Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வாரம் 2 முறை இந்த 2 பொருளை வெச்சு ஹேர் பேக்கை போட்டா.. முடி கொட்டாது. அடர்த்தியாவும் வளரும்..
Hair Care Tips In Tamil: ஒவ்வொருவருமே அழகான மற்றும் அடர்த்தியான தலைமுடியைப் பெற விரும்புவோம். ஆனால் தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களுடன், மாசு நிறைந்த சுற்றுச்சூழல் காரணமாகவும் தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்கிறோம்.
குறிப்பாக நிறைய பேர் தலைமுடி உதிர்வு பிரச்சனையால் தான் அவதிப்படுகிறார்கள். ஒரு நாளைக்கு ஒருவரது தலையில் இருந்து குறிப்பிட்ட தலைமுடி உதிர்வது இயற்கை. ஆனால் கொத்து கொத்தாக கையில் தலைமுடி வந்தால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், தலைமுடி பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.

இந்நிலையில் தலைமுடிக்கு தேவையான சத்துக்களை வழங்க ஹேர் பேக்குகளைப் பயன்படுத்துவதே சிறந்த வழி. ஏனெனில் நல்ல சத்துக்கள் நிறைந்த பொருட்களைக் கொண்டு ஹேர் பேக்குகளை தயாரித்து தலைக்கு பயன்படுத்தும் போது, தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, தலைமுடி வலிமையடைவதோடு, ஆரோக்கியமாகவும், பட்டுப்போன்று மென்மையாகும் இருக்கும்.
கீழே தலைமுடியில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளைத் தடுக்கும் ஒரு அற்புதமான ஹேர் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அது தான் கற்றாழை தேங்காய் எண்ணெய் ஹேர் பேக். இந்த ஹேர் பேக்கை ஒருவர் தவறாமல் பயன்படுத்தி வந்தால், தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியும் வலிமையடையும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஏராளமான அழகு நன்மைகளைக் கொண்டவை. கற்றாழையானது ஸ்காலப்பில் உள்ள சேதமடைந்த செல்களை சரிசெய்வதோடு, தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும். முக்கியமாக கற்றாழையில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பதால், ஸ்கால்ப்பில் ஏற்பட்டுள்ள பாக்டீரியல் தொற்றுக்களைத் தடுக்கும். மேலும் கற்றாழை மிகச்சிறந்த கண்டிஷனர் போன்றும் செயல்படும். அதோடு இது தலைமுடி வளர ஆரோக்கியமான சூழலை வழங்கி, தலைமுடி உதிர்வதைத் தடுக்கிறது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. முக்கியமாக இது பாரம்பரியமாக தலைமுடியின் ஆரோக்கியத்திற்காக பண்டைய காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான எண்ணெய். தேங்காய் எண்ணெயில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களுமே உள்ளன. இதில் உள்ள பண்புகள் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, தலைமுடியில் எவ்வித சேதமும் ஏற்படாதவாறு பாதுகாப்பை அளிக்கின்றன.
கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் பேக்கை எப்படி தயாரித்து பயன்படுத்துவது?
கற்றாழை ஜெல்லும், தேங்காய் எண்ணெயும் தலைமுடியில் மாயங்களை ஏற்படுத்தக்கூடியவை. இவ்விரு பொருட்களைக் கொண்டு விரைவில் ஹேர் பேக்கை தயாரிக்கலாம். மேலும் இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடியில் நல்ல மாற்றத்தைக் காணலாம். இப்போது இந்த ஹேர் பேக்கை எப்படி பயன்படுத்துவது என்று காண்போம்.
* முதலில் 1/2 கப் தேங்காய் எண்ணெயை எடுத்து, அத்துடன் 2-3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவி, சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* இப்படி மசாஜ் செய்த பின் சில மணிநேரம் ஊற வைக்கலாம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.
* அதன் பின் தலைமுடியை மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.
இந்த ஹேர் பேக் முற்றிலும் இயற்கை பொருட்களால் ஆனது என்பதால், இவற்றால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது. ஒருவேளை நீங்கள் ஏதேனும் பிரச்சனையை சந்தித்தால், இதைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். இந்த ஹேர் பேக்கை வாரந்தோறும் தவறாமல் பயன்படுத்தி வந்தால், தலைமுடி நன்கு ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்கும்.



Click it and Unblock the Notifications