Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சொட்ட தலையிலும் முடி வளரணுமா? அப்ப வாரம் 2 முறை விளக்கெண்ணெயை 'இப்படி' யூஸ் பண்ணுங்க..
Hair Care Tips In Tamil: தலைமுடி ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டுவதைத் தவிர, ஒருவரது தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது என்றே கூறலாம். தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால் நிறைய பேர் தலையில் முடி இல்லாமல் இருக்கிறார்கள்.
அதுவும் திருமணமாகாத பல ஆண்கள் தலையில் முடி இல்லாமல் வழுக்கைத் தலையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்களும் முடி அடர்த்தி இல்லாமல் எலி வால் போன்ற முடியுடன், தலைமுடி உதிர்வு பிரச்சனையுடன் இருக்கிறார்கள்.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஒரு அற்புதமான எண்ணெய் ஒன்று உள்ளது. அதுவும் அந்த எண்ணெயை பழங்காலம் முதலாக தலைமுடியின் ஆரோக்கியம், வலிமை மற்றும் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது தான் விளக்கெண்ணெய். ஏனெனில் விளக்கெண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை அதிகம் உள்ளன.
இவை பொடுகுத் தொல்லை மற்றும் ஸ்கால்ப் தொற்றுகளைத் தடுக்கிறது. மேலும் முடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. நீங்களும் உங்கள் தலைமுடி வளர வேண்டுமென விரும்பினால், பின்வருமாறு விளக்கெண்ணெயைப் பயன்படுத்துங்கள். நிச்சயம் முடி வளர்ச்சியைக் காணலாம்.
வழி #1
ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன், 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை ஸ்கால்ப் முதல் தலைமுடியின் முனை வரை தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்புவைப் பயன்படுத்தி அலசி, கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். இதனால் முடி நன்கு மென்மையாக இருப்பதோடு, பொலிவோடும் இருக்கும்.
வழி #2
சொட்டையான தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட வேண்டுமானால், விளக்கெண்ணெயை சூடேற்றி இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் ஸ்கால்ப்பில் படும் படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வழி #3
1/4 கப் நீருடன் 1/4 கப் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு முறை தலைக்கு குளித்த பின்னரும், இறுதியில் அந்நீரை ஸ்ப்ரே செய்தால், தலைமுடி நன்கு வலிமையாகவும், அடர்த்தியாகவும் இருக்கும்.
வழி #4
தலைக்கு ஒவ்வொரு முறை ஷாம்பு பயன்படுத்தி அலசிய பின்னரும், சில துளிகள் விளக்கெண்ணெயை கைகளில் எடுத்து, அத்துடன் சிறிது கிளிசரினை சேர்த்து கலந்து தலைமுடியில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம், முடி வறண்டு போகாமல் மென்மையாகவும், நன்கு வெயிட்டாகவும் இருக்கும்.
வழி #5
ஒரு பௌலில் விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை சரிசம அளவில் எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி நன்கு குலுக்க வேண்டும். பின் அந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் படும் படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் சுடுநீரில் நனைத்த துணியை தலையில் சுற்றி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டு. அதன் பின் ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்வது வந்தால், தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு, முடியும் நன்கு அடர்த்தியாக வளரும்.
வழி #6
இந்த ஹேர் பேக் தலைமுடியை வலிமையாக்குவதோடு, ஈரப்பதத்தை முடியில் தக்க வைக்கும். அதற்கு ஒரு பௌலில் 4-5 டேபிள் ஸ்பூன் வெங்காய் சாற்றினை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மென்மையாக 3-4 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 2 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.
வழி #7
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, சில துளிகள் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் சுடுநீரில் நனைத்து பிழிந்த துணியை தலையில் சுற்றி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.



Click it and Unblock the Notifications