Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
Diwali Beauty Tips: தீபாவளிக்கு முன் கருவளையத்தை போக்கணுமா? அப்ப இந்த ஐ-மாஸ்க்கை போடுங்க...
Diwali Beauty Tips In Tamil: ஒருவரது அழகை மேம்படுத்தி காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால் தற்போது நிறைய பேருக்கு கண்களைச் சுற்றி கருவளையங்கள் உள்ளன. இந்த கருவளையங்கள் ஒருவருக்கு பல்வேறு காரணங்களால் வரலாம். அதில் தூக்கமின்மை, மன அழுத்தம், நீரிழப்பு, மரபணுக்கள், வயது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இப்படி அழகை கெடுக்கும் வகையில் இருக்கும் கருவளையங்களை போதுமான ஓய்வு, தூக்கம் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் போக்க முடியும். அதே வேளையில், ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு மாஸ்க் போடுவதன் மூலமும், கருவளையங்களை போக்கலாம்.

அதுவும் தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பண்டிகை காலத்தில் கருவளையங்கள் இருந்தால், அது ஒருவரது தோற்றத்தையே பாழாக்கிவிடும். நீங்கள் கருவளையங்களை போக்க இயற்கை வழிகளை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில நேச்சுரல் ஐ-மாஸ்க்குகளை உடனே போட தொடங்குங்கள்.
1. வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை மாஸ்க்
* இந்த மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் பாதி வெள்ளரிக்காயை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை கண்களுக்கு அடியில் மற்றும் கண்களைச் சுற்றி தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் இரவு பயன்படுத்தி வந்தால், கருவளையங்களை விரைவில் போக்கலாம்.
2. உருளைக்கிழங்கு மற்றும் தேன் மாஸ்க்
* இந்த மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் சிறிய உருளைக்கிழங்கை துருவியோ அல்லது சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
3. க்ரீன் டீ மற்றும் தயிர் மாஸ்க்
* இந்த மாஸ்க்கிற்கு தயாரித்து வைத்த க்ரீன் டீயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
4. மஞ்சள் மற்றும் பால் மாஸ்க்
* இந்த மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை கண்களைச் சுற்றி தடவி, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
5. ரோஸ் வாட்டர் மாஸ்க்
* இந்த மாஸ்க்கிற்கு 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை எடுத்து, அதில் 2 காட்டன் பேடுகளை போட்டு நனைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு கண்களை மூடிக் கொண்டு, கண்களின் மேல் ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேடுகளை வைத்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து பேடுகளை அகற்றிவிட வேண்டும்.
* இந்த மாஸ்க் இருப்பதிலேயே மிகவும் எளிதானது மற்றும் கண்களுக்கு உடனடி நீரேற்றத்தையும், பொலிவையும் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications