Latest Updates
-
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்!
தலைமுடி பட்டுப் போல பளபளப்பா இருக்கணுமா? அப்ப அவகேடோ எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க..
Hair Care Tips In Tamil: அவகேடோ பழம் பொதுவாக வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பழம் சரும பராமரிப்புக்கு மட்டுமல்ல நம்முடைய கூந்தல் பராமரிப்பிலும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அவகேடோ விதையில் இருந்து தயாரிக்கப்படும் அவகேடோ எண்ணெய் உங்கள் கூந்தல் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
அவகேடோ எண்ணெயில் உங்கள் கூந்தலுக்கு தேவையான அனைத்து போஷாக்குகளும் காணப்படுகிறது. இந்த எண்ணெயை நீங்கள் வெறுமனே தலைக்கு தேய்த்து வந்தால் போதும் உங்கள் தலைமுடியை வலுப்படுத்த முடியும், உங்கள் கூந்தல் பிரச்சினைகளை சரி செய்ய முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த அவகேடோ எண்ணெயில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உங்கள் கூந்தலுக்கு ஆழமான போஷாக்கை தருகிறது. இது முடியில் உறிஞ்சப்படும் தண்ணீரை குறைக்கிறது அதனால் இது வீக்கத்தைக் குறைக்கிறது என்று இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ட்ரைக்காலஜியின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. எனவே இந்த அவகேடோ எண்ணெயைக் கொண்டு உங்கள் கூந்தலை எப்படி பராமரிக்கலாம் என பார்ப்போம்.
அவகேடோ எண்ணெயின் பயன்கள்
அவகேடோ எண்ணெயில் தலைமுடிக்கு தேவையான தாதுக்கள், வைட்டமின்கள், கொழுப்புகள் போன்றவை உள்ளன. இந்த எண்ணெய் முடிக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. பொடுகை குறைக்கிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முடியை சேதத்தில் இருந்து பாதுகாத்து முடிக்கு பளபளப்பை தருகிறது.
ஈரப்பதத்தை அளிக்கிறது
வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு முடி உதிர்வு என்பது அதிகமாக இருக்கும். எனவே அவர்கள் இந்த அவகேடோ எண்ணெயை பயன்படுத்தி வரலாம். இதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. இந்த எண்ணெய் உங்கள் மயிர்க்கால்களால் எளிதில் உறிஞெசப்படும்.
இந்த எண்ணெயில் மோனோசாச்சுரேட் கொழுப்புகள் மற்றும் ஒலிக் அமிலம் உள்ளது. இந்த எண்ணெய் முடி தண்டுக்குள் எளிதாக ஊடுருவி தலைமுடியின் ஈரப்பதத்திற்கு உதவுகிறது. இந்த எண்ணெயில் உள்ள வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ கூந்தலுக்கு நல்ல வலிமையை தருகிறது. இது முடி உடைதலை தடுக்கிறது.
கூந்தலில் உள்ள சிக்கலை எளிதாக போக்குகிறது
வறண்ட மற்றும் மெல்லிய கூந்தல்கள் உங்களுக்கு எளிதாக சிக்கலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த அவகேடோ எண்ணெய் ஒரு மசகு எண்ணெய் மாதிரி செயல்படுகிறது. எனவே இதை கண்டிஷனருக்கு மாற்றாக பயன்படுத்தலாம். இதிலுள்ள வைட்டமின் பி மற்றும் ஈ வைட்டமின்கள் முடியிழைகளை சீரமைத்து கூந்தலை மென்மையாக்குகிறது. இதன் மூலம் உங்கள் கூந்தலில் உள்ள சிக்கலை எளிதாக எடுத்து விடலாம்.
பொடுகுத் தொல்லையை குறைக்கிறது
நீங்கள் பயன்படுத்தும் கெமிக்கல்கள் நிறைந்த ஷாம்புகள் உங்கள் தலையில் பொடுகுத் தொல்லையை உண்டாக்குகிறது. இந்த அவகேடோ எண்ணெயை தலையில் அப்ளை செய்து மசாஜ் செய்து வரும் பொடுகுத் தொல்லையானது குறைகிறது. இதன் மூலம் உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்
முடி வளர்ச்சியை தூண்டுகிறது
அவகேடோ எண்ணெய் உங்கள் கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அவகேடோ எண்ணெயை புதினா எண்ணெய் அல்லது ரோஸ்மேரி எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வைக் குறைத்து இயற்கையான முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியும். இந்த எண்ணெயைக் கொண்டு உச்சந்தலையை மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மயிர்க்கால்களை தூண்டி கூந்தல் வளர்ச்சியை பலப்படுத்துகிறது.
கூந்தல் சேதமடைவதை தடுக்கிறது
அவகேடோ எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் முடிக்கு ஒரு கவசமாக செயல்படுகிறது. சூரிய ஒளியால் ஏற்படும் கூந்தல் பிரச்சினைகளில் இருந்து கூந்தலை பாதுகாக்கிறது. ஹேர் ஸ்டைலிங் கருவிகளால் ஏற்படும் வெப்ப சேதத்தை தடுக்க உதவுகிறது.
எனவே ஹேர் ஸ்டைலிங் கருவிகளை பயன்படுத்துவதற்கு முன்பு அவகேடோ எண்ணெயை கூந்தலில் தடவி வருவது வெப்ப சேதத்தை குறைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். இதிலுள்ள வைட்டமின் ஈ சூரிய ஒளி பாதிப்பில் இருந்து கூந்தலை பாதுகாக்கிறது. இது முடி உலர்ந்து போவதையையும், உடைந்து போவதையையும் தடுக்கிறது.
கூந்தலுக்கு பளபளப்பை தருகிறது
அவகேடோ எண்ணெய் கூந்தலுக்கு உள்ளிருந்து பளபளப்பை தரக் கூடியது. இதன் மூலம் உங்கள் சிகை அலங்காரங்களை கூடுதல் அழகாக்கலாம். சிறுதளவு அவகேடோ எண்ணெயை கையில் எடுத்து அப்ளை செய்து வந்தாலே போதும். எனவே தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த அவகேடோ எண்ணெய் உங்கள் கூந்தலுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
அவகேடோ எண்ணெயை எப்படி பயன்படுத்துவது?
அவகேடோ எண்ணெயில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. எனவே இந்த எண்ணெய் உங்கள் கூந்தலுக்கு உள்ளிருந்து போஷாக்கு அளிக்கிறது. இந்த எண்ணெயை முதலில் மைக்ரோவேவ் ஓவனில் வைத்து 30 விநாடிகள் சூடுபடுத்திக் கொள்ளுங்கள்.
பிறகு வெதுவெதுப்பான நிலையில் இந்த எண்ணெயை உங்கள் உள்ளங்கைகளில் ஊற்றி தலையில் தேயுங்கள். நல்லா மயிர்க்கால்களில் படும் படி தேய்க்க வேண்டும். உங்கள் விரல்களை பயன்படுத்தி வட்ட இயக்கத்தில் லேசாக மசாஜ் செய்யுங்கள். 15-30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் சாதாரண நீரில் கூந்தலை அலசிக் கொள்ளுங்கள். வாரந்தோறும் இதைச் செய்து வரும் போது உங்கள் கூந்தல் பளபளப்பாக பட்டு போல் இருப்பதை நீங்கள் காணலாம்.



Click it and Unblock the Notifications