Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
தேங்காய் எண்ணெயுடன் இத கலந்து வாரம் ஒருமுறை இப்படி யூஸ் பண்ணுங்க.. முடி இருமடங்கு வேகத்தில் வளரும்...
Castor Oil And Coconut Oil For Hair Growth: உலகில் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தினந்தோறும் சந்திக்கும் ஒரு அழகு தொடர்பான பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. இந்த பிரச்சனையால் பெண்களை விட ஆண்கள் அதிகம் அவதிப்படுகிறார்கள். அதுவும் ஆண்களை எடுத்துக் கொண்டால், 30 வயதை எட்டும் முன்பே பல ஆண்கள் வழுக்கைத் தலையை பெற்றுவிடுகிறார்கள்.
இதற்கு தலைமுடிக்கு போதுமான பராமரிப்பு கொடுக்காமல் இருப்பது ஒரு முக்கியமான காரணமாகும். தலைமுடி நன்கு அடர்த்தியாகவும், வலிமையாகவும் வளர வேண்டுமானால், அதற்கு தலைமுடியின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் சரியாக கிடைக்க வேண்டும்.

தலைமுடிக்கு வேண்டிய சத்துக்களைக் கொண்ட ஒரு பொருள் தான் தேங்காய் எண்ணெய். பழங்காலம் முதலாக இன்று வரை தலைமுடிக்கு தினமும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு எண்ணெய் தான் தேங்காய் எண்ணெய். இப்படிப்பட்ட தேங்காய் எண்ணெயுடன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து பயன்படுத்தி வந்தால், தலைமுடி இருமடங்கு வேகத்தில் வளரும் என்று நம் பாட்டிமார்கள் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். அது உண்மை தான்.
இவ்விரு எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து பயன்படுத்தும் போது, தலைமுடி உதிர்வது குறைந்து, முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும். இப்போது இந்த இரண்டு எண்ணெயையும் எப்படி பயன்படுத்துவது மற்றும் அவற்றின் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
விளக்கெண்ணெயால் தலைமுடிக்கு கிடைக்கும் நன்மைகள்
விளக்கெண்ணெய் ஆமணக்கு என்னும் தாவரத்தின் கொட்டையில் இருந்து பெறப்படுகிறது. இந்த எண்ணெய் தலைமுடியை நன்கு ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள், மயிர்கால்களுக்கு நல்ல ஊட்டத்தை அளிக்கின்றன. அதோடு இந்த எண்ணெய் ஸ்கால்ப்பில் ஏற்படும் பூஞ்சை மற்றும் பிற தொற்றுக்களின் அபாயத்தைத் தடுத்து, தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
தேங்காய் எண்ணெயால் தலைமுடிக்கு கிடைக்கும் நன்மைகள்
தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு மட்டுமன்றி, சருமத்திலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இதில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த எண்ணெயை தலைமுடிக்கு தடவுவதன் மூலம், தலைமுடி நல்ல பாதுகாப்புடனும், ஈரப்பதத்துடனும் இருக்கும்மேலும் இது தலைமுடி மென்மையாகவும், சிக்கு ஆகாமலும் தடுக்க உதவுகிறது. முக்கியமாக மற்ற எண்ணெய்களை விட தேங்காய் எண்ணெய் எளிதில் தலைமுடியில் ஊடுருவக்கூடியது மற்றும் முடியில் இருந்து புரோட்டீன் வெளியேறுவதைத் தடுக்கிறது.
முடியின் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெயுடன் விளக்கெண்ணெயை சேர்த்து எப்படி பயன்படுத்துவது?
விளக்கெண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து பயன்படுத்தும் போது, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
* அதற்கு ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை சம அளவில் எடுத்துக் கொண்டு, அதை சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் வேண்டுமானால் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த எண்ணெயை ஸ்கால்ப் மற்றும் முடியில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
நினைவில் கொள்ள வேண்டியவை
தேங்காய் எண்ணெயுடன் விளக்கெண்ணெய் சேர்த்து தலைமுடிக்கு பயன்படுத்தும் போது ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். அவை பின்வருமாறு:
* இந்த எண்ணெய் கலவையை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும். அதுவும் முதன்முதலாக பயன்படுத்தும் போது, முதலில் 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். பின் மெதுவாக நேரத்தை அதிகரிக்க வேண்டும்.
* இந்த எண்ணெயுடன் ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தும் போது, முடியின் வளர்ச்சி இன்னும் சிறப்பாக இருக்கும்.
* விளக்கெண்ணெய் இருப்பதால், இந்த எண்ணெயை மிகவும் நீண்ட நேரம் தலையில் ஊற வைக்கக்கூடாது.
* அதேப் போல் மிகவும் சூடான நிலையில், இந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் பயன்படுத்தக்கூடாது.



Click it and Unblock the Notifications
