Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா!

தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். எனவே சூடு உடம்பு கொண்டவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து அரைத்து குளிப்பதும் நல்ல பலன் தரும்.
கூந்தலுக்கு ஈரம் எதிரி
தலைக்கு குளித்த பின் ஈரம் காயும் முன்பே சீப்பால் சீவுவதாலும் அதிகளவில் கூந்தல் உதிரும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும். நன்றாக காயவைத்த பின்பே பெரிய பல் உள்ள சீப் வைத்து சீவி பின்னவேண்டும்.
வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம் மற்றும் தலையில் அழுக்கு சேர்வது ஆகியவை கட்டுப்படும். இதனால், கூந்தல் உதிருவது குறையும்.
செம்பருத்திப் பூ
செம்பருத்தி பூ இதழ்களை வெயிலில் நன்கு காயவைத்து, அவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து, முடியில் தடவினால் முடி கொட்டுவது குறையும். கறிவேப்பிலையை நைசாக அரைத்து, அதை வெயி லில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.
சிக்கலுக்கு பை
தலையில் அதிகமாக சிக்கல் சேர்ந்து விட்டால், பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்தி சிக்கல் எடுக்க வேண்டும். சிறிய பற்களை பயன்படுத்தினால், முடி அதிகளவில் உதிரும்.
ப்ரீ ஹேர் விட்டு சென்றால், சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகனங்களில் செல்லும் போதோ அல்லது நெடுந்தூரம் பயணம் செய்யும் போதோ, ப்ரீ ஹேர் விடாமல் தலையை பின்னி செல்லலாம்.
ஊட்டச் சத்துக்குறைவு
ஊட்டச்சத்து குறைவு காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். எனவே பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும். கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும். முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால், கூந்தல் உதிர்வது குறையும்.



Click it and Unblock the Notifications
