Latest Updates
-
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
கூந்தல் எண்ணெய் பசையா இருக்கா? இயற்கை ஹேர் பேக்ஸ் போடுங்க...

ஹென்னா - எண்ணெய் பசையான கூந்தலுக்கு ஹென்னா ஒரு சிறப்பான பொருள். அதற்கு இரவில் படுக்கும் முன், 3 டேபிள் ஸ்பூன் ஹென்னா மற்றும் 2 டேபிள் ஸ்பூன் டீயை ஊற்றி, ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து, அதனை கூந்தலுக்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் கூந்தலில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்குவதோடு, கூந்தல் உதிர்தலும் நீங்கும்.
கார்ன் ஃப்ளார் - கார்ன் ஃப்ளாரை வைத்து செய்யப்படும் ஹேர் பேக்கில், கார்ன் ஃப்ளார், 1 டேபிள் ஸ்பூன் சுடு தண்ணீர் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, கூந்தலுக்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை நீரில் அலச வேண்டும். பின்னர் பாருங்கள், கூந்தல் சரியான அளவு எண்ணெயோடு அழகாக காட்சியளிக்கும்.
பூந்திக்கொட்டை - பூந்திக் கொட்டை எண்ணெய் பசை கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. இதனை கூந்தலுக்கு பயன்படுத்தினால், அதிகப்படியான எண்ணெய் மற்றும அழுக்குகள் முழுமையாக குறைந்துவிடும். இது ஒரு சிறந்த முறை. அதற்கு 2 டேபிள் ஸ்ழுன் பூந்திக் கொட்டை பவுடருடன், சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு, கலந்து கூந்தலுக்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். மேலும் இந்த முறையால் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.
முட்டை வெள்ளை கரு - முட்டையின் வெள்ளைக் கருவுடன், 1-2 டீஸ்பூன் புதினா சாற்றை விட்டு, கூந்தலுக்கு தடவி, அரை மணிநேரம் ஊற வைத்து, பின்னர் தவறாமல், கூந்தலுக்கு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இல்லையெனில் கூந்தலில் நாற்றம் ஏற்படும். அதனால் கூந்தலில் எண்ணெய் பசை நீங்கி, மென்மையோடும், பொலிவோடும் காணப்படும்.
மேற்கூறிய அனைத்தும் கூந்தலுக்கு ஏற்ற சிறந்த ஹேர் பேக்ஸ். இவற்றை பயன்படுத்துவதால் கூந்தலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. முக்கியமாக கூந்தல் விரைவில் மென்மையாக, பட்டு போல் ஆக வேண்டும் என்பதற்காக அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால், பின் கூந்தல் வறட்சியடைந்துவிடும்.



Click it and Unblock the Notifications
