Latest Updates
-
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்!
Hair Care: பெண்களே! உங்களுக்கு கொத்து கொத்தா முடி கொட்டுதா? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்...!
Hair Care Tips: பெண்களுக்கு முடியின் மீது எப்போதும் தனிப்பிரியம் உண்டு. நீளமான அடர்த்தியாக வளர்ந்து இடுப்பிற்கு கீழ் முடி வைத்திருக்கும் பெண்களை ஏக்கமாக பார்ப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். சிலருக்கு விதவிதமாக முடி வெட்டி கொள்ள ஆசை இருக்கும், ஆனால் முடியின் அடர்த்தி குறைவாக இருக்கும்.
இதற்கு காரணம் மோசமான காலநிலை, மன அழுத்தம், வேலைப்பளுவின் காரணமாக முடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமை மற்றும் மோசமான உணவு பழக்கங்களாக இருக்கலாம். நம் உணவில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம். அந்த ஊட்டச்சத்துக்கள் என்னென்ன, எந்த உணவின் மூலம் நாம் பெற முடியும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நியாசின்
நியாசின் எனப்படும் வைட்டமின் பி3 தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது. அவோகேடா, காளான், பச்சை பட்டாணி, பீன்ஸ், பருப்பு, இஞ்சி, உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், முழு தானியங்கள், கடல் மீன்கள், முட்டை, கோழி, இறைச்சி வகைகள், வாழைப்பழம் மற்றும் சிவப்பு அரிசியில் நிறைந்திருக்கின்றன.
பீட்டா கரோட்டின்
பீட்டா கரோட்டின் முடி அடர்த்தியாக வளர உதவுகிறது. பீட்டா கரோட்டின் வளமான ஆதாரமாக இருப்பது மஞ்சள், ஆரஞ்சு மற்றும் பச்சை இலைக்காய்கறிகள் மற்றும் பழங்கள். இவை கேரட், கீரை, தக்காளி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, ப்ரோக்கோலி, பாகற்காய் மற்றும் கொத்தமல்லியில் அதிக அளவில் உள்ளது. பெரும்பாலும், அடர்ந்த நிறம் கொண்ட பழங்கள் அல்லது காய்கறிகளில் அதிக அளவு பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது.
ஜிங்க் மற்றும் வைட்டமின் ஈ
இது முடி உதிர்வைக் குறைக்கவும், தடுக்கவும் உதவுகிறது. சூரியகாந்தி விதை, பெர்ரீஸ், பாதம், வாழைப்பழம், வால்நட், பீன்ஸ், பருப்பு வகைகள், கீரைகள், மாம்பழம், அவோகேடா மற்றும் பட்டாணியில் நிறைந்துள்ளன.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முடி வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. இது சால்மன், கானாங்கெளுத்தி, சூரை, மற்றும் மத்தி போன்ற மீன் வகைகளிலும், நட்ஸ்கள் மற்றும் விதை வகைகளான ஆளிவிதை, சியா விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்றவற்றிலும், தாவர எண்ணெய்களான ஆளிவிதை எண்ணெய், சோயாபீன் எண்ணெய் மற்றும் கனோலா எண்ணெய் போன்றவற்றிலும் நிறைந்திருக்கின்றன.
இரும்புச்சத்து
இது முடியின் சீரான வளர்ச்சிக்கும், முடி உதிர்வை தடுப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. முருங்கை கீரை, கீரை வகைகள், மீன், இறைச்சி, பட்டாணி, ப்ரோக்கோலி, முட்டைகள், கம்பு, கோதுமை, தர்பூசணி, திராட்சை, பேரிச்சை, அத்திப்பழம், உலர் திராச்சை, மற்றும் பருப்பு வகைகளில் இருக்கிறது.
புரதம்
போதுமான புரதத்தை உணவில் சேர்த்துக் கொள்வது அடர்த்தியான, முழுமையான முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. முடி முதன்மையாக கெரட்டின் எனப்படும் புரதத்தால் ஆனது. உடலில் போதுமான புரதச்சத்து இருக்கும்போது, உரோமக்கால்களில் கெரட்டின் உற்பத்தி சாதாரணமாக நிகழ்கிறது, இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. கோழி, வான்கோழி, மீன், பால் பொருட்கள், முட்டைகள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ் போன்றவற்றில் புரதங்கள் நிறைந்திருக்கின்றன.



Click it and Unblock the Notifications

