Latest Updates
-
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா?
அழகான பின்னலில் தேவதையாய் அசத்தலாம் !

பிரஞ்ச் பிளாட்
முதலில் கண் புருவ பகுதியில் இருந்து முடியை எடுத்து அதை நார்மல்பிளாட் ஆரம்பிக்கும்படி தொடங்கவும். அடுக்காக எடுத்து முன் பகுதியை சரி செய்யவும். அதே போல இரண்டு பக்கமும் செய்யவும். இதை காது வரை போடவும் பிறகு மீதியுள்ள முடியில் நார்மல்பிளாட் போடவும். பிறகு பீட்ஸ் வைத்து அலங்கரிக்கவும்.
ஐந்துகால் பின்னல்
முதலில் பிரன்ச் பிளாட் போட்டு கொண்டு அதன் பிறகு மீதியுள்ள முடியை ஐந்து பகுதியாக பிரித்து முதல் மூன்று கால்களில் சாதாரணமாக போடவும். பிறகு இரண்டு பகுதியை எடுத்து இணைக்கவும். அதன் பின்னர் பூக்கள் வைத்து பீட் வைத்து அலங்கரிக்கவும்
மல்லிகை மற்றும் கோழிகொண்டை ஜடை
முகத்திற்கு தக்கபடி வகிடு எடுக்கவும். பிறகு தேவையான நீளத்திற்கு பின்னல் போட்டு தேவையான நிறத்தில் குஞ்சலம் வைத்து கொள்ளவும். அதன் பின்னர் மல்லிகை மற்றும் கோழி கொண்டை பூவை வைத்து அடுக்கு அடுக்காக அலங்கரிக்கவும்.
முகூர்த்த ஜடை
தேவையானபடி வகிடு எடுத்து உச்சிபில்லை வைத்து பின்னல் போட்டு தங்க நிறம் குஞ்சலம் அல்லது குண்டு குஞ்சலம் வைக்கவும். பின்னர் ஜடை அலங்காரத்தை கூந்தலில் வைத்து கட்டி விடவும் பின்னர் பெங்களூர் ரோஸ் வைத்து நடு நடுவே அலங்கரிக்கவும். இது மணப்பெண்களுக்கு ஏற்ற அலங்கார ஜடையாகும்.
ரிசப்சன் ஜடை
முகூர்த்த நேரத்தில் ஒரு அலங்காரமும், ரிசப்சன் நேரத்தில் ஒரு அலங்காரமும் செய்வது வழக்கம். ரிசப்சனுக்கு
முதலில் தலையின் முன்பகுதியில் "பப்" வைக்கவும். பிறகு ஓவர் டேப் சுருள் போடவும். அதன் பின்னர் மீதியுள்ள முடியை சவுரி வைத்து பின்னல் இட்டு குஞ்சலம் வைக்கவும். அதன் பின்னர் நகை இணைப்பை உச்சியில் வைக்கவும். அதன் பிறகு கோழி கொண்டை மற்றும் மல்லிகை வைத்து அலங்கரிக்கவும்.
நகை கொண்டை ஜடை
கூந்தலின் நடுப்பகுதியில் பப் வைக்கவும். பிறகு போனிடைல் போடவும். கூந்தலை இரண்டு பகுதியாக பிரிக்கவும். முதல் பகுதியில் சுருள் போடவும் மீதியுள்ள பகுதியில் பின்னல் போட்டு குஞ்சலம் வைக்கவும். விருப்பத்திற்கு ஏற்ப கோழி கொண்டை, மல்லிகைப்பூ, நகை வைத்து அலங்கரிக்கவும்.
சிம்பிள் முகூர்த்த ஜடை
முதலில் வகிடு எடுத்து பில்லை இணைக்கவும். பின்னர் சவுரி வைத்து குஞ்சலம் வைத்து அதன் பின்னர் மல்லிகைப் பூவை பில்லையில் சுற்றி அதன் ஜடை மேல் சுற்றி விடவும். பிறகு ஜடை நடுவில் பென்டன்டை வைத்து அலங்கரிக்கவும்.
முந்திரி மற்றும் செரி ஜடை
முதலில் முன் பகுதியில் பில்லை வைத்து அதன் பிறகு சவுரி வைத்து குஞ்சலம் வைத்து பின்ன வேண்டும். பிறகு முந்திரி, செரி பழம் வைத்து அலங்கரிக்கவும். அதன் பிறகு திராட்சை, மல்லிகை, கனகாம்பரம் வைத்து அலங்கரிக்கவும்.
மயில் ஜடை
முதலில் முன் பகுதியை சரி செய்யவும். பிறகு முடி எடுத்து போனி டைல்ஸ் போடவும். பிறகு சுற்றிலும் சுருள் மற்றும் நடுவில் ஒரு சுருள் போடவும் பிறகு மீதமுள்ள முடியில் சவுரி வைத்து பின்னல் போட்டு குஞ்சலம் வைத்து பின்னவும். பிறகு மயில் வடிவத்தை அதில் இணைக்க வேண்டும்.
கதம்ப ஜடை
நேர் வகிடு எடுத்து முன் பகுதியை சரி செய்து உச்சியில் முடி எடுத்து பில்லை செட் செய்யவும் பில்லை சுற்றி பல வண்ண மலர் சுற்றி வைத்து கதம்ப இணைப்பை வைக்கவும். இதுபோன்ற ஸ்டைல்களில் கூந்தல் அலங்காரம் செய்து போனால் அங்கு அனைவரின் கவனமும் உங்கள் மீது திரும்பும் என்பதில் சந்தேகமில்லை.



Click it and Unblock the Notifications
