Latest Updates
-
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும்
தலைமுடி கருகருன்னு அடர்த்தியா வளரணுமா? அப்ப இந்த ஹேர் ஆயிலை வீட்ல தயாரிச்சு யூஸ் பண்ணுங்க...
Hair Care Tips In Tamil: தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல், ஆரோக்கியமற்ற உணவுகள் போன்றவற்றால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. ஒருவரது தலைமுடி நன்கு வலிமையாக ஆரோக்கியமாக இருக்கிறது என்றால், உடலுக்கு போதுமான வைட்டமின்களும், ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன என்று அர்த்தம்.
ஆனால் காலநிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது, நிறைய பேர் தலைமுடி உதிர்வதை சந்திப்பார்கள். உங்களுக்கும் அப்படி தலைமுடி உதிருமா? அப்படி தலைமுடி உதிர்வதைப் பார்க்கும் போது, எங்கு அடர்த்தி குறைந்து எலிவால் போன்று மாறிவிடுமோ அல்லது வழுக்கை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் உங்கள் மனதில் எழுகிறதா? அப்படியானால் இனிமேல் அந்த கவலை கொள்ள வேண்டாம்.

ஏனெனில் எப்பேற்பட்ட காலநிலையிலும் தலைமுடி உதிராமல் வலிமையாகவும் அடர்த்தியாகவும் இருக்க ஒரு அற்புதமான நேச்சுரல் எண்ணெயை வீட்டில் தயாரித்துப் பயன்படுத்துங்கள். இந்த எண்ணெயானது தலைமுடியை அடர்த்தியாக வளரத் தூண்டுவதோடு, நன்கு கருகருவென்று வளரச் செய்யும். இப்போது அந்த நேச்சுரல் ஹேர் ஆயிலை எப்படி தயாரிப்பது என்பதைக் காண்போம்.
கடுகு எண்ணெய்
இந்த நேச்சுரல் ஹேர் ஆயிலுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுவது கடுகு எண்ணெய் தான். ஏனெனில் கடுகு எண்ணெயில் தலைமுடியை வலிமையாக வைத்துக் கொள்ள தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகளவில் உள்ளன. எனவே இந்த எண்ணெயை பயன்படுத்தும் போது, தலைமுடி உதிர்வது தடுக்கப்படும் மற்றும் தலைமுடியின் வளர்ச்சியும் தூண்டப்படும்.
நேச்சுரல் ஹேர் ஆயிலுக்கு தேவையான பொருட்கள்:
* வெற்றிலை - 1
* கருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
* வெந்தயம் - 1 ஸ்பூன்
* கடுகு எண்ணெய் - தேவையான அளவு
தயாரிக்கும் முறை:
* முதலில் ஒரு பேனில் கடுகு எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் அதில் ஒரு வெற்றிலையை கையால் பிய்த்து போட வேண்டும்.
* பின்பு அதில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை சேர்த்து 5 நிமிடங்கள் சூடேற்றி அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பிறகு எண்ணெயை குளிர வைக்க வேண்டும்.
* எண்ணெய் குளிர்ந்ததும், அந்த எண்ணெயை வடிகட்டி, அதை ஒரு பாட்டிலில் ஊற்றி சேகரித்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
* தயாரித்த எண்ணெயை பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி ஸ்கால்ப்பில் தடவ வேண்டும்.
* பின் கைவிரலால் ஸ்கால்ப்பை குறைந்தது 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு சுடுநீரில் நனைத்து பிழிந்த துணியால் தலையை சுற்றி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இதனால் அந்த எண்ணெயில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு, தலைமுடியின் வேர்கள் வலிமையாகும்.
* பின் மைல்டு ஷாம்பு யன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு ஒருமுறை இந்த எண்ணெயைப் பயன்படுத்தும் போது, மயிர்கால்கள் வலிமையாகி, முடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, தலைமுடியும் நன்கு கருகருவென்று இருக்கும்.



Click it and Unblock the Notifications