Latest Updates
-
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்..
ஆண்களே! தலையில் சொட்டை விழுற மாதிரி இருக்கா? அப்ப நைட் டைம்-ல இந்த ஹேர் மாஸ்க்கை போடுங்க..
Hair Care Tips In Tamil: தலைமுடி உதிர்வால் பெண்களைப் போலவே ஆண்களும் நிறைய அவதிப்படுகிறார்கள். இயற்கையாக ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தலைமுடி உதிரும். ஆனால் அந்த அளவை விட அதிகமாக தலைமுடி உதிர்கிறது என்றால் உடனே தலைமுடிக்கு பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும் என்று அர்த்தம்.
பொதுவாக பெண்கள் தங்கள் அழகைப் பராமரிக்க தினமும் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவார்கள். ஆண்களோ அப்படி இல்லை. ஒருவரது அழகை மேம்படுத்தி காட்டுவதில் தலைமுடியும் முக்கிய பங்கை வகிக்கின்றன.

ஆண்கள் தலைமுடி அதிகம் உதிர்வதை சந்தித்தால், தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அந்த தலைமுடி உதிர்வால் வழுக்கைத் தலையைப் பெற வேண்டியிருக்கும். பின் வயதான தோற்றத்தைப் பெறக்கூடும்.
கீழே ஆண்களின் தலைமுடி உதிர்வைத் தடுக்கும் மற்றும் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரித்து, அடர்த்தியாக வளரத் தூண்டும் சில இரவு நேர ஹேர் மாஸ்க்குகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஹேர் மாஸ்க்குகளை போட தனியாக நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. இரவு தூங்கும் முன் தலையில் தடவி, மறுநாள் காலையில் அலசினாலே போதும்.
1. கற்றாழை, ஆலிவ் ஆயில் மற்றும் முட்டை மஞ்சள் கரு
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு முதலில் ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 4 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலை கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த கலவையை தலைமுடியில் தடவி, ஷவர் கேப்பை தலையில் அணிந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
2. வெங்காய சாறு
* வெங்காயத்தில் உள்ள சல்பர் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.
* அதற்கு சிறிது வெங்காயத்தை எடுத்து அரைத்து, அதை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, இரவு தூங்கும் முன் ஸ்கால்ப்பில் அதை ஸ்ப்ரே செய்ய வேண்டும்.
* பின்பு ஷவர் கேப்பை தலையில் அணிந்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைமுடியை மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.
3. பால் மற்றும் தேன்
* காய்ச்சாத பச்சை பால் தலைமுடியை மென்மையாக்கும். தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளன.
* அதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அதில் 1/2 கப் பாலை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை இரவு தூங்கும் முன் தலையில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு ஒருமுறை பின்பற்றினால், நல்ல பலனைப் பெறலாம்.
4. க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை சாறு
* எலுமிச்சை தலைமுடியின் தரத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்கும். அதேப் போல் க்ரீன் டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
* அதற்கு ஒரு பௌலில் 5 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீயுடன் 4-5 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
5. வெந்தயம் மற்றும் தயிர்
* பழங்காலம் முதலாக தலைமுடி உதிர்வை தடுக்க வெந்தயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் வெந்தயத்தில் உள்ள பண்புகள் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்களை கிடைக்கச் செய்து, முடியை வேகமாக வளரச் செய்கிறது.
* அதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் வெந்தய பொடி மற்றும் 2-3 ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை இரவு தூங்கும் முன் ஸ்கால்ப்பில் படும்படி தடவி, ஷவர் கேப்பை அணிந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக மறுநாள் காலையில் தலைமுடியை அலச வேண்டும்.
6. தேங்காய் எண்ணெய்
* தேங்காய் எண்ணெய் அனைவரது வீட்டிலும் காணப்படும் ஒரு பொதுவான பொருள். இந்த தேங்காய் எண்ணெய் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதில் சிறந்ததாக கருதப்படுகிறது.
* தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், தலைமுடி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கிருமிகளை அழித்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
* அதற்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி, ஷவர் கேப் அணிந்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைமுடியை அலச வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகள் அனைத்துமே தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். ஆனால் இயற்கை வழிகளை மேற்கொள்ளும் போது பொறுமை மிகவும் அவசியம். பொறுமையுடன் இருந்தால், நிச்சயம் நல்ல பலனைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications











