Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
உங்க தலைமுடி பலவீனமா இருக்கா? அப்படின்னா இந்த ஆயுர்வேத பொடியை அடிக்கடி யூஸ் பண்ணுங்க..
Hair Care Tips In Tamil: இன்று உடல் பருமனுக்கு அடுத்தப்படியாக நிறைய பேர் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தலைமுடி உதிர்வது இயற்கையானது தான்.
ஆனால் தற்போதைய அவசரமான மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களாலும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும், வலிமைக்கும் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதன் விளைவாக தலைமுடி அதிகமாக உதிர்கிறது.

சொல்லப்போனால், ஒருமுறை தலையில் கை வைத்தாலே, கொத்தாக தலைமுடி உதிர்கிறது. அந்த அளவில் தலைமுடி பலவீனமாக உள்ளது. இப்படி பலவீனமாக இருக்கும் தலைமுடியை வலுவாக்க பல்வேறு எண்ணெய்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அது தற்காலிக தீர்வை அளிக்குமே தவிர, நிரந்தர தீர்வை அளிக்காது. தலைமுடி எப்போதுமே வலிமையாகவும், உதிராமலும் இருக்க பல்வேறு இயற்கை எண்ணெய்கள் உள்ளன.
இருப்பினும் ஆயுர்வேதத்தில் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும், முடி உதிர்வைத் தடுக்கும் பல்வேறு ஆயுர்வேத பொடிகள் உள்ளன. இந்த பொடிகளைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், தலைமுடி வலிமையாவதை முதல் பயன்பாட்டிலேயே அறிய முடியும். இப்போது தலைமுடியை வலிமையாக்க உதவும் சில ஆயுர்வேத பொடிகளையும், அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதையும் காண்போம்.
பிரிங்கராஜ் பவுடர்
பிரிங்கராஜ் 'மூலிகைகளின் அரசன்' என்று அழைக்கப்படுகிறது. அதனால் தான் ஆயுர்வேதத்தில் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பிரிங்கராஜ் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, தலைமுடி உதிர்வதைத் தடுக்கிறது மற்றும் தலைமுடியின் நிறத்தைப் பராமரிக்க உதவுகிறது. ஆகவே தலைமுடி அதிகமாக உதிர்ந்தால், பிரிங்கராஜ் பொடியை தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, தலைமுடியில் தடவி நன்கு ஊற வைத்து, பின் அலச வேண்டும்.
நெல்லி பொடி
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இவை தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும், நரைமுடியைத் தடுக்கும் மற்றும் தலைமுடியை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவும். இந்த நெல்லிக்காய் பொடியை நீருடன் அல்லது தயிருடன் சேர்த்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊற வைத்து அலச வேண்டும்.
வேப்பிலை பொடி
வேப்பிலையில் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இவை ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்கிருமிகளை அழித்து, பொடுகு மற்றும் அரிப்பைத் தடுக்கும். உங்களுக்கு பொடுகுத் தொல்லையால் தலைமுடி உதிர்கிறது என்றால், வேப்பிலை பொடியைக் கொண்டு ஹேர் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தினால், ஸ்கால்ப்பின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, தலைமுடியின் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும்.
செம்பருத்தி பொடி
செம்பருத்தியில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. இவை அனைத்தும் தலைமுடியின் வலிமைக்கு அத்தியாவசியமான சத்துக்களாகும். மேலும் இவை தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். அதற்கு செம்பருத்தி பொடியை, நெல்லி பொடியுடன் சேர்த்து, தயிர் அல்லது நீர் கலந்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும் படி தடவி ஊற வைத்து, குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
வெந்தய பொடி
வெந்தயத்தில் புரோட்டீன் மற்றும் நிக்கோடினிக் அமிலம் போன்ற தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் மயிர்கால்களை வலிமையாக்கும் சத்துக்கள் அதிகமாக உள்ளன. அப்படிப்பட்ட வெந்தயத்தின் பொடியை தயிர் அல்லது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, ஹேர் பேக் போட்டு வந்தால், தலைமுடியின் வலிமை அதிகரித்து, முடி உதிர்வது குறையும்.
சீகைக்காய் பொடி
அக்காலத்தில் தலைக்கு ஷாம்புவிற்கு பதிலாக சீகைக்காய் பொடியைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். சீகைக்காய் ஒரு நேச்சுரல் கிளின்சர் மட்டுமின்றி, தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும், பொடுகைப் போக்கும் மற்றும் தலைமுடிக்கு நல்ல பொலிவை அளிக்கும். எனவே தலைமுடி அதிகமாக உதிர்கிறது என்றால் ஷாம்புவிற்கு பதிலாக, சீகைக்காய் பொடியைப் பயன்படுத்துங்கள்.
துளசி பொடி
துளசி பொடி வெறும் சளியை மட்டும் போக்குவதில்லை, தலைமுடி பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும். எப்படியெனில் துளசியில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், ஸ்கால்ப்பில் பொடுகை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.



Click it and Unblock the Notifications