Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
உங்க சுருட்டை முடி பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த ஹேர் மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. சாப்ட்டாயிடும்..
Hair Care Tips In Tamil: உங்களுக்கு இருப்பது சுருட்டை முடியா? தலையில் கையை வைத்தாலே தேங்காய் நார் போன்று கரடுமுரடாக உள்ளதா? மேலும் எப்போது தலையில் கையை வைத்தாலும், முடி சிக்குடன் உள்ளதா? அப்படியானால் உங்கள் தலைமுடிக்கு உடனே பராமரிப்பு கொடுக்க வேண்டும்.
சொல்லப்போனால் சாதாரண முடியைக் கொண்டவர்களை விட சுருட்டை முடி உள்ளவர்களின் முடி தான் அதிகம் சேதமடையும் மற்றும் அதிகம் வறண்டு போகும். இதனால் சுருட்டை முடியை கையாள்வது என்பது சற்று சவாலானது. ஆனால் சுருட்டை முடியையும் மென்மையாக வைத்துக் கொள்ள முடியும். அதற்கு சுருட்டை முடிக்கு ஏற்றவாறு ஹேர் மாஸ்க்குகளை போட வேண்டும்.

அதுவும் இயற்கை பொருட்களைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் பட்டுப்போன்று மென்மையாகவும் இருக்கும். கீழே சுருட்டை முடி உள்ளவர்களுக்கான சில நேச்சுரல் ஹேர் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அடிக்கடி பயன்படுத்தி வந்தால், சுருட்டை முடியையும் சிக்கு இல்லாமல் மென்மையாக வைத்துக் கொள்ள முடியும்.
1. தேங்காய் பால் மற்றும் தேன் மாஸ்க்
சுருட்டை முடியைக் கொண்டிவர்கள் ஆழமாக மயிர்கால்களுக்கு ஈரப்பதமூட்ட வேண்டும். அதற்கு தேங்காய் பால் மற்றும் தேன் மாஸ்க் சிறந்ததாக இருக்கும். இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் தேங்காய் பாலை எடுத்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை மயிர்கால்களில் படும்படி தடவி, முடியின் முனைப்பகுதி வரை தடவி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, தலைமுடி அதிகம் வறண்டு போவதைத் தடுக்கலாம்.
2. வாழைப்பழம் மற்றும் அவகேடோ மாஸ்க்
சுருட்டை முடி அதிகம் வறண்டு நார் போன்று இருந்தால், வாழைப்பழம் மற்றும் அவகேடோ கொண்டு ஹேர் மாஸ்க் போடுங்கள். இந்த மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த 1 வாழைப்பழத்தை எடுத்து, அத்துடன் சிறிது அவகேடோவை சேர்த்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் சில துளிகள் ஆலிவ் ஆயிலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
3. முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் மாஸ்க்
சுருட்டை முடியானது பொலிவிழந்து மற்றும் புத்துணர்ச்சியிழந்து வறண்டு உள்ளதா? அப்படியானால் முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் மாஸ்க் நல்ல பலனைத் தரும். அதற்கு ஒரு பௌலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் சில துளிகள் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடியில் தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
4. தயிர் மற்றும் தேன் மாஸ்க்
சுருட்டை முடி உள்ளவர்களின் முடியின் முனைப்பகுதி அதிகம் சேதமடைந்து, பிளவுபட்டிருக்கும். இந்நிலையில் 5 டேபிள் ஸ்பூன் தயிரை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் சில துளிகள் தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். இதனால் முடி ஈரப்பதத்துடன் இருப்பதோடு, முடியின் ஏற்பட்டுள்ள சேதமும் சரியாகும்.
5. கற்றாழை மற்றும் தயிர் மாஸ்க்
சுருட்டை முடியில் அதிக வறட்சியை சந்தித்தால், கற்றாழை மற்றும் தயிர் மாஸ்க்கை போட நல்ல பலன் கிடைக்கும். அதற்கு ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை ஈரப்பதமான தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நுரால் அலச வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், முடியில் உள்ள சுருட்டை அப்படியே அழகாக இருப்பதோடு, முடியும் மென்மையாக இருக்கும்.
6. பப்பாளி மற்றும் தேங்காய் எண்ணெய் மாஸ்க்
சுருட்டை முடியில் உள்ள சுருட்டை மென்மையாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமானால், பப்பாளி ஹேர் பேக் போடுங்கள். அதற்கு சிறிது நன்கு கனிந்த பப்பாளியை எடுத்து, அத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஈரப்பதமான தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலச வேண்டும்.
7. தேங்காய் எண்ணெய் மற்றும் பட்டை ஹேர் மாஸ்க்
இந்த தேங்காய் எண்ணெய் மற்றும் பட்டை ஹேர் மாஸ்க் மயிர்கால்களை ஆழமாக ஈரப்பதமூட்டுவதோடு, நல்ல ஊட்டமளிக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை பட்டை தூளை சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
முட்டை, தேன், ஆப்பிள் சீடர் வினிகர் கலந்த ஹேர் மாஸ்க் வறண்ட தலைமுடியை சரிசெய்ய பெரிதும் உதவுகிறது. அதுவும் இந்த மூன்றையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து கலந்து, தலைமுடியில் தடவி ஊற வைத்து அலசினால், தலைமுடி நன்கு ஈரப்பதத்துடனும், ஊட்டச்சத்துடனும் இருக்கும்.
ஆர்கான் எண்ணெயில் லினோலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் பாலிபீனால்கள் இருப்பதால், இவை தலைமுடியின் சுருளை அழகாக பராமரிக்க உதவும். மேலும் இந்த எண்ணெய் தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்து அளிக்கும் மற்றும் சுருட்டை முடியை நன்கு வலுவாகவும், மென்மையாகவும், பிசுபிசுப்பில்லாமலும் வைத்துக் கொள்ள உதவும்.
சுருட்டை முடி உள்ளவர்கள், அந்த முடியை மென்மையாகவும், அழகாகவும் பராமரிக்க பின்வரும் எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். அவையாவன:
* தேங்காய் எண்ணெய்
* அவகேடோ எண்ணெய்
* ஆலிவ் எண்ணெய்
* அர்கர் எண்ணெய்
* ஜொஜோபா எண்ணெய்



Click it and Unblock the Notifications
