாக்கிறது.



Click it and Unblock the Notifications